January 02, 2020

பரம்பொருள்-பதிவு-109


           பரம்பொருள்-பதிவு-109

கிருஷ்ணன் :
" 32 லட்சணங்களும்,
எதிர்ரோமம் ஆகிய
இரண்டு தகுதிகளையும்
கொண்ட நம் மூவரில்
சிறப்பு தகுதி என்று
சொல்லும் வகையில்
என்னிடம் கடவுள்
தன்மை இருக்கிறது ;
உன்னிடம் யாராலும்
வெல்ல முடியாத
வீரம் இருக்கிறது ;
என்னிடம் உள்ள கடவுள்
தன்மையையும்,
உன்னிடம் உள்ள யாராலும்
வெல்ல முடியாத
வீரத் தன்மையையும்
ஒருங்கே பெற்றவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே அர்ஜுனா ! "

"அரவானை அழிக்கக்
கூடியவர்கள் இந்த
உலகத்தில் இதுவரை
பிறக்கவுமில்லை ;
இனி பிறக்கப்
போவதுமில்லை ;
அரவானை அழிப்பதற்கு
புதியதாக ஒருவரை பிறக்க
வைக்கவும் முடியாது ; "

"அதுமட்டுமல்ல அரவானை
அழிக்கக்கூடிய ஆயுதம்
இந்த உலகத்தில்
யாரிடமும் இல்லை ;
இதுவரை அரவானை
அழிக்கக்கூடிய
ஆயுதம் யாராலும்
எங்குமே உற்பத்தி
செய்யப்படவுமில்லை ;
இனியும் யாராலும்
உற்பத்தி செய்யவும்
முடியாது ; "

"அர்ஜுனா !
அரவான் போர்க்களத்தில்
இறங்கி போர் செய்தால்
அவனுக்கு எதிராக
போர் செய்யும்
எதிரிகள் அனைவரையும்
ஒரு தினத்தின் ஒரு
பகற்பொழுதில்
அழித்து விடக்கூடிய
சர்வவல்லமை படைத்தவன்
அரவான் என்பதை
மறந்து விடாதே "

"அரவானை
அழிக்கக்கூடியவர்கள் இந்த
உலகத்தில் இல்லை ;
அப்படி ஒருவரை இந்த
உலகத்தில் பிறக்க
வைக்கவும் முடியாது
என்ற காரணத்திற்காகவும் ;
அரவானை அழிக்கக்கூடிய
ஆயுதம் இந்த
உலகத்தில் இல்லை  
இனியும் அப்படி
ஒரு ஆயுதம் உற்பத்தி
செய்ய முடியாது
என்ற காரணத்திற்காகவும் ;
அரவான் போர்க் களத்தில்
இறங்கி போர் செய்து
ஒரு தினத்தின் ஒரு
பகற்பொழுதில்
எதிரிகள் அனைவரையும்
அழித்து விட்டால்
கர்மவினைகளுக்கேற்ப
ஒவ்வொருவரும்
எந்த காலத்தில் ;
எந்த நேரத்தில் ;
எந்த ஆயுதம் கொண்டு ;
இறக்க வேண்டும் ;
எப்படி இறக்க வேண்டும் ;
யாரால் இறக்க வேண்டும் ;
எந்த முறையில்
இறக்க வேண்டும் ;
என்பதை நியமிக்கப்பட்டபடி
நடைமுறைப்படுத்த
முடியாமல் போய்
விடும் என்ற
காரணத்திற்காகவும் தான் ;
காலம் அரவானை
களப்பலியாக கொடுப்பதற்கு
தேர்ந்தெடுத்து இருக்கிறது.; "

"அது மட்டுமல்ல காலம்
அரவானை தன்னைத் தானே
களப்பலி கொடுக்கும்
படியான செயலைச் செய்ய
வைக்கவும் இருக்கிறது ;
அது மட்டுமல்ல
இங்கே தான் விதி
தன்னுடைய விளையாட்டை
வெற்றிகரமாக நடத்தி வைக்க
திட்டமிட்டு இருக்கிறது ;"

"அரவான் இவ்வளவு
வல்லமை பொருந்தியவன்
மட்டுமல்ல எதிரியாக
இருந்தாலும் அன்பைக்
காட்டக்கூடியவன் அரவான் "

"துரியோதனன் அரவானை
நாடிச்சென்றால்
அரவான் துரியோதனனை
அன்புடன் வரவேற்பான் ;
கருணையுடன் தன்னுடைய
உயிரை களப்பலியாக
கொடுக்க ஒப்புக் கொள்வான் ;
வீரத்துடன் களப்பலியாவான் ;
என்ற காரணத்தினால்
தான் நான் பயப்படுகிறேன் ;"

"இந்த உலகத்தில்
கர்ணன் மட்டும் தான்
கொடையாளியாக
இருக்கிறான் என்று
நினைத்து விடாதே அர்ஜுனா !
கர்ணன் மட்டுமல்ல
அரவானும் கொடையாளி தான்
என்பதை மறந்து விடாதே "

"தன்னை நாடி வந்து
யாசகம் கேட்பவர்
யாராக இருந்தாலும் ;
அவர் எதிரியாகவே
இருந்தாலும் கூட
தன்னிடம் யாசகம் என்று
கேட்டு விட்டால்
யாசகமாக எதைக்
கேட்டாலும் கொடுத்து
விடக்கூடிய பரந்த
மனப்பான்மை
உடையவன் அரவான் ; "

"யாசகமாக எதைக்
கேட்டாலும் கொடுத்த
வாக்கிற்காக உயிரையே
கொடுத்து நிறைவேற்றக்
கூடியவன் அரவான் ;
அப்படிப்பட்ட அரவானிடம்
யாகசமாக உயிரையே
கேட்டால் கொடுக்காமல்
இருப்பானா என்ற
காரணத்திற்காகத் தான்
நான் பயப்படுகிறேன்
அர்ஜுனா ! "

அர்ஜுனன் :
"இப்போது என்ன
செய்வது கிருஷ்ணா?"

கிருஷ்ணன் :
"இப்போது நம்மால்
ஒன்றும் செய்ய
முடியாது அர்ஜுனா !"

"அரவானை சந்திக்க
துரியோதனன்
சென்றிருக்கிறான் ;
அரவான் என்ன
பதில் சொல்லப்
போகிறான் என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம்  
அதற்குப் பிறகு
நாம் என்ன
செய்வது என்பதைப்
பற்றி யோசிப்போம் ?"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 02-01-2020
//////////////////////////////////////////