December 16, 2011

போகர் -7000 - சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-2



            போகர் -7000  - சாயா தரிசனம் - பலன்கள் - பதிவு-2

“”பதிவு இரண்டை விரித்துச் சொல்ல
                ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””

சாயா தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

பாடல் - 1
சாயா தரிசனம் தொடர்ந்து செய்து வர கிடைக்கும் நன்மைகளை ,பலன்களை, சக்திகளை போகர்  7000 பாடலில் கீழ்க்கண்டவாறு பட்டியலிட்டு விளக்குகிறார்:

            “”””உறுதியாம் பனிரெண்டு ஆண்டுதானும்
                                 உத்தமனே தரிசனைகள் காண்பாயானால்
                  உறுதியாய் உன்ரூபங் கண்டரூபம்
                                நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து
                 சுருதியுடன் கருவிகர ணாதியோடு
                                சுத்தமுடன் உடலாவி கொண்டுமல்லோ
                 பரிதிவிட்டு உந்தன்நிழல் கூடேநிற்கும்
                                 பாலகனே சாயாவின் வண்மைபாரே””””””
                                                                      --------- போகர் ---7000 -------


“”””உறுதியாம் பனிரெண்டு ஆண்டுதானும்
                      உத்தமனே தரிசனைகள் காண்பாயானால்””””
நான் செய்யும் தவத்தால் கண்டிப்பாக பலன் உண்டு என்று மனதில் நினைத்துக் கொண்டு ,உறுதியாக ,மனது தளராமல் ,தொடர்ச்சியாக ,12 ஆண்டுகள் மன உறுதியுடன் சாயா தரிசனத்தை தொடர்ந்து தரிசனம் செய்து வந்தால் பின் கண்ட நிகழ்வுகள் நமக்கு நடக்கும் என்கிறார்  போகர்.


“””””உறுதியாய் உன்ரூபங் கண்டரூபம்
                         நிட்களங்க மாகவல்லோ பின்தொடர்ந்து”””””””
நாம் கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்கிறோம் .
நம்முடைய உருவத்தைப் பிரதி எடுத்தால் எப்படி இருக்குமோ? அத்தகைய உருவம் போல் அதாவது நிழல் உருவமாக இல்லாமல் நிஜமான உருவமாக நம் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
ஓரு ஆள் ரூபமாய் தன்னுடைய ரூபமாய் தன்னுடனேயே திரியும் .


“”””””சுருதியுடன் கருவிகர ணாதியோடு
                         சுத்தமுடன் உடலாவி கொண்டுமல்லோ””””
உயிருடன் உள்ள ஒரு மனித உடலில் என்னவெல்லாம் இருக்குமோ ?சுருதி கருவி கரணாதியோடு ஆகிய அனைத்தையும் கொண்ட ஒரு உடலாகக் கொண்டு நம் எங்கெல்லாம் செல்கிறோமோ அங்கெல்லாம் நம்முடனே கூடவே உலாவும் .
நாம் படுத்தால் அதுவும் படுக்கும் .
நாம் எழுந்தால் அதுவும் எழுந்திருக்கும்.


“”””””பரிதிவிட்டு உந்தன்நிழல் கூடேநிற்கும்
                        பாலகனே சாயாவின் வண்மைபாரே”””””
பரிதி என்றால் சூரியன் என்று பொருள் .
காலையில் சூரியனுடைய ஒளி நம்முடைய உடலில் பட்டால் நிழல் தெரியும்  .அதைப் போல இரவில் சந்திரனுடைய ஒளி நம்முடைய உடலில் பட்டால் நிழல் ஒளி தெரியும்.
பகலில் சூரியனுடைய ஒளியிலும் ,இரவில் சந்திரனுடைய ஒளியிலும், நம்முடைய நிழல் எப்படி நம்மைப் பின்தொடருமோ? நம்மை விடாமல் நம்மைப் பின்தொடருமோ? நம்மை விட்டுப் பிரியாமல் பின் தொடருமோ?
அதைப் போல சாயா தரிசனம் செய்பவருக்கு நம்முடைய உண்மை அதாவது அசல் உடலுடன் ,நிழல் உருவமாக இல்லாமல் ,நிஜ உருவமும் ,கூடவே வரும் .
ஆகவே சாயா தரிசனம் தொடர்ந்து செய்து அதில் வரும் நன்மைகளை தெரிந்து கொள் என்கிறார் .


பாடல் - 2
சாயா தரிசனத்தை தொடர்ந்து செய்து வர நடைபெறும் மகிமைகளை பின் வரும் பாடல்களில் கூறுகிறார் போகர் :

             “”””வன்மையாஞ் சொரூபநிலைப் பின்தொடர்ந்து
                                   வாகுடனே உந்தனிடம் உலாவும்பாரு
                   திண்மையாய் சயனங்கள் செய்யும்போது
                                   தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போதும்
                  தண்மையாய் உட்கார்ந் திருக்கும்போதும்
                                  தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
                 உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை
                                 உத்தமனே உந்தமக்கு கூறும்பாரே””””
                                                                                ------போகர்-- 7000 -----

“”””வன்மையாஞ் சொரூபநிலைப் பின்தொடர்ந்து
                      வாகுடனே உந்தனிடம் உலாவும்பாரு"""" 
முழுமையான உருவம் கொண்டு அதாவது ஒரு ஆள் ரூபமாய் ,தன்னுடைய ரூபமாய் ,தன்னுடனேயே திரியும் .
நாம் எந்த, எந்த இடங்களுக்கு செல்கிறோமோ ?அந்த ,அந்த இடங்களுக்கு எல்லாம் அந்த உருவம் நம்மைப் பின் தொடரும் .நம்மைச் சுற்றியே உலாவும்.



""""""""திண்மையாய் சயனங்கள் செய்யும்போது""""""
நாம் நிம்மதியாக அமைதியாக ,எந்த கவலையும் இல்லாமல், துhங்கும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே துhங்கும் .



"""""""""""தீர்க்கமுடன் பூமிதனில் நடக்கும்போதும்""""""""
பூமியில் நாம் பல்வேறு இடங்களுக்கு எல்லாம் நடந்து செல்லும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே நடந்து வரும்.



""""""""""தண்மையாய் உட்கார்ந் திருக்கும்போதும்""""""
ஓய்வு எடுப்பதற்காகவும்,  வேலை செய்வதற்காகவும், நாம் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது எல்லாம் அதுவும் நம்முடனேயே உட்கார்ந்து கொண்டு இருக்கும் .
                 


           """"""""""" தகமையுடன் ஒருவருடன் பேசும்போதும்
                 உண்மையாய் உந்தனுக்கு வருங்காலத்தை
                                 உத்தமனே உந்தமக்கு கூறும்பாரே””””      
 ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எல்லாம்
அதாவது நல்ல விஷயங்களை பேசும் பொழுதும்,
 ரகசியங்களை பேசும் பொழுதும் ,
சாதாரண விஷயங்களை பேசும் பொழுதும் ,
அதுவும் நம்முடனேயே கூட இருக்கும் .

நம்முடைய எதிர்காலத்தை ,வருங்காலத்தை அடுத்து என்ன நடக்கும் என்ற ரகசியங்களை நமக்கு வரும் நல்லவை ,கெட்டவைகளை அது முன் கூட்டியே நமக்குச் சொல்லும் .
அதாவது சாயா தரிசனம் செய்பவருக்கு சொல்லும் என்கிறார்  போகர் .


“”“”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                          போற்றினேன் பதிவுஇரண் டுந்தான்முற்றே “”””