November 19, 2019

பரம்பொருள்-பதிவு--87


            பரம்பொருள்-பதிவு-87
                                       
அர்ஜுனன் :
"நாம் விரும்பும்
ஒருவர் நம்மை
காதலிக்க வேண்டும்
என்றால் அவர் மீது
நாம் கொண்ட
காதல் எவ்வளவு
புனிதமானது
என்பதையும் ;
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு
உண்மையானது
என்பதையும் ;
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு ஆழமானது
என்பதையும்; 
அவர் மீது நாம்
கொண்ட காதல்
எவ்வளவு
தெய்வீகமானது  
என்பதையும் ;
முதலில் அவருக்கு
புரிய வைப்பதற்கான
முயற்சிகளை
மேற்கொண்டு
அதற்கேற்றவாறு
செயல்களைச்
செய்ய வேண்டும்;"

"நாம் செய்த
செயல்கள் மூலம்
அவர் மனது
காதலால் பாதிக்கப்பட்டு
நம் மீது அவருக்கு
காதல் பிறக்கும் வரை
நாம் பொறுமையாக
காத்திருக்க வேண்டும் ;
நம்முடைய காதலை
அவர் புரிந்து
கொண்ட பிறகே
நம் மீது அவருக்கு
காதல் பிறக்கும் ;
நம் மீது அவருக்கு
காதல் உண்டான பிறகே
அவர் நம்மை
காதல் செய்வார் ;
அதன் பிறகு தான்
இருவரும் இணைந்து
காதல் செய்ய வேண்டும் ;
இது தான் காதலின்
அடிப்படை இலக்கணம்"

"இது கூட தெரியாமல் ;
காதலின் அடிப்படை
இலக்கணம் கூட
அறியாமல் ;
காதலை
அமைதியான முறையில்
அணுகும் முறை
கூட புரியாமல்  ;
வன்முறையில் இறங்கி
என்னை கடத்தி
வந்து இருக்கிறீர்களே!
இது மட்டும் எந்த
விதத்தில் நியாயம்?"

"உங்களுடைய நியாயப்படி
கடத்தி வருவது
மட்டும் நியாயமா?

"கடத்தி வந்து காதலைச்
சொல்வது மட்டும்
நியாயமா?"

"பிறருடைய மனதை
அறியாமல் கடத்தி
வந்து காதலைச்
சொல்வது மட்டும்
எந்த விதத்தில் 
நியாயம்?"

உலூபி :
"நான் உங்களை
காதலித்ததை குற்றம்
என்கிறீர்களா ? (அல்லது)
தங்களை கடத்தி
வந்து காதலைச்
சொன்னது குற்றம்
என்கிறீர்களா?"

அர்ஜுனன் :
"தாங்கள் என்னைக்
காதலித்ததை குற்றம்
என்று சொல்லவில்லை
ஏனென்றால் அது
தங்களுடைய தனிப்பட்ட
உரிமை - ஆனால் என்னை
கடத்தி வந்து காதலைச்
சொன்னதைத் தான்
நான் குற்றம் என்கிறேன் "

உலூபி :
"பிறருடைய மனதை
அறியாமல் நான்
கடத்தி வந்தது
குற்றம் என்றால்
விசித்ரவீர்யனுக்காக
பீஷ்மர் அம்பா,
அம்பிகா, அம்பாலிகா,
ஆகிய மூவரையும்
கடத்தி வந்தாரே
அவர் யாருடைய
அனுமதி பெற்று
கடத்தி வந்தார்  ?
அந்த மூவரின்
அனுமதியைப் பெற்றா
கடத்தி வந்தார் ?
நானாவது எனக்காக
உங்களை
கடத்தி வந்தேன் - ஆனால்
பீஷ்மர் அவர்களை
இன்னொருவருக்கு மணம்
முடிக்கத் தானே கடத்தி
வந்தார்; - அவர் செய்த
செயல் மட்டும் எந்த
வகையில் நியாயம்;"

அர்ஜுனன் :
(அர்ஜுனன் எதுவும்
பேசாமல்
அமைதியாக
இருந்தான்)

உலூபி :
"ஏன் பேசாமல்
இருக்கிறீர்க்ள்
என் கேள்விக்கு
பதில் சொல்லாமல்
அமைதியாக
இருந்து கொண்டு
அமைதி காக்கிறீர்கள்
வார்த்தை
வரவில்லையா?(அல்லது)
வாயைத் திறக்க
முடியவில்லையா?(அல்லது)
உங்களால் பேச
முடியவில்லையா?(அல்லது)
நடந்த உண்மைக்கு
உங்களால் விளக்கம்
கொடுக்க
முடியவில்லையா.?இல்லை
மறுப்பதற்கு ஏதேனும்
ஆதாரத்தைத் தேடிக்
கொண்டிருக்கிறீர்களா? "

"உங்கள் பீஷ்மர்
அந்த மூவரை
இன்னொருவருக்காக
கடத்தி வந்தது
சரிதான் என்பதற்கான
சரியான காரணத்தை
பீஷ்மரால் சொல்ல
முடியாமல் இருக்கலாம் ;
ஆனால் தங்களை
காதலிக்கும் நான்
தங்களை கடத்தி
வந்ததற்கான சரியான
காரணத்தை என்னால்
சொல்ல முடியும் ;"

அர்ஜுனன் :
"அப்படி என்ன காரணத்தை
சொல்லப் போகிறீர்கள்?"

----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------19-11-2019
//////////////////////////////////////////