June 08, 2019

பரம்பொருள்-பதிவு-22


                    பரம்பொருள்-பதிவு-22

8.கலாகர்ஷணம்
(சக்தி அழைத்தல்)

“எந்த கடவுள்
சிலையை நிறுவப்
போகிறோமோ?
அந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து
கிரகித்த கடவுள்
சக்தியை
கும்பத்தில்
இறக்குவதற்கு
கலாகர்ஷணம்
என்று பெயர் “

“அதாவது
கும்பாபிஷேகம்
செய்யப்படும்
கடவுள் சிலையின்
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து
கிரகித்தல்
என்று பொருள்”

“எந்த கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
கும்பத்தில்
இறக்க வேண்டுமோ ?
அந்த கடவுள்
சிலைக்கு முன்னால்
ஏற்கனவே தயார்
செய்து
வைத்திருக்கும்
கும்பத்தை
அந்தக் கடவுள்
சிலைக்கு முன்னால்
வைக்க வேண்டும் “

“அந்த கடவுள்
சக்தியை
வித்யா தேகமாக
இருக்கும்
அந்தக் கும்பத்தில்
இறக்க வேண்டும்”

“கும்பத்தில்
இறக்கப்பட்ட
கடவுள் சக்தியானது
குறிப்பிட்ட
காலம் வரையில்
அந்த கும்பத்தில்
இருக்கும் வகையில்
மந்திரக் கிரியைகள்
செய்யப்பட
வேண்டும்”

“அவ்வாறு செய்தபின்
அந்தக் கும்பத்தை
தகுந்த ஆசாரியன்
தலையில்
வைத்து கோயிலைச்
சுற்றி வரச்
செய்ய வேண்டும்”

“கும்பத்தை
ஆசாரியன்
தலையில் வைத்து
கோயிலைச்
சுற்றி வரச்
செய்யும் போது
மங்கள வாத்தியங்கள்
அனைத்தும்
இசைக்கப் பட
வேண்டும்;
வாத்திய
கோஷங்கள்
அனைத்தும்
முழங்கப்பட
வேண்டும் ;
நான்கு வேதங்கள்
பாராயணம்
செய்யப்பட வேண்டும் ;
திருமுறை
ஓதப்பட வேண்டும் ;
சாமரம் ,
குடை ,
கொடி விதானம் ,
மங்கள விதானம் ,
மங்கள தீபம் ,
தீவர்த்தி ,
இவைகளோடு
அழைத்து வர
வேண்டும் ;
வாசனைப்பொடி ,
சந்தனம் ,
பன்னீர்  ,
இவற்றைத்
தெளித்துக் கொண்டு
வர வேண்டும் ;”

“எட்டு திசைகளிலும்
தேங்காய்
சிடலையிட்டு ;
சூடம் காட்டிக்
கொண்டு ;
வரச் செய்து
சகலவிதமான
மரியாதைகள்
கும்பத்திற்குச் செய்து ;
கும்பத்தை
யாக சாலைக்குக்
கொண்டு வர
வேண்டும் ;”

“எந்த கடவுள்
சிலையை நிறுவப்
போகிறோமோ?
அந்தக் கடவுள்
சிலைக்குரிய
சக்தியை
பிரபஞ்சத்தில்
இருந்து கிரகித்து ;
கும்பத்தில் இறக்கி ;
கும்பத்தில்
ஒரு குறிப்பிட்ட
காலம் வரை
இருக்கும் வகையில்
செயல்களைச் செய்து ;
கும்பத்திற்குரிய
சடங்குகளைச் செய்து ;
கும்பத்தை முறைப்படி
பூஜித்து ;
கோயிலைச் சுற்றி
வந்து யாகசாலையில்
வைக்க வேண்டும் ;
இந்த செயல்கள்
அனைத்தும்
கொண்டது தான்
கலாகர்ஷணம்
ஆகும் “

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 08-06-2019
/////////////////////////////////////////////////////