February 24, 2020

பரம்பொருள்-பதிவு-138


            பரம்பொருள்-பதிவு-138

உலூபி :
“களப்பலியை
ஆரம்பித்து
வைத்தது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் இல்லை ”

உலூபி :
“வேறு யார் ? ”

சகாதேவன் :
“அண்ணன்
துரியோதனன்”

உலூபி :
“அவருக்கு
வழி காட்டியது
நீங்கள் தானே ? “

சகாதேவன் :
“ நான் யாருக்கும்
வழி காட்டவில்லை “

உலூபி :
“ வழிகாட்டாமல்
என்ன செய்தீர்கள் ?”

சகாதேவன் :
“அவர் கேட்ட
கேள்விகளுக்கு
பதில் சொன்னேன்”

உலூபி :
“சோதிடத்தை
பயன்படுத்தி
அல்லவா பதில்
சொல்லி
இருக்கிறீர்கள் ? ”

சகாதேவன் :
“ஆமாம்! அவர்
கேட்ட
கேள்விகள்
அப்படி”

உலூபி :
“சோதிட
சாஸ்திரப்படி
ஒருவருடைய
விவரங்களை
அவருடைய
அனுமதி
இல்லாமல்
இன்னொருவருக்கு
சொல்லக்கூடாது
என்பது
உங்களுக்கு
தெரியுமில்லையா?”

சகாதேவன் :
“தெரியும்”

உலூபி : 
அப்படி
தெரிந்திருந்தும்
நீங்கள் எப்படி
அரவானைப்
பற்றிய
விஷயங்களை
வேறொருவரிடம்
சொன்னீர்கள் ? “

சகாதேவன் :
“சோதிட
சாஸ்திரத்தின்படி
என்ன சொல்ல
வேண்டுமோ
அதைத் தான்
சொன்னேன்”

உலூபி :
“ரகசியங்களை
வெளியிடக் கூடாது
என்று சோதிட
சாஸ்திர விதி
சொல்கிறதே!”

சகாதேவன் :
“சோதிட சாஸ்திரம்
சொல்லும்
விதியை மீறி
நான் எந்த ஒரு
ரகசியத்தையும்
வெளியிடவேயில்லையே ? “

உலூபி :
“களப்பலியாகக்
கொடுப்பதற்கு
அரவானையும்,
களப்பலி
கொடுப்பதற்குரிய
நாளையும்
குறித்துக்
கொடுத்தது
நீங்கள் தானே ?
இது சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?”

சகாதேவன் :
“மீறிய செயல்
இல்லை”

உலூபி :
“அது எப்படி
மீறிய செயல்
இல்லாமல் போகும்”

சகாதேவன் :
“ஆமாம் ! மீறிய
செயல்
இல்லை தான் “

உலூபி :
“ஒரு நபரின்
தனிப்பட்ட
விஷயங்களை
சொல்வது
சோதிட
சாஸ்திரத்தை
மீறிய செயல்
இல்லையா ?
அரவானைப்
பற்றிச்
சொன்னது
தவறில்லையா ? “

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 24-02-2020
//////////////////////////////////////////