Showing posts with label உதவிக்கும் தர்மத்திற்கும் வேறுபாடு. Show all posts
Showing posts with label உதவிக்கும் தர்மத்திற்கும் வேறுபாடு. Show all posts

May 13, 2025

உதவிக்கும் தர்மத்திற்கும் வேறுபாடு

 அன்பிற்கினியவர்களே

ஒருவர் என்னிடம்

ஒரு கேள்வியைக் கேட்டார்

 

"உதவிக்கும், தர்மத்திற்கும் என்ன வேறுபாடு"

என்று கேட்டார்

 

தர்மம் தலை காக்கும் என்று சொல்கிறார்கள்

ஆனால் உதவி தலை காக்கும் என்று சொல்வதில்லை

 

"உதவிக்கும், தர்மத்திற்கும் என்ன வேறுபாடு

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்"

என்றார்

 

"நீங்கள்

உதவி செய்பவர்களைப் பார்த்து இருப்பீர்கள்

தர்மம் செய்பவர்களை

நீங்கள் பார்த்தது இல்லை

அதனால் தான் உங்களுக்கு

உதவிக்கும், தர்மத்திற்கும் வேறுபாடு தெரியவில்லை"

என்று சொன்னேன்

 

"நீங்கள் பார்த்து இருக்கிறீர்களா" என்றார்

 

"ஏன் அது நீங்களாக இருக்க முயற்சி செய்யக் கூடாது

தர்மவானாக நீங்கள் ஏன் மாறக்கூடாது"

என்றேன்

 

"முதலில் தர்மத்திற்கு எனக்கு அர்த்தம் சொல்லுங்கள்

மாறலாமா வேண்டாமா என்று பிறகு சொல்கிறேன்"

என்றார்

 

நான் சொன்னேன்

"நாம் வாழ்ந்து கொண்டு

மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று

எண்ணி செய்வதற்குப் பெயர் உதவி"

 

"நாம் அழிந்தாலும் பரவாயில்லை

மற்றவர்களை வாழ வைக்க வேண்டும்

என்று எண்ணி செய்வதற்குப் பெயர் தான் தர்மம்"

 

உதவி கோடிக்கணக்கானவர்கள் செய்கிறார்கள்

ஆனால்

தர்மம் கோடியில் ஒருவர் தான் செய்கிறார்

 

அதனால் தான் நமக்கு

தர்மத்தின் பொருள் தெரியவில்லை

 

கர்ணன் சாகும் தருவாயில்

அவருடைய புண்ணியத்தை எல்லாம்

பிராமணன் வடிவில் வந்த

கிருஷ்ணன் கேட்ட போது

வந்தவர் யார் என்று கூட பார்க்காமல்

தான் அழிந்தாலும் பரவாயில்லை

தன்னை நம்பி வந்த பிராமணன்

வாழ வேண்டும் என்று தன் புண்ணியத்தை

எல்லாம் கொடுத்தான் கர்ணன்

 

தர்மம் செய்தவருக்கு மிகச் சிறந்த

எடுத்துக் காட்டு கர்ணன்

 

அதனால் தான் இன்றும்

நாம் கர்ணனை புகழ்கிறோம்

எதிர்காலத்திலும் கர்ணனை புகழுவோம்

இந்த உலகம் உள்ளரை கர்ணனை புகழுவோம்

 

ஏனென்றால் தர்மத்திற்கு எடுத்துக் காட்டாய்

திகழ்பவன் கர்ணன்

 

உதவி யார் வேண்டுமானாலும் செய்யலாம்

தர்மம் எல்லோராலும் செய்ய முடியாது

கோடியில் ஒருவரால் மட்டுமே

தர்ம்ம் செய்ய முடியும்

 

தர்மம் செய்பவரை நாம் பார்த்ததில்லை

அதனால் தான் நமக்கு

தர்மம் என்றால் என்ன என்றும்

தர்மம் செய்பவர்கள் யார் என்றும் தெரியவில்லை

என்றேன்

 

என்னிடம் கேள்வி கேட்டவர்

எதுவும் சொல்லவில்லை

சென்று விட்டார்

 

நான் ஒன்றை புரிந்து கொண்டேன்

 

அவர் தர்மம் செய்பவர் யார் என்று தேடி சென்று

கொண்டிருக்கிறார் என்று புரிந்து கொண்டேன்

 

இந்த உலகத்தில் உள்ள மக்கள் அனைவரும்

ஒரே தவறைத் தான்

மீண்டும் மீண்டும் செய்கிறார்கள்

 

நாம் விரும்புவது போல் தான் மற்றவர்கள்

இருக்க வேண்டும் என்று அனைவரும்

எண்ணுகிறார்களே தவிர

மற்றவர்கள் விரும்புவது போல் நாம்

இருக்க வேண்டும் என்று யாரும் எண்ணுவதில்லை

 

உண்மை என்பது அவ்வளவு

எளிதில் யாருக்கும் புரியாது

 

மரணத்தோடு மோதிப்பாருங்கள்

உண்மைத்தேடிய பயணத்தில்

உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்

 

நன்றி

 

-----K.பாலகங்காரன்

-----எழுத்தாளர்

   

 -----13-05-2025

------செவ்வாய் கிழமை

///////////////////////////////////