April 08, 2022

ஜபம்-பதிவு-732 (சாவேயில்லாத சிகண்டி-66)

 ஜபம்-பதிவு-732

(சாவேயில்லாத

சிகண்டி-66)

 

அம்பை :

பீஷ்மன் தான் தவறு

செய்திருக்கிறார்

என் பக்கம் தான்

நியாயம்

இருக்கிறது

என்று தெரிந்தால்

 

பரசுராமர் :

உன்னைத் திருமணம்

செய்யச் சொல்லி

பீஷ்மருக்கு

கட்டளையிடுகிறேன்

 

உனக்கு

இழந்த வாழ்க்கையை

கொடுக்கச்

சொல்கிறேன்

 

பிரம்மச்சரிய

விரதத்தை விடுத்து

பீஷ்மன் உன்னை

திருமணம் 

செய்து கொள்ள

ஒத்துக் கொண்டால்

பீஷ்மரைக்

கொல்வேன் என்ற

சபதத்தை விடுத்து

நீயும் பீஷ்மனை

திருமணம் செய்து

கொள்ள வேண்டும்

 

அம்பை :

பீஷ்மன்

என்னை திருமணம்

செய்து கொள்ள

மறுத்து விட்டால்

நீங்கள்

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

 

பரசுராமர் :

வேதங்களை

அறிந்தோருக்காக

அன்றி வேறு

யாருக்காகவும்

நான் ஆயுதம்

எடுப்பதில்லை

 

அம்பை :

எல்லா

ஷத்திரியர்களையும்

வென்று

பிராமணர்களின்

மத்தியில்

பிராமணனோ

ஷத்திரியனோ

வைசியனோ

சூத்திரனோ

பிராமணனைப்

பகைப்பவனாயிருந்தால்

போரில்

அவனைக் கொல்வேன்

என்றும்

பயத்தை அடைந்துப்

பாதுகாப்பை

விரும்பி

சரணமடைந்தவர்களை

நான்

உயிருடனிருக்கையில்

எவ்விதத்தாலும்

கைவிட மாட்டேன்

என்றும்

இந்த பூமியில்

உள்ள

ஷத்திரியர்கள்

அனைவரையும்

வெல்லக்கூடிய

தைரியமுடையவனை

நான் கொல்வேன்

என்றும்

நீங்கள்

உறுதிமொழி

ஏற்று இருக்கிறீர்கள்

 

பீஷ்மன்

இத்தகைய

வெற்றியைப்

பெற்றிருக்கிறான்

 

உங்களையே நம்பி

சரணமடைந்த

என்னை நீங்கள்

கைவிட மாட்டீர்கள்

என்று நம்புகிறேன்

 

நீங்கள்

ஏற்றுக் கொண்ட

உறுதிமொழியின்படி

பீஷ்மனை

நீங்கள்

கொல்ல வேண்டும்

 

பரசுராமர் :

ஆமாம்

என்னுடைய

உறுதிமொழி

எனக்கு

நினைவில்

இருக்கிறது

 

இருந்தாலும்

நான் பீஷ்மரை

அழைக்கிறேன்

அவனிடம்

பேசுகிறேன்

யார் பக்கம்

நியாயம்

இருக்கிறது

என்று பார்ப்போம்

 

எந்த ஒன்றையும்

பிறகு முடிவு

செய்வோம்

 

(பீஷ்மரை

அழைத்து

வர ஆளை

அனுப்புகிறார்

பரசுராமர்

 

அம்பை

அமைதியாக

பரசுராமரைப்

பார்த்துக்

கொண்டு

இருக்கிறாள்)

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------08-04-2022

-------வெள்ளிக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-731 (சாவேயில்லாத சிகண்டி-65)

 ஜபம்-பதிவு-731

(சாவேயில்லாத

சிகண்டி-65)

 

பெண்ணின்

வாழ்க்கை அழிவதற்கு

காரணமாக இருப்பவர்கள்

இந்த உலகத்தில்

சாதாரண நிலையில்

இருந்தாலும்

உயர்ந்த நிலையில்

இருந்தாலும்

அவர்கள்

கொல்லப்படுவார்கள்

என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

பீஷ்மன்

கொல்லப்படத் தான்

வேண்டும்

 

வருங்காலத்தில்

எந்த ஒரு

பெண்ணின்

வாழ்க்கையையும்

அழிக்க வேண்டும்

என்று யாரும்

நினைக்காமல்

இருக்க வேண்டும்

என்றால்

பீஷ்மன்

கொல்லப்படத் தான்

வேண்டும்

 

நான் எனக்காக

பீஷ்மனைக் கொல்லச்

சொல்லவில்லை

 

இந்த உலகத்திற்காக

இந்த  உலகத்தில்

வாழும் பெண்களுக்காக

பீஷ்மனைக் கொல்லச்

சொல்கிறேன்

 

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும் என்று

சுயநலத்துடன்

சொல்லவில்லை

பொது நலத்திற்காக

சொல்கிறேன்

 

என்னைப் போல

வேறு எந்த

ஒரு பெண்ணும்

இனி இந்த

உலகத்தில்

பாதிக்கப்படக்கூடாது

என்பதற்காக

பீஷ்மனைக் கொல்லச்

சொல்கிறேன்

 

பீஷ்மர் சாவு

தவறு

செய்பவர்களுக்கு

ஒரு பாடமாக

இருக்க வேண்டும்

இனி யாரும்

தவறு செய்யாமல்

இருக்க பீஷ்மரின்

சாவு ஒரு

உதாரணமாக

இருக்க வேண்டும்

 

பெண்களை

சாதாரண

பொருளாகப்

பார்ப்பவர்களுக்கு

பீஷ்மரின் சாவு

ஒரு பாடமாக

இருக்க வேண்டும்

 

பெண்களை

தவறான

எண்ணத்துடன்

நெருங்க

நினைப்பவர்களுக்கு

பீஷ்மரின் சாவு

ஒரு பாடமாக

இருக்க வேண்டும்

 

பீஷ்மனின் சாவு

வருங்காலத்தில்

ஒரு பெண்ணை

சிறை எடுப்பதற்கு

முன்னர்

யாராக இருந்தாலும்

அவர்களை யோசிக்க

வைக்கும்படி

இருக்க வேண்டும்

 

பீஷ்மர்

கொல்லப்படத்

தான் வேண்டும்

 

என்னை இந்த

நிலைக்கு ஆளாக்கிய

பீஷ்மன்

கொல்லப்படத் தான்

வேண்டும்

 

பீஷ்மனை

உங்களால் தான்

கொல்ல முடியும்

 

நீங்கள் தான்

பீஷ்மனைக் கொல்ல

வேண்டும்

 

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

 

பீஷ்மனைக்

கொல்ல வேண்டும்

 

பரசுராமர் :

அம்பையே

நடந்த நிகழ்ச்சியில்

உன் தரப்பில்

உள்ள

விஷயங்களைச்

சொல்லி விட்டாய்

 

பீஷ்மனை

அழைக்கிறேன்

அவன் தரப்பில்

உள்ள

விஷயங்களைச்

சொல்லட்டும்

இரு தரப்பு

விஷயங்களையும்

கேட்ட பிறகு

யார் பக்கம்

நியாயம் இருக்கிறது

என்பதை

முடிவு செய்வோம்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------08-04-2022

-------வெள்ளிக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-730 (சாவேயில்லாத சிகண்டி-64)

 ஜபம்-பதிவு-730

(சாவேயில்லாத

சிகண்டி-64)

 

பரசுராமர் :

திருமணம்

செய்வதற்காக சிறை

எடுத்திருக்கலாம்

 

அம்பை :

தனக்காக

சிறை எடுக்கவில்லை

வேறு ஒருவருக்காக

சிறை எடுத்தார்

 

பரசுராமர் :

வேறு

ஒருவருக்காகவா

 

அம்பை :

ஆமாம்

பீஷ்மனின் தம்பி

விசித்திர வீர்யனுக்காக

என்னை

சிறை எடுத்தார்

 

பரசுராமர் :

நீங்கள் எதிர்ப்பு

தெரிவிக்கவில்லையா

 

அம்பை :

விசித்திர வீர்யனை

திருமணம் செய்ய

மாட்டேன் என்று

நான் எதிர்ப்பு

தெரிவித்ததால்

என்னை அனுப்பி

விட்டார்

 

பீஷ்மன் என்னை

சிறை எடுத்ததால்

என்னுடைய காதலன்

சால்வன்

என்னை ஏற்க

மறுத்து விட்டார்

 

பீஷ்மனுக்கு

பயந்து என்னுடைய

பெற்றோர்கள்

என்னை

ஏற்றுக் கொள்ளாமல்

என்னை

புறக்கணித்து

விட்டார்கள்

 

நான் யாருமற்ற

அனாதையாக

நிற்பதற்கு

நீங்கள் தான்

காரணம்

நீங்கள் தான்

என்னைத் திருமணம்

செய்து கொள்ள

வேண்டும் என்று

கேட்டதற்கு

அஸ்தினாபுரத்தின்

அவையில்

அனைவரும்

கூடியிருக்கும் போது

என்னை திருமணம்

செய்து கொள்ள

மாட்டேன் என்று

சொல்லி என்னை

அவமானப்படுத்தி

அசிங்கப்படுத்தி

அனுப்பி விட்டான்

அந்த பீஷ்மன்

 

பிரம்மச்சாரியாக

இருக்கும்

பீஷ்மன் என்னை

சிறை எடுத்தது

முதல் தவறு

 

வேறு ஒருவருக்காக

என்னை சிறை

எடுத்தது

இரண்டாவது தவறு

 

சிறை எடுப்பதற்கு

முன்னர் சிறை

எடுக்கப்போகும்

பெண் யாரையாவது

காதலிக்கிறாளா

என்று தெரியாமல்

சிறை எடுத்தது

மூன்றாவது தவறு

 

திருமணம் செய்து

கொள்ள மாட்டேன்

என்று என்னை

அவமானப்படுத்தியது

நான்காவது தவறு

 

என்னுடைய

வாழ்க்கையை

அழித்தது

ஐந்தாவது தவறு

 

மன்னிக்கவே

முடியாத பல

தவறுகளைச் செய்து

என்னுடைய

வாழ்க்கை

அழிவதற்கு காரணமாக

இருந்த பீஷ்மன்

கொல்லப்பட

வேண்டும்

 

பரசுராமர் :

எந்த ஒரு

பிரச்சினைக்கும்

கொல்வது என்பது

தீர்வாகாது

 

அம்பை :

கொல்வது

ஒன்று தான்

தீர்வு  என்றால்

கொன்று தானே 

ஆக வேண்டும்

 

பெண்ணின் வாழ்க்கை

அழிவதற்கு காரணமாக

இருப்பவர்கள்

பணம்

படைத்தவர்களாக

இருந்தாலும் சரி

பதவி

படைத்தவர்களாக

இருந்தாலும் சரி

அதிகாரம்

படைத்தவர்களாக

இருந்தாலும் சரி

யாராக இருந்தாலும் 

அவர்கள்

கொல்லப்படுவார்கள்

என்பதை

இந்த உலகம்

தெரிந்து கொள்ள

வேண்டும் என்றால்

பீஷ்மன்

கொல்லப்படத் தான்

வேண்டும்

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------08-04-2022

-------வெள்ளிக்கிழமை

//////////////////////////////////////////////////

ஜபம்-பதிவு-729 (சாவேயில்லாத சிகண்டி-63)

 ஜபம்-பதிவு-729

(சாவேயில்லாத

சிகண்டி-63)

 

(அம்பை பல்வேறு

கஷ்டங்களைக்

கடந்து சென்று

பரசுராமரைச்

சந்திக்கிறாள்)

 

பரசுராமர் :

என்னைக்

காண்பதற்காக

பல்வேறு

கஷ்டங்களைக்

கடந்து

வந்திருக்கிறாயே

யாரம்மா நீ

உன்னுடைய

பெயர் என்ன

 

அம்பை :

என்னுடைய

பெயர் அம்பை

 

காசி நாட்டு மன்னன்

பீமதேவனின்

மூத்த

மகளாக இருந்தவள்

 

பரசுராமர் :

இருந்தவள் என்றால்

 

அம்பை :

இப்போது இல்லை

என்று பொருள்

 

பரசுராமர் :

ஏன் இல்லை

 

அம்பை :

என்னை புறக்கணித்து

விட்டார்கள்

 

பரசுராமர் :

எதற்காக

புறக்கணித்தார்கள்

 

அம்பை :

பீஷ்மனால்

 

பரசுராமர் :

என்ன பீஷ்மனாலா

 

அம்பை :

ஆமாம்

பீஷ்மனால் தான்

 

என்னுடைய இந்த

அவல நிலைக்கு

காரணமே அந்த

பீஷ்மன் தான்

 

பரசுராமர் :

பீஷ்மன்

தவறு செய்ய

மாட்டான்

 

அம்பை :

பீஷ்மன்

உங்களுடைய சீடன்

என்பதற்காக

அவ்வாறு

சொல்கிறீர்களா

 

இந்த உலகத்தில்

சாதாரண நிலையில்

இருக்கும் மனிதர்கள்

சிறிய தவறு

செய்தாலும்

அதைப்

பெரிதுபடுத்திக்

காட்டும்

இந்த உலகம்,

உயர்ந்த நிலையில்

இருக்கும்

பீஷ்மன்

போன்றவர்கள்

பெரிய தவறு

செய்தாலும்

அந்தத் தவறை

மூடி மறைக்கத்

தான் பார்க்கிறது

 

இந்த உலகத்தில்

சாதாரண

மனிதர்களுக்கு

ஒரு நியாயம்

உயர்ந்த நிலையில்

இருப்பவர்களுக்கு

ஒரு நியாயம்

என்று தான்

இருக்கிறது

 

பரசுராமர் :

என்னைப்

பொறுத்தவரை

தவறு

செய்தவர் யாராக

இருந்தாலும்

அவர் தண்டிக்கப்பட

வேண்டியவர்

 

அது

என்னுடைய

சீடனாக

இருந்தாலும் சரி

யாராக

இருந்தாலும் சரி

 

சொல்

அம்பையே

 

பீஷ்மன் என்ன

தவறு செய்தான்

 

அம்பை :

காசி நாட்டு

சுயம்வர மண்டபத்தில்

திருமணம்

செய்வதற்காக

காத்துக்

கொண்டிருந்த

என்னை

பீஷ்மன்

சிறை எடுத்தார்

 

பரசுராமர் :

திருமணம்

செய்வதற்காக

ஷத்திரியர்கள்

பெண்ணை

சிறை எடுப்பது

தவறில்லையே

 

அம்பை :

பிரம்மச்சாரியாக

இருக்கும் பீஷ்மன்

சிறை எடுத்தது

தான் தவறு

 

--------ஜபம் இன்னும் வரும்

 

-------எழுத்தாளர்

-------K.பாலகங்காதரன்

 

-------08-04-2022

-------வெள்ளிக்கிழமை

//////////////////////////////////////////////////