April 15, 2018

திருநங்கையர் தின வாழ்த்து மடல்-15-04-2018


திருநங்கையர் தின வாழ்த்து மடல்-15-04-2018

உலகில் தோன்றுவதை
எல்லாம் இரண்டு
நிலைகளில் பிரித்துவிடலாம்

ஒன்று  : பிறப்பதினால் தோன்றுவது
இரண்டு : மாற்றமடைவதினால்
          தோன்றுவது

பிறப்பது என்பது புதிதாகத்
தோன்றுவது
மாறுவது என்பது
பிறந்தது வளரும் போது
இடையில் ஏற்படக்கூடிய மாற்றம்

ஆண், பெண் இரண்டு பேரும்
பிறப்பதின் மூலம்
தோன்றுகிறார்கள்
திருநங்கைகள் மட்டும்
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறார்கள்.

ஒரு விதையிலிருந்து
ஒரு செடி தோன்றுகிறது
இது பிறப்பது
பிறந்த செடியில்
பூவானது காயாகிறது,
காயானது கனியாகிறது
காய், கனி ஆகியவை
மாற்றத்தின் மூலம்
தோன்றுகிறது.

ஒரு ஆண் குழந்தை
அல்லது பெண் குழந்தை
தாயின் கருவறையிலிருந்து
வெளியே வந்து பிறக்கிறது
இது பிறப்பதன் மூலம்
தோன்றுவது
பிறந்த பிறகு குழந்தை
குழந்தை பருவம்,
இளமை பருவம்,
வாலிப பருவம்,
முதுமை பருவம் என
பல்வேறு பருவ
நிலைகளைக் கடக்கிறது
இந்த பருவங்கள்
அனைத்தும் பிறந்தபின்
மாற்றத்தின் மூலம்
தோன்றுபவைகள்

அதைப்போல
ஒரு குழந்தை பிறந்தபின்
அது வளர்ந்த நிலையில்
ஏற்படக்கூடிய
மாற்றத்தின் விளைவாக
தோன்றுபவர்கள் திருநங்கைகள்

பிறந்த ஆண் குழந்தைக்கு
நான் ஆண் குழந்தை
பிறந்திருக்கிறேன்
என்று தெரியாது
அதைப்போல பிறந்த பெண்
குழந்தைக்கு நான்
பெண் குழந்தை
பிறந்திருக்கிறேன் என்று
தெரியாது
இவர்களைச் சுற்றி இருக்கும்
சொந்தங்கள் உணர்ந்து
அவர்களுடைய
பிறப்பை கொண்டாடுகிறது

ஆனால் பிறந்து வளர்ந்ததில்
மாற்றம் உண்டாகி
தங்களுக்குள்
திருநங்கை தோன்றுவதை
உணர்ந்த போது
அவர்கள் சொல்கிறார்கள்
ஆனால் இந்த சமுதாயம்
ஏற்றுக் கொள்வதில்லை
அதை கொண்டாடுவதில்லை

பிறந்த போது
ஆண் குழந்தை அல்லது
பெண் குழந்தையால்
சொல்ல முடிவதில்லை
இச்சமுதாயம் பிறப்பினால்
ஏற்படும் தோற்றத்தை
கொண்டாடுகிறது
ஆனால்
பிறந்த பின் உடல் மற்றும்
மனதில் ஏற்படக்கூடிய
மாற்றத்தை திருநங்கைகள்
சொல்லும் போது
இச்சமுதாயம் ஏற்றுக்
கொண்டு மாற்றத்தினால்
ஏற்படக்கூடிய தோற்றத்தை
கொண்டாடுவதில்லை.

பிறப்பினால்  ஏற்படும்
தோற்றத்தையும்,
இடையில் மாற்றத்தினால்
ஏற்படும் தோற்றத்தையும்
எப்பொழுது இச் சமுதாயம்
சமமாக மதிக்க ஆரம்பிக்கிறதோ
அப்பொழுது தான்
சமதர்ம சமுதாயம் மலரும்
திருநங்கைகள் வாழ்வில்
ஒளிவீசும்

திருநங்கையர் தின வாழ்த்துக்கள்-15-04-2018

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்