January 22, 2012

இயேசு கிறிஸ்து-சிறப்புகள்-பதிவு-1




                   இயேசு கிறிஸ்து-சிறப்புகள்-பதிவு-1
      

                         “”பதிவு ஒன்றை விரித்துச் சொல்ல
                                                            ஈசர்  பயின்றெடுத்த கரிமுகன் காப்பாகும்””


மத நிலையில் ஆண்டவனாக ,
ஆன்மீக உணர்வில் மகானாக ,
நாத்திக விளக்கத்தில் சீர்திருத்தவாதியாக ,

பல்வேறு கோணங்களில் ,
பல்வேறு நிலைகளில் ,
பல்வேறு பெயர்களில் ,
அடையாளம் காணப்பட்டு ,

இந்த அவனியின் சுவாசக் காற்றாக ,
உயிர்களில் கலந்திருக்கும் ஆண்டவனாக ,
துயரத்தைத் துடைக்கும் காவலனாக ,
கேட்டதைக் கொடுக்கும் கொடையாளியாக ,
இருக்கும் ,



                                                 இளமை நாதம்
                                                இசைத்த
                                                இன்பத்தின்
                                                இன் சுவையே !

               புதிய ராகம் மீட்ட
              புதிய வழி கண்ட
              புதியதின்
              புது மணமே !

                                              அன்பின்
                                             அரவணைப்பில்
                                             அழிக்க முடியாத
                                             அமுதமே !

              கண்ணின் கருவிழியில்
              கட்டி வைக்கப்பட்ட
              கழட்ட முடியாத
              கவிதையே !

                                         ஒளிச்சுடரில்
                                         ஒளிய முடியாத
                                         ஒளியின்
                                          ஒப்பற்ற ஞாயிறே !

             பாசத்தின்
             பாசறையில்
            பாடப்பட்ட
            பாடலின் புரட்சி வரியே !

                                       சிந்தனையின்
                                      சிரிப்பொலியில்
                                      சிந்தப்பட்ட
                                      சிதையாத வரலாறே !

            பன்னீரில் பகுக்கப்பட்ட
            பண்பின் பற்ற முடியாத
            பல்லவியின்
            பாடாத வார்த்தையே !

                                    காலத்தால்
                                   காட்ட முடியாத
                                   காவியத்தின்
                                   காந்த ஓவியமே !



நீங்கள் புதிய ராகம் மீட்டிய போதெல்லாம்
புயல் கூட புல்லாங்குழல் வாசித்தது ,

நீங்கள் எழுச்சி கீதம் இசைத்த போதெல்லாம்
எரிமலை கூட எழுந்து நாட்டியமாடியது ,

உங்கள் கரம்பட்டு பூகம்பம் கூட
பூச்சுட்டிக் கொண்டது ,

விடியல் கூட
விதியின் ரேகையை
பார்த்துக் கொண்டிருக்கவில்லை -உங்கள் விழி
அசைவுக்குத் தான் காத்துக் கொண்டிருந்தது ,

பாவங்கள் கூட பாவத்தைப் போக்க - உங்கள்
பாதத்தைத் தேடித்தான் அன்று வந்தது ,
இன்றும் வந்து கொண்டிருக்கிறது ,
நாளையும் வரும்,
என்றும் வந்து கொண்டிருக்கும் .



பிரபஞ்சம் தன் இயக்க ஒழுங்கை
நிர்ணயித்துக் கொண்டாலும் ,

காலம் தன் கணக்கை
திருத்தி எழுதிக் கொண்டாலும் ,

இயற்கையின் விளையாட்டுக்களை
மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் ,



மத வெறியர்களின் ஆணவத்தை அடக்கிய வார்த்தை ,
ஜாதி வெறியர்களை சந்தி சிரிக்க வைத்த வார்த்தை ,
இன வெறியர்களின் முகத்திரையை கிழித்த வார்த்தை ,
அறியாமையை விலக்கி ஞான ஒளியை ஏற்றி வைத்த வார்த்தை ,
அறியாமையை வேரோடு அறுக்க முனைந்த வார்த்தை ,
உலகமே மனதில் நினைத்து வணங்கும் வார்த்தை ,
எளிமையை அடையாளம் காட்டிய வார்த்தை,


மடமையை எதிர்த்து புயலாக வீசிய வார்த்தை,
முட்டாள் தனத்தை நொறுக்கிய வார்த்தை,
மூடர்களின் கொட்டத்தை அடக்கிய வார்த்தை,



அ டிமைத் தனத்தை எதிர்த்து குரல் கொடுத்த வார்த்தை ,
ஆ ளும் வர்க்கத்தை அதிர வைத்த வார்த்தை ,
இ யலாதவர்களின் நிலையை உயர்த்திய வார்த்தை,
ஈ கையின் பெருமையை உலகத்திற்கு உணர்த்திய வார்த்தை ,
உ ண்மையை இந்த உலகத்திற்கு விளக்கிய வார்த்தை,
எ ங்கும் நீக்கமற நிறைந்து உயிர்;கள் உச்சரிக்கும் வார்த்தை,
ஏ ழ்மையை நீக்கி சமத்துவத்தை நிலை நாட்டிய வார்த்தை ,
ஐ யம் நீக்கி மனதை தெளிய வைத்த வார்த்தை,
ஒ ற்றுமையின் பெருமையை உலகிற்கு உணர்த்திய வார்த்தை,
ஓ ய்வின்றி தன் கருத்துக்களை விளக்கிய வார்த்தை,
ஓள ஷதத்தை தடவி கலங்கிய உயிர்களை சுத்தப்படுத்திய வார்த்தை,



                             அ றிவின் சாளரத்தில்,
                             ஆ சையின் எழிலகத்தில்,
                             இ ளமையின் பிருந்தாவனத்தில்,
                             ஈ கையின் இருப்பிடத்தில்,
                             உ வகையின் உயிரோட்டத்தில்,
                             ஊ ழ்வினையின் உத்தரவில்,
                             எ ளிமையின் ஏகாந்தத்தில்,
                             ஏ ற்றத்தின் உருவாக்கத்தில்,
                              ஐ யத்தின் சாட்சியத்தில்,
                             ஒ ற்றுமையின் நினைவகத்தில்,
                             ஓ சையின் உருவாக்கத்தில்,
                             ஓள ஷதம் புரட்சியில் - உதிக்கும்
                          அஃதே வெற்றி

என்பதை உணர்த்திய வார்த்தை ,



வார்த்தைகளால் எழுத முடியாத வார்த்தை,
சொற்களால் சொல்ல முடியாத வார்த்தை ,
உவமைகளால் விளக்க முடியாத வார்த்தை,
தெய்வீகத்தில் ஒப்புமை காட்ட முடியாத வார்த்தை,


அந்த வார்த்தை தான் “”””””இயேசு கிறிஸ்து”””””””



இந்த அவனி பயனுற அவர்  விட்டுச் சென்ற ,
போதனைகளின் விளக்கங்களையும்,

மானுடம் உயர்வு பெற அவர் திறந்து வைத்து விட்டுச் சென்ற
அறிவின் சாளரங்களையும்,

உவமைகளில் ஒளித்து வைத்து விட்டுச் சென்ற
சூட்சும ரகசியங்களையும்,

அறியப் போகிறோம்,
அறிவு விளக்கம் பெறப் போகிறோம்.
தெளிவு அடையப் போகிறோம்,

தொடர்ந்து படிப்போம்
மனது நிறைவு பெறுவோம்
                                               

                                                                --------கவிதைகள்--------
                                                  ------பாலகங்காதரன்-----



                       “”போதித்த குருவின்பாதம் தெண்டனிட்டுப்
                                                       போற்றினேன் பதிவுஒன் றுந்தான்முற்றே “”