January 30, 2019

திருக்குறள்-பதிவு-93


                      திருக்குறள்-பதிவு-93

“ சிறை அதிகாரி
கேட்ட கேள்விக்கு
ஜியார்டானோ புருனோ
பதில் எதுவும்
சொல்லாத காரணத்தினால்
சித்திரவதையை
ஆரம்பிக்குமாறு - ஃபாதர்
டிராகாக்லியோலோவைப்
(Father Tragagliolo)
பார்த்து ,
கார்டினல் சார்டோரி
கண்கள் மூலம்
சைகை செய்ய ,
டிராகாக்லியோலோ
சிறை அதிகாரிக்கு
கண்கள் மூலம்
சைகை செய்தார். “

“ ஜியார்டானோ புருனோவின்
கைகளுடன் பிணைக்கப்பட்ட
சிறிய சக்கரம்
கொஞ்சம் கொஞ்சமாக
முறுக்கப்பட்டது ;
ஜியார்டானோ புருனோவின்
கையானது தோள்
பட்டையிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
விலகி சென்று
கொண்டு இருந்தது ; “

சிறை அதிகாரி :
“ நீங்கள் செய்த
குற்றங்கள் அனைத்தையும்
ஒப்புக் கொள்ளுங்கள்
குற்றங்களை ஒப்புக்
கொள்ள மாட்டேன்
என்று சொல்லாதீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

“ சிறிய சக்கரம் மீண்டும்
சுழற்றப்பட்டது ;
சிறிய சக்கரம்
தோள் பட்டையிலிருந்து
கையை கொஞ்சம்
கொஞ்சமாக வெளியே
இழுக்க ஆரம்பித்தது “

சிறை அதிகாரி :
“ நீங்கள் செய்த
குற்றங்களை
நினைத்து வருந்தி
மனந் திரும்புங்கள் ;
பிடிவாதமாக இருக்காதீர்கள் ;
உங்களுடைய பெருமையை
நீங்கள் விட்டு
விடுவீர்களேயானால்
மனந்திரும்புவதற்கு
உரிய வழி
கிடைத்து விடும் “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

“ ஒரு மனிதனால்
எவ்வளவு வலியை
தாங்க முடியுமோ
அந்த நிலையில் வைத்து
அந்த சிறிய சக்கரம்
சுற்றப்பட்டது
இந்த நிலையில் யார்
இருந்தாலும் அவர் கதறி
அழுது விடுவார் ;
வலி தாங்க முடியாமல்
அலறுவார் ;
அத்தகைய ஒரு நிலையில்
ஜியார்டானோ புருனோவிடம்
கேள்விகள் கேட்கப்பட்டன “

சிறை அதிகாரி :
“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையில்
கடைபிடிக்கப்பட்டு வரும்
மத நம்பிக்கைகளில்
எத்தகைய சீர்திருத்தங்களை
கொண்டு வர வேண்டும்
என்று நீங்கள்
நினைக்கிறீர்களோ……..?
அத்தகைய சீர்திருத்தங்களை
எங்களிடம் சொல்லுங்கள்
அந்த சீர்திருத்தங்களை
நடைமுறைப்படுத்துவதற்கு
சாத்தியக்கூறுகள்
ஏதேனும் இருக்கிறதா
என்று நாங்கள்
ஆராய்ந்து பார்க்கிறோம் “

“ நடைமுறைப்படுத்துவதற்கு
சாத்தியக்கூறுகள்
இருக்கும் பட்சத்தில்
அவைகளை
நடைமுறைப்படுத்துவதற்கு
தேவையான
நடவடிக்கைகளை
மேற்கொள்ளுவோம் “

ஜியார்டானோ புருனோ :
(ஜியார்டானோ புருனோ
எதுவும் பேசவில்லை
அமைதியாக இருந்தார்)

“ ஒரு மனிதனால் எந்த
வலி வரை
தாங்கிக் கொள்ள
முடியுமோ – அந்த
நிலையையும் கடந்து
ஒரு மனிதனால் எந்த
வலியை தாங்கிக் கொள்ள
முடியாதோ - அந்த
நிலையை அனுபவிக்கும்
வகையில் - அந்த சிறிய
சக்கரம் சுற்றப்பட்டது “

“ இந்த நிலையில்
யாராலும் பேச முடியாது
மனம் பைத்தியம்
பிடித்த நிலையில்
இருக்கும் ;
என்ன பேசுகிறோம்
என்பதை உணராமல்
பித்து பிடித்தது
போல் உளறுவார்கள் ;
இந்த நிலையில் தான்
எந்த குற்றவாளியும்
தன்னை குற்றவாளி - என்று
ஒத்துக் கொள்வான் ;
குற்றம் செய்யாதவனும்
இந்த வலியை பொறுக்க
மாட்டாமல் குற்றம்
நான் தான் செய்தேன்
என்பதை ஒத்துக்
கொள்வான் ; ”

“ அந்த சிறிய சக்கரத்தை
ஒரு சிறிய சுற்று
சுற்றினால் போதும்
கையானது
தோள் பட்டையிலிருந்து
வெளியே வந்து விடும்
நிலையில் அந்த சிறிய
சக்கரம் இருந்தது
மனிதனால் தாங்கிக்
கொள்ள முடியாத
வலியை அது கொடுத்துக்
கொண்டு இருந்தது. “

“ இந்த நிலையில் அந்த
சிறிய சக்கரத்தை
வைத்த பிறகு
ஜியார்டானோ
புருனோவிடம்
கேள்விகள் கேட்கப்பட்டன “

“ ஜியார்டானோ புருனோவிடம்
எந்தவித சிறு
சத்தமோ ஓலமோ
அழுகுரலோ கேட்கவே
இல்லை ;
எப்போதும் இருப்பது
போலவே ஜியார்டானோ
புருனோ இருந்தார் ;

ஆவேசமாக கேள்விகளைக்
கேட்டுக் கொண்டு
இருந்த சிறை அதிகாரி
ஜியார்டானோ புருனோவின்
மன உறுதியைக் கண்டு
தயங்கி தயங்கி
கேள்விகளைக் கேட்கலானார் ;”

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  30-01-2019
/////////////////////////////////////////////////////////////

திருக்குறள்-பதிவு-92


                       திருக்குறள்-பதிவு-92

“சிறையில்
ஜியார்டானோ புருனோ
சுழலும் ஒரு பெரிய
சக்கரத்தில் கைகளும்
கால்களும் கட்டி
வைக்கப்பட்ட
நிலையில் இருந்தார் “

“ அவருடைய
இரண்டு கைகளில்
வலது கை
வலது புறம்
மேல் நோக்கியும் ;
இடது கை
இடது புறம்
மேல் நோக்கியும் ;
மேலே வானத்தை
நோக்கியபடி
இருக்குமாறும் ;
அவருடைய
இரண்டு கால்களில்
வலது கால்
வலது புறம்
கீழ் நோக்கியும் ;
இடது கால்
இடது புறம்
கீழ் நோக்கியும் ;
கீழே பூமியை
நோக்கியபடி
இருக்குமாறும் ;
அந்த பெரிய சுழலும்
சக்கரத்தில் கட்டி
வைக்கப்பட்டிருந்தார் ;

“ கட்டப்பட்ட ஒவ்வொரு
கையும் சிறிய
சுழலும் சக்கரத்துடன்
தனித்தனியாக
கட்டி வைக்கப்பட்டு
இருந்தது “


“ கையுடன் பிணைக்கப்பட்ட
அந்த சிறிய சக்கரத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
சுற்றும் போது
சக்கரமானது கையை
தோள் பட்டையிலிருந்து
கொஞ்சம் கொஞ்சமாக
வெளியே இழுத்துக்
கொண்டே இருக்கும் ;
அதனால் ஏற்படக்கூடிய
வலியானது மரண
வேதனையைக் கொடுக்கும் “

“ எவ்வளவு மனவலிமை
படைத்தவர்களாக
இருந்தாலும்
ஒரு குறிப்பிட்ட
அளவு தான் - அந்த
மரண வலியைத்
தாங்க முடியும் “

“தவறு செய்தவனுக்கு
இந்த தண்டனை
வழங்கப்படும்போது
தவறு செய்தவன்
தான் செய்த தவறை
ஒத்துக் கொள்வான் ;
தவறு செய்யாதவனுக்கு
இந்த தண்டனை
வழங்கப்படும்போது
தவறு செய்யாதவன் கூட
தான் தவறு செய்ததாக
இந்த தண்டனையின்
மரண வலி தாங்க
முடியாமல் ஒத்துக்
கொள்வான் ; “

“ ஒரு குறிப்பிட்ட அளவு
தான் வலிகளைத்
தாங்க முடியும் – பலர்
வலி தாங்க முடியாமல்
அலறி விடுவர் ;
சிலர் கண்ணீர் விட்டு
கதறி விடுவர் ;
இந்த தண்டனை
வழங்கப்பட்டவர்கள்
பயங்கரமாக ஓலம்
எழுப்பி கண்ணீர் சிந்தி
கதறி அழுது தான்
சென்று இருக்கிறார்கள் ; “

“ இந்த தண்டனை
யாருக்கு அளிக்கப்பட்டாலும்
தண்டனை முடிந்தபிறகு
அளிக்கப்பட்டவருடைய
கையை அவரால்
தூக்கவே முடியாது ;
உடல் முழுவதும் வலி
இருந்து கொண்டே இருக்கும் ;
நரம்புகள் அனைத்தும்
பாதிக்கப்பட்டு இருக்கும் ;
வலியானது ஒவ்வொரு
செல்லையும்
வேதனைப் படுத்தும் ;
பல நாள்கள்
வலியின் காரணமாக
தூக்கமே வராது ;
வலியைத் தாங்க
முடியாமல் இறந்து
விட நினைத்தவர்களும்
உண்டு ; “

“ இத்தகைய பல்வேறு
வேதனைகளைத்
தரக்கூடிய - இந்த
கொடிய தண்டனை
தான் ஜியார்டானோ
புருனோவிற்கு
கொடுக்கப்பட்டது “

“ சிறையில் விசாரணை
நடக்கும் இடத்தில்
கார்டினல் சார்டோரி ;
பெல்லரமினோ :
ஆகியோர் சிறைக்கூடத்தில்
அமர்ந்து கொண்டு
இருந்தனர் ;
ஃபாதர் டிராகாக்லியோலோ
(Father Tragagliolo)
நின்று கொண்டு இருந்தார் ; “

“ ஜியார்டானோ புருனோ
பெரிய சக்கரத்தில்
கட்டி வைக்கப்பட்ட
நிலையில் சிறை
அதிகாரியால் கேள்விகள்
கேட்கப் பட்டார் “

சிறை அதிகாரி :
“ ஜியார்டானோ புருனோ
மீண்டும் ஒருமுறை
வலியுறுத்தி
உங்களுக்கு நாங்கள்
சொல்ல விரும்புவது
யாதெனில் ,
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
நீங்கள் செய்த
தவறுகள் : மற்றும்
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
நீங்கள் சொன்ன
கருத்துக்கள் ;
ஆகியவற்றை தவறு
என்று உணர்ந்து கொண்டு
இனிமேல் அத்தகைய
தவறை செய்ய
மாட்டேன் ; என்று
நீங்கள் உறுதி
அளித்தீர்களேயானால்
உங்கள் உயிர் தப்பும் ; “

“ இல்லை என்றால்
உங்கள் உயிர்
உங்களுக்கு சொந்தம்
இல்லை ; - புனித
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்ட
திட்டங்களைக் கொண்டு
தீவிரமாக அதிக
அளவில் அனைத்தையும்
நாங்கள் பயன் படுத்த
தயாராக இருக்கிறோம் “

“ ஜியார்டானோ புருனோ
கேட்ட கேள்விக்கு
ஏதேனும் பதில்
தருகிறாரா என்று சிறிது
நேரம் பார்த்தார்கள் “

“ ஜியார்டானோ புருனோ
பதில் எதுவும் சொல்லாமல்
அமைதியாக இருந்தார் “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  29-01-2019
/////////////////////////////////////////////////////////////