February 07, 2019

திருக்குறள்-பதிவு-100


                      திருக்குறள்-பதிவு-100

(ஜியார்டானோ புருனோ
தனக்கு வழங்கப்பட்ட
ஆடையை உடுத்திக்
கொண்டு அரண்மனை
போல் இருக்கும் ஒரு
வீட்டின் மேல் நடந்து
சென்று கொண்டிருந்த
போது அவர் காதில்
கிறிஸ்தவ பாடல்களும்
இசையும் கேட்டதால்
ஜன்னல் வழியாக
பார்த்தார். அந்த சர்ச்சில்
கிறிஸ்தவ பாடல்களை
சிலர் பாடிக் கொண்டிருக்க ;
அந்த பாடலுக்கு ஏற்றபடி
சிலர் நடனமாடிக்
கொண்டு இருந்தனர் ;”

“ அந்த காட்சியினைக்
கண்டு கொண்டிருந்தார்
ஜியார்டானோ புருனோ
அந்த நேரத்தில் அங்கு
வந்து சேர்ந்த
பெல்லரமினோ பேசத்
தொடங்கினார்)

பெல்லரமினோ :
" பாருங்கள் !
நன்றாக பாருங்கள் !
வாழ்க்கை எவ்வளவு
இன்பமயமானது என்பதை
ரசித்துக் கொண்டே
பாருங்கள் "

" கொள்கை ; கோட்பாடு ;
குறிக்கோள் - என்று
அலைந்து திரிந்து
கொண்டிருப்பவர்கள்
வாழ்க்கை இன்பமயமானது
என்பதை அறிந்து
கொள்ள முடியாமலேயே
இறந்து விடுகின்றனர், "

" நீங்களும் ஏன் அந்த
தேவையற்ற குப்பைகளை
சுமந்து கொண்டு திரிகிறீர்கள். "

" வாழ்க்கையின்
இன்பமயமான வாசல்கள்
அனைத்தும் உங்களுக்காக
திறந்தே
வைக்கப்பட்டிருக்கிறது ;
நீங்கள் அந்த கதவுகளை
அடைத்து விட்டு
துன்பத்தின் சுவாசத்தினைத்
தான் சுவாசிப்பேன் என்று
அடம் பிடிக்கிறீர்கள் "

“ யாருடனும் சேராமல்
தனிமையில் இருந்து
கொண்டு உங்களை
நீங்களே ஏன் தனிமைப்
படுத்திக் கொள்கிறீர்கள். “

“ கிறிஸ்தவ மதத்தில்
இருந்து விலகி இருப்பதோடு
மட்டுமல்லாமல் ;
கிறிஸ்தவ மதத்திலிருந்து
வெகு தொலைவுக்கு
பிரிந்து சென்று
கொண்டிருக்கிறீர்கள்.”

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் உயர்ந்த
பதவிகளை அலங்கரிப்பதற்கு
தேவையான ஆழ்ந்த
அறிவும், சிறந்த ஞானமும்
உங்களிடம் இருக்கிறது”

“ அதுமட்டுமல்லாமல்
கார்டினலாக ஆவதற்குரிய
அனைத்து தகுதிகளையும்
நீங்கள் பெற்றுள்ளீர்கள் “

“ அப்படி இருக்கையில்
நீங்கள் ஏன் உங்கள்
வாழ்க்கையை வீணடித்துக்
கொண்டு இருப்பதோடு
மட்டுமல்லாமல்
எதற்காக உங்கள்
உயிரையும் இழப்பதற்கு
தயாராக இருக்கிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ என்னுடைய குணத்தை
அறிந்து கொள்வதற்கும் ;
என்னுடைய மனதில்
என்ன இருக்கிறது
என்பதை தெரிந்து
கொள்வதற்கும்  ;
தாங்கள் என்னை
உங்கள் அறைக்கு
தனிமையில் அழைத்து
பேசிக் கொண்டிருக்கிறீர்கள் ;”

(ஜியார்டானோ
புருனோவின்
வார்த்தைகளைக் கேட்டு
மிரண்டு போன
பெல்லரமினோ
சுதாரித்துக் கொண்டு
மீண்டும் பேசலானார்,)

பெல்லரமினோ :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின்
நடவடிக்கைகளில் மாற்றம்
கொண்டு வர வேண்டும்
என்பதற்காகவும் ;
கிறிஸ்தவ மக்களால்
கடைபிடிக்கப்பட்டு
வரும் மத நம்பிக்கைகளில்
சீர்திருத்தம் கொண்டு வர
வேண்டும் என்பதற்காகவும் ;
நீங்கள் ஐரோப்பா
முழுவதும் சுற்றி
வந்து இருக்கிறீர்கள் ; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கென்று
தனிச்சட்டங்கள்
இருக்கின்றன “

“ பல நூற்றாண்டுகளாக
நடைமுறைப்படுத்தப்பட்டு
காலம் காலமாக மக்களால்
கடைபிடிக்கப்பட்டு வரும்
அந்த சட்டங்களை
மாற்றுவது என்பது
அவ்வளவு எளிதான
காரியமல்ல “

 “ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்ட
திட்டங்களை
நிறைவேற்றுவதற்காகவும் ;
அதன் மத
நம்பிக்கைகைளை
அனைவரும் கடைபிடிக்க
வேண்டும் என்பதற்காகவும் ;
செய்யப்பட்ட செயல்கள்
அனைத்துமே ஒரு
வரலாறு தான் ;
அந்த வரலாற்றை
எப்படி மாற்ற முடியும்………..? “

ஜியார்டானோ புருனோ:
“ வெற்றி பெற்றவர்களால்
எழுதப்படுவது தான்
வரலாறு - அதில்
பொய்கள் தான் நிரம்பி
இருக்கும் - உண்மை
கொஞ்சமும் இருக்காது ;
உண்மையை மாற்ற
முடியாது - ஆனால்
பொய்யை எளிதாக
மாற்றலாம் ; “

“ நீங்கள் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையை
உலகில் உள்ள மக்களை
மிரட்டி அடிமைகளாக
வைத்திருப்பதற்கு- ஒரு
ஆயுதமாகத் தான்
பயன்படுத்துகிறீர்கள் “

“ அடிமையாக இருக்க
மறுத்து சுதந்திரக்
காற்றை சுவாசிக்க
நினைப்பவர்களை நீங்கள்
சித்திரவதை செய்து
கொன்று விடுகிறீர்கள் “

“ சுதந்திரம் கொடுக்கவில்லை
என்றாலும் பரவாயில்லை
ஒருவரையும் அடிமையாக
வைத்திருக்காதீர்கள். “
  
---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  07-02-2019
/////////////////////////////////////////////////////////////