January 04, 2020

பரம்பொருள்-பதிவு-110


             பரம்பொருள்-பதிவு-110

(துரியோதனன்
அரவானின்
மாளிகைக்குள்
நுழைகிறான் - தனது
பெரிய தந்தையான
துரியோதனனைக்
கண்ட அரவான்
துரியோதனனை ஓடிச்
சென்று வரவேற்கிறான்)

அரவான் :
"வாருங்கள்
பெரிய தந்தையே  !
வாருங்கள்
தங்கள் வரவால்
என் மாளிகை
பெருமை அடைகிறது ;
தங்கள் பாதம் பட்டு
என்னுடைய இல்லம்
சிறப்பு அடைகிறது ;
தங்களை வரவேற்பதில்
என் மனம் மிக்க
மகிழ்ச்சி அடைகிறது ;
வாருங்கள் பெரிய
தந்தையே வாருங்கள் "

(என்று சொல்லிக்
கொண்டே அரவான்
துரியோதனன்
காலில் சென்று
விழுந்து வணங்குகிறான்)

அரவான் :
"என்னை
ஆசிர்வதியுங்கள்
பெரிய தந்தையே ! "

(அரவானை அள்ளி
மார்போடு அணைத்து  
பிறகு பேசத்
தொடங்குகிறான்
துரியோதனன்)

துரியோதனன் :
"மகனே ! அரவான்
உன்னுடைய வார்த்தைகள்
என்னுடைய மனதை
ஏ‘தோ செய்கிறது ;
உன்னுடைய பணிவைக்
கண்டு என்னுடைய
கண்கள் கலங்குகிறது ;
உன்னுடைய
பெருந்தன்மை என்னை
வியக்க வைக்கிறது ; "

"அனைவரையும் சமமாக
பாவிக்கும் உன்னுடைய
பாசம் என்னை
மலைக்க வைக்கிறது ;
பகைவனாக
நினைக்க வேண்டியவனையும்
வரவேற்கும் உன்னுடைய
பண்பு என்னை
திகைக்க வைக்கிறது ;"

‘"நீ வீரத்தில்
சிறந்தவன் என்று
கேள்விப்பட்டிருக்கிறேன் ;
ஆனால் பண்பிலும்
உயர்ந்தவன் என்பதை
உன்னுடைய
செய்கையின் மூலமே
நிரூபித்து விட்டாய் ;"

"உன்னுடைய உயர்ந்த
அன்பில் கரைந்து
போன நான்
என்ன பேசுவது என்று
தெரியாமல் வார்த்தை
இன்றி தவித்துக்
கொண்டிருக்கிறேன் "

"இந்த பார் உள்ளளவும்
உன்னுடைய புகழ்
என்றும் நிலைத்து நிற்கும்
என்னுடைய ஆசிகள்
உனக்கு என்றும்
உண்டு மகனே அரவான் ! "

அரவான் :
"பெரிய தந்தையே !
நீங்கள் என்னை
பார்க்க வேண்டும் என்று
ஒரு வார்த்தை
சொல்லி இருந்தால்
உங்களைக் காண
நீங்கள் இருக்கும்
இடத்தைத் தேடி
நானே நேரில்
வந்திருப்பேனே ?
இந்த எளியவனைக்
காண தாங்கள்
இவ்வளவு தூரம்
வர வேண்டுமா ?
பெரிய தந்தையே ! "

துரியோதனன் :
"உலகத்தையே
கட்டி காப்பாற்றும்
கடவுளாக
இருந்தாலும் சரி ;
நாட்டை ஆளும்
மன்னவனாக
இருந்தாலும் சரி ;
அவர்களுக்கு ஒன்று
தேவைப்படுகிறது
என்றால்
அதை கொடுப்பவர்
யாராக இருந்தாலும்
அவர் இருக்கும்
இடத்தைத் தேடித்
தான் செல்ல
வேண்டும் என்பது
தானே உலக நியதி ! "

"எனக்கு உன்னிடம்
ஒன்று தேவைப்படுகிறது
அதனால் நானே
உன்னைத் தேடி
உன்னுடைய
இருப்பிடம் தேடி
நேரில் வந்தேன்
அரவான் !"

அரவான் :
"ஒன்றும் இல்லாத
இந்த எளியவனிடம்
அப்படி என்ன
தான் இருக்கிறது
என்று என்னைத்
தேடி வந்தீர்கள்
பெரிய தந்தையே ! "

துரியோதனன் :
"யாரிடமும் இல்லாத ஒன்று ;
அரிதாக இருக்கும் ஒன்று ;
யாருக்கும்
கிடைக்காத ஒன்று ;
கடவுளால்
அருளப்பட்டது என்று  
சொல்லப்படும் ஒன்று ;
சிலரிடம் மட்டுமே
இருக்கும் "

"அந்த ஒன்று
உன்னிடம் இருக்கிறது
என்பதைக் கேள்விப்பட்டேன் ;
அந்த ஒன்றைப் பெற
வேண்டும் என்பதற்காக ;
உன்னுடைய
சம்மதத்தைப் பெற ;
உன்னைக் காண
நானே நேரில்
வந்தேன் அரவான் ! "

அரவான் :
"என்னிடம் என்ன பெற
வேண்டும் என்பதற்காக
என்னுடைய சம்மதத்தைப்
பெற வந்திருக்கிறீர்கள்
என்பதை சொல்லுங்கள்
பெரிய தந்தையே ! "

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 04-01-2020
//////////////////////////////////////////