January 25, 2019

திருக்குறள்-பதிவு-88


                     திருக்குறள்-பதிவு-88

“ சார்போன் (Sorbonne)
பல்கலைக் கழகத்தில்
மாணவர்கள் மத்தியில்
ஜியார்டானோ புருனோ
பேசிய பேச்சுக்களை
ஆராய்ந்த ரோம் நகரத்தின்
விசாரணைக்குழு ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
மதநம்பிக்கைகளுக்கு ,
எதிரான கருத்துக்கள்
கொண்ட வார்த்தைகளை
ஜியார்டானோ புருனோ
பேசினாரா ? என்று
ஆராய்ந்து பார்த்ததில்
ஜியார்டானோ
புருனோவிற்கு எதிராக
எந்தவிதமான வலுவான
ஆதாரங்களும் கிடைக்காத
காரணத்தினால்………….!
இரண்டாம் கட்ட
விசாரணைக்கு உத்தரவிட்டது  

“ முதல் கட்ட
விசாரணையின் முடிவில்
ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
நிரூபிக்கப்பட்டு
தண்டிக்கப்படுவாரா…..?
(அல்லது)
குற்றமற்றவர் என்று
நிரூபிக்கப்பட்டு விடுதலை
செய்யப்படுவாரா……..?
என்று உலகமே பார்த்துக்
கொண்டிருந்த முதல்
கட்ட விசாரணையில்
எந்தவிதமான முடிவுகளும்
எட்டப்படாத காரணத்தினால்
இரண்டாம் கட்ட
விசாரணையை உன்னிப்பாக
இந்த உலகம்
கவனித்துக் கொண்டிருந்தது “

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
சிறையில் தொடர்ந்து
சித்திரவதை அளிக்கப்பட்ட
காரணத்தினாலும் ;
பல நாட்கள் சாப்பிடாத
காரணத்தினாலும் ;
பல நாட்கள் தூங்காமல்
இருந்த காரணத்தினாலும் ;
ஜியார்டானோ புருனோவின்
உடல் தளர்ந்து நடக்க
முடியாமல் இருந்தார் ;
அதனால் அவரை
கைத்தாங்கலாக பிடித்து
நடக்க வைத்து அழைத்து
வந்து ஜியார்டானோ
புருனோவை நாற்காலியில்
அமர வைத்தனர் ;

“ நாற்காலியில் அமர்ந்து
இருந்த ஜியார்டானோ
புருனோ நாற்காலியில்
சிறிது நேரம் கூட
தொடர்ந்து உட்கார
முடியாத காரணத்தினால்
தலை சாய்ந்து கண்களை
மூடிக் கொண்டு அமர்ந்து
கொண்டு இருந்தார் “

“ரோம் நகரத்தில்
நடைபெற்ற முதல் கட்ட
விசாரணையின் போது
ஒரு தலைபட்சமாகவே
கேள்விகள் கேட்கப்பட்டன :
ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
கருதியே கேள்விகள்
கேட்கப்பட்டன :
ஏற்கனவே தயார்
செய்யப்பட்ட கேள்விகள் ;
ஜியார்டானோ புருனோவை
குற்றவாளியாக்குவதற்கு
என்றே கேட்கப்பட்ட
சாமர்த்தியமான கேள்விகள் ;
ஜியார்டானோ புருனோவின்
வாயிலிருந்து வரும்
வார்த்தைகளை வைத்து
அவரை குற்றவாளியாக்க
வேண்டும் என்ற நினைப்பில்
கேட்கப்பட்ட கேள்விகள் :
ஜியார்டானோ புருனோவை
பதில் சொல்ல விடாமால்
தொடர்ந்து கேட்கப்பட்ட
கேள்விகள்; - என்று
ஒரு தலைப்பட்சமாகவே
முதல் கட்ட விசாரணை
நடந்து முடிந்து விட்ட
காரணத்தினால்
இரண்டாம் கட்ட
விசாரணையில் ஜியார்டானோ
புருனோ பெரும்பாலான
கேள்விகளுக்கு பதில்கள்
எதுவும் சொல்லவில்லை ; “

“ பெரும்பான கேள்விகளுக்கு
ஜியார்டானோ புருனோ
பதில் சொல்லாமல்
தவிர்த்தார்
விசாரணைக்குழு சில
கேள்விகளைக் கேட்டு விட்டு
அதற்கு அவர்களே தவறான
பதில் சொன்ன போது
அதனை மறுத்து
ஜியார்டானோ
புருனோ சரியான
பதிலை சொன்னார் “

“ சில நேரங்களில்
இரண்டாம் கட்ட
விசாரணையில்
கார்டினல் சார்டோரியும்
(Cardinal Sartori)
ஜியார்டானோ புருனோவும்
கடுமையான வார்த்தைகளால்
நேருக்கு நேராக மோதிக்
கொண்ட காட்சியானது
போர்க்களத்தில் இரண்டு
அரசர்கள் நேருக்கு நேராக
ஆக்ரோஷமாக மோதிக்
கொண்டது போல் இருந்தது “

“ பல்வேறு விதமான
வார்த்தைகளைப் பயன்படுத்தி
கேள்விக் கணைகளால்
ஜியார்டானோ
புருனோவை வீழ்த்த
பெல்லரமினோ(Belaramino)
முயற்சி செய்த போதெல்லாம்
ஜியார்டானோ புருனோ
தனக்கே உரிய பாணியில்
வார்த்தைகளால்
பதிலடி கொடுத்ததால்
பெல்லரமினோ(Belaramino)
பல நேரங்களில்
செய்வது அறியாமல்
தடுமாறித்தான் போனார் “

“விசாரணைக் குழுவில்
உள்ள அதிகாரிகள்
கேட்ட கேள்விகளுக்கு
ஜியார்டானோ புருனோ
அளித்த வித்தியாசமான
எளிதாக புரிந்து
கொள்ள முடியாத
பதில்களால் பல
நேரங்களில் விசாரணைக்குழு
அதிகாரிகளுக்கு தலை
சுற்றி மயக்கமே
வந்து விட்டது “

” இத்தகைய பல்வேறு
வியக்கத்தக்க
விஷயங்களைத் தன்னுள்
கொண்ட உலகமே
ஆவலுடன் எதிர்பார்த்து
காத்துக் கொண்டிருந்த
ஜியார்டானோ புருனோவிற்கு
எதிரான ரோம் நகரத்தின்
இரண்டாம் கட்ட
விசாரணை தொடங்கியது “

கார்டினல் சார்டோரி
எழுந்து கேள்விகள்
கேட்கலானார்

Father Bruno…………………….!
Father Bruno…………………….!


---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  25-01-2019
/////////////////////////////////////////////////////////////