May 06, 2018

ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-12


              ஔவையார்- நான்கு கோடி பாடல்- பதிவு-12

"""""கோடி கொடுப்பினும்
குடிப்பிறந்தார் தம்முடனே
கூடுதலே கோடி பெறும்""""""

குடி குடியைக்
கெடுக்கும் என்பது
பழமொழி
இந்த பழமொழியில்
இரண்டு குடி
இருக்கிறது
முதல் குடி
உடல்நலத்தைக்
கெடுக்கக் கூடிய
மதுபானத்தைக் குறிக்கும்
இரண்டாவது குடி
குடும்பத்தைக்
குறிக்கும்
மதுபானத்தைக் குடித்தால்
குடிப்பவருடைய குடும்பம்
பாதிப்பு அடையும்
என்பது தான்
இந்த
பழமொழிக்கு அர்த்தம்

குடி என்றால் குடும்பம்
குடி பிறந்தோர் என்றால்
குடும்பத்தில் பிறந்தவர்கள்
என்று பொருள்
குடிப்பிறந்தோர் என்றால்
இரத்த சம்பந்தமுடையவர்கள்
என்று பொருள்
இரத்த சம்பந்தமுடையவர்கள்
என்றால்
சொந்தக்காரர்கள்
என்று பொருள்
குடிப்பிறந்தோர் என்றால்
சொந்தக்காரர்கள் என்று
பொருள்

நமக்கும்
நம்முடைய
சொந்தக் காரர்களுக்கும்
இடையே
ஆயிரம் சண்டைகள்
இருக்கலாம்
மனக்கசப்பு இருக்கலாம்
மன வருத்தம் இருக்கலாம்
மன வேறுபாடு இருக்கலாம்
விரோத மனப்பான்மை
இருக்கலாம்
பிரிவு ஏற்பட்டு இருக்கலாம்
ஒருவரை ஒருவர்
சண்டை போட்டு
பிரிந்து
இருக்கக் கூடிய
சூழ்நிலை
ஏற்பட்டு இருக்கலாம்

இருந்தாலும்
நம் வீட்டில்
நடைபெறும்
அனைத்து நல்ல
விஷயங்கள் ஆனாலும்
கெட்ட விஷயங்கள்
ஆனாலும்
சொந்தக்காரர்களை
முன் வைத்துத்தான்
செய்யக்கூடிய
நிலை உண்டு

சொந்தக்காரர்கள்
இல்லாமல்
எந்த விசேஷங்களும்
செய்ய முடியாது
சொந்தக்காரர்களை
முன்னிலைப்படுத்தித்தான்
நாம் எந்த
விசேஷங்களையும்
செய்ய முடியும்

நமக்கு சிறு வயது
முதலே
நண்பர்கள்
பல விதத்திலும்
உதவி செய்து
இருந்திருப்பார்கள்
உயிர் நண்பர்களாக
இருந்திருப்பார்கள்
ஆபத்துக் காலங்களில்
ஓடி வந்து
உதவி செய்து கொண்டு
இருந்திருப்பார்கள்
இக்கட்டான
சூழ்நிலையில்
நமக்கு உதவிகரமாக
இருந்திருப்பார்கள்
கவலை நேர்ந்த நேரத்தில்
நமக்கு ஆதரவதாக
இருந்திருப்பார்கள்
துன்பம் சூழ்ந்த நேரத்தில்
நமக்கு துணையாக
இருந்திருப்பார்கள்

ஆனால்
அனைத்து நண்பர்களையும்
துணைக்கு
வைத்துக் கொள்ளலாம்
ஆனால்
நண்பர்களை முன்னிறுத்தி
நாம் நம்முடைய
வீட்டு விசேஷங்களை
செய்ய முடியாது

வீட்டில்
நல்ல விசேஷம் நடந்தாலும்
கெட்ட விசேஷம் நடந்தாலும்
எந்த விசேஷம் நடந்தாலும்
சொந்தக்காரர்களை
முன்னிலைப்படுத்தாமல்
எந்த விசேஷமும்
செய்யாமல்
இருக்க முடியாது

---------இன்னும் வரும்
//////////////////////////////////////////////////////////////////