December 15, 2020

UFT LETTER-ARAVAN

 

அன்பிற்கினியவர்களே,

 

இந்த உலகத்தில்

உள்ள அனைத்து

திருநங்கைகளாலும்

கடவுளென

வணங்கப்படும்

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை ;

குருஷேத்திரப்

போரில்

பாண்டவர்கள் வெற்றி

பெறுவதற்கு

முக்கிய காரணமாக

இருந்த

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை ;

இந்த உலகத்தில்

உள்ள மக்களின்

நன்மைக்காக

தன்னையே

பலியாகக் கொடுத்த

அரவானின்

வாழ்க்கை

வரலாற்றை ;

அரவான் களப்பலி

என்ற தலைப்பில்

என்னுடைய

முதல் புத்தகமாக

வெளியிட

இருக்கிறேன்

 

அரவான் களப்பலி

என்ற

புத்தகத்தை

வெளியிடுவதற்கு

முன்னர்

அரவான்

தெய்வத்தை

தரிசிக்க

வேண்டும்

என்ற எண்ணம்

என்னுள்

எழுந்த

காரணத்தினால்

விழுப்புரம்

மாவட்டம்

கூவாகம்

கிராமத்தில்

அமைந்துள்ள

கூத்தாண்டவர்

கோயிலில்

உள்ள அரவான்

என்ற தெய்வத்தை

தரிசனம் செய்து

விட்டு

வந்தேன்

 

நான்

அரவான்

தெய்வத்தை

தரிசிக்க

உதவிகள்

செய்த

என்னுடைய

தோழிகள்

திருநங்கை

பாவனா

மற்றும்

ஷெரின்

அவர்களுக்கு

என்னுடைய

நன்றியினைத்

தெரிவித்துக்

கொள்கிறேன்

 

அரவான்

தெய்வத்தை

தரிசனம்

செய்த பின்பு

தலைமையாசிரியராக

இருக்கும்

என்னுடைய

இரண்டாவது

மூத்த சகோதரர்

திரு.K.தர்மேந்திரராஜ்

அவர்கள்

மற்றும்

அவருடைய

குடும்பத்தை

சந்தித்து

விட்டு வந்தேன்

 

கூவாகம்

மற்றும்

என்னுடைய

அண்ணன்

வீட்டில்

நான் எடுத்த

புகைப் படங்கள்

உங்களுடைய

பார்வைக்கு

வைக்கிறேன்

 

நன்றி

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------15-12-2020

/////////////////////////