April 24, 2019

பரம்பொருள்-பதிவு-6


                       பரம்பொருள்-பதிவு-6

(ஆ) கடவுள் சிலைகளின்
மூலம் பெறப்படும் சக்தி:

“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை மற்றும்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையை
மையமாக வைத்து
கோயிலைச் சுற்றி
அமைக்கப்பட்டுள்ள
அனைத்து கடவுள் சிலைகள்
ஆகியவற்றின் மூலமாக
பெறப்படும் சக்தியானது;
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படுகிறது ; “

“கோயிலுக்குள் உள்ள
பல்வேறு கடவுள்
சிலைகளின் மூலமாக
சக்தியானது பெறப்பட்டு ;
கோயிலுக்குள் செலுத்தப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்பட்டாலும் ;
அடிப்படை சக்தியாகவும் ;
முக்கிய சக்தியாகவும் ;
அனைத்திற்கும் ஆதார
சக்தியாகவும் ; உள்ளது
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை மூலமாக
பெறப்படும் சக்தியாகும் “

“கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலை
அதற்கென்று உள்ள
சில முக்கியமான
முறைகளை வைத்துத்தான்
செய்யப்பட வேண்டும் ;
அவ்வாறு செய்யப்படும்
போது தான்
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையை
மூலமாக வைத்து
சக்தியானது பெறப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
செலுத்தப்பட்டு ;
கோயிலுக்குள் சக்தியானது
உற்பத்தி செய்யப்படும் ; “

“கர்ப்பக் கிரகத்தில்
உள்ள கடவுள் சிலை
அதற்கென்று உள்ள
சில முக்கியமான
முறைகளை வைத்து
செய்யப்படவில்லையெனில்  ;
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையால்
சக்தியை பெறமுடியாது ;
அதன் காரணமாக
கோயிலுக்குள் சக்தியை
செலுத்த முடியாது ;
அதன் காரணமாக
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியாது ;”

“ பல நூற்றாண்டுகளைக்
கடந்த இந்துமதக்
கோயில்களும்
பல ஆயிரம் ஆண்டுகளைக்
கடந்த இந்துமதக்
கோயில்களும் – இந்த
உலகத்தில் கணக்கிலடங்காத
எண்ணிக்கையில் உள்ளன”

“கோயில்கள் எத்தனை
ஆண்டுகள் பழமையானதாக
இருக்கிறதோ
அத்தனை ஆண்டுகள் ;

கோயில்கள் எத்தனை
நூற்றாண்டுகள் பழையானதாக
இருக்கிறதோ
அத்தனை நூற்றாண்டுகள் ;

கோயில்கள் எத்தனை
ஆயிரம் ஆண்டுகள்
பழமையானதாக இருக்கிறதோ
அத்தனை ஆயிரம் ஆண்டுகள் ;

பழமையானது கோயில்களில்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைகள்”

“பல நூற்றாண்டுகளாக
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலைக்கு
அபிஷேகங்கள்,
பூஜைகள் செய்தும்
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உடையாமல்
இருந்தால் மட்டுமே ;
கீறல் ஏதும் விழாமல்
இருந்தால் மட்டுமே ;
கர்ப்பக்கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
சக்தியை பெற்று ;
கோயிலுக்குள் சக்தியை
செலுத்தி ;
கோயிலுக்குள் சக்தியை
உற்பத்தி செய்ய முடியும் ;”

“ கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
பல நூற்றாண்டுகளைக்
கடந்தாலும் ;
பல அபிஷேகங்கள்
பல பூஜைகள் செய்தாலும்
கடவுள் சிலையானது
உடையாமல்
கீறல் விழாமல் இருக்க
வேண்டுமானால் ;
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
மூன்று முக்கியமான
தன்மைகளைத் தன்னுள்
கொண்டதாக இருக்க
வேண்டும் “

ஒன்று :
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உயிருள்ள கல்லினால்
மட்டுமே செதுக்கப்பட்டிருக்க
வேண்டும்

இரண்டு:
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
ஆகமசாஸ்திர முறைப்படி
செதுக்கப் பட்டிருக்க வேண்டும்


மூன்று :
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையானது
உயிரோட்டத்துடன் இருக்க
வேண்டும்

“இந்த முன்று தன்மைகளும்
கர்ப்பக் கிரகத்தில் உள்ள
கடவுள் சிலையில்
இருந்தால் மட்டுமே
கடவுள் சிலையானது
உடைந்து போகாமல் ;
கீறல் விழாமல் இருக்கும்
இல்லையென்றால் ,
சிலையானது உடைந்து
விடும் - அல்லது
கீறல் விழுந்து விடும் ; “

“இந்துமதக் கோயில்களில்
கர்ப்பக்கிரகத்தில்
வைத்து வழிபடுவதற்கு
செதுக்கப்படும் கடவுள்
சிலைக்கு உயிருள்ள
கல்லை எப்படி
தேர்ந்தெடுக்கிறார்கள் ;
எப்படி ஆகமசாஸ்திர
முறைப்படி சிற்பங்களைச்
செதுக்குகிறார்கள் ;
எப்படி சிலைகளை
உயிரோட்டத்துடன்
இருக்கும்படி
அமைக்கிறார்கள் ;
என்று தெரியுமா…………………………?”

--------   இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  23-04-2019
/////////////////////////////////////////////////////