January 27, 2020

பரம்பொருள்-பதிவு-119


              பரம்பொருள்-பதிவு-119

அரவான்  :
“நாட்டை ஆளும்
மன்னரின் மகனும்  ;
உறவு முறையில்
எனக்கு பெரிய
தந்தையுமாகிய
துரியோதனன்
அவர்கள் என்னை
நாடி வந்து
கைகளை ஏந்தி
யாசகமாக
என்னுடைய உயிரை
களப்பலியாகக் கொடு
என்று கேட்கும் போது
நான் எப்படி
கொடுக்காமல்
இருக்க முடியும் ? “

கிருஷ்ணன் :
“யாசகம்
அளிப்பதற்கு முன்
யாசகம் கேட்பவர்
யார் என்பதையும் ;
யாசகமாக
அளிக்கப் போவது
எது என்பதையும் ;
யாசகம் அளிப்பதால்
ஏற்படக்கூடிய
பிரச்சினைகள் எவைகள்
என்பதையும் ;
யோசித்துப்
பார்த்திருந்திருக்க
வேண்டாமா ?”

அரவான்  :
“யாசகம் அளிப்பவர்
இவைகள்
எவற்றையும் பார்க்கக்
கூடாது என்ற விதி
தான் உங்களுக்குத்
தெரியுமே பரந்தாமா ? “

கிருஷ்ணன் :
“சில விதிகளை எல்லா
சந்தர்ப்பங்களிலும்
ஒரே மாதிரியாக
பயன்படுத்த முடியாது  ;
சில விதிகளை
சந்தர்ப்பத்திற்கு
ஏற்றவாறு மாற்றி
பயன்படுத்தித் தான்
ஆக வேண்டும் ;
அப்படி மாற்றி
பயன்படுத்தவில்லை
என்றால் விரும்பத்தகாத
விளைவுகள் தான்
ஏற்படும் ; “

அரவான் :
“பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாகிறேன்
என்று வாக்கு
கொடுத்திருக்கிறேன்  ;
நான் செய்யப்
போகும் இந்த
செயலினால் தான்
விரும்பத்தகாத
விளைவுகள் ஏற்படும்
என்கிறீர்களா பரந்தாமா ! “

கிருஷ்ணன்  :
“ஆமாம் அரவான் !
ஆமாம் “

“துரியோதனனுக்காக
நீ களப்பலி ஆனாய்
என்றால் எத்தகைய
விரும்பத்தாத
விளைவுகள் ஏற்படும்
என்பதை - நீ
யோசித்துப் பார்த்து
இருக்கிறாயா ? “

அரவான்  :
“எத்தகைய
விரும்பத்தகாத
விளைவுகள்
ஏற்படும் என்கிறீர்கள் “

கிருஷ்ணன் :
“துரியோதனனுக்காக நீ
களப்பலியாகி
துரியோதனன்
குருஷேத்திரப் போரில்
வெற்றி பெற்று
விட்டான் என்றால் ….?

“தர்மம் அழிந்து
அதர்மம் தழைத்து
ஓங்கும் !

“இன்பம் அழிந்து
துன்பமே
மேலோங்கி நிற்கும் !

“வருங்காலத்தில்
இந்த உலகத்தில்
நல்லவர்கள்
வாழ்வதற்கு
இடமே இல்லாமல்
போய் விடும் !”

“துரியோதனனுக்காக
அரவான் களப்பலியாகி
துரியோதனன்
வெற்றி பெற்ற
காரணத்தினால் தான்  ;
தாங்கள் அனைவரும்
இத்தகைய துன்ப
நிலைக்கு தள்ளப்பட்டு
அவதிப்பட்டுக்
கொண்டிருக்கிறோம் ;”

“தாங்கள் அடைந்து
இருக்கும் இத்தகைய
ஒரு இழிநிலைக்கு
அரவான் தான் காரணம்.  ;’

“அரவான் மட்டும்
துரியோதனனுக்காக
களப்பலியாகா விட்டால்
தங்களுக்கு இத்தகைய
ஒரு இழிநிலை
ஏற்பட்டு இருக்காது  

“என்று இந்த உலகத்தில்
உள்ள மக்கள்
அனைவரும் உன்னை
வசைபாடக் கூடிய
விரும்பத்தகாத
விளைவுகள்
தான் ஏற்படும் “

அரவான் :
“இந்தகைய
விரும்பத்தாத
விளைவுகள்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால் - நான்
என்ன செய்ய
வேண்டும் என்கிறீர்கள்”

கிருஷ்ணன் :
“களப்பலியாகப் போகும்
உன்னுடைய
உயர்ந்த செயலால்
விரும்பத்தகாத
விளைவுகள்
ஏற்படாமல் இருக்க
வேண்டுமானால்…….?”

"""நீ……………………..?

பாண்டவர்களுக்காக

களப்பலியாக

வேண்டும்"""""

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
-------------27-01-2020
//////////////////////////////////////////