Showing posts with label Fosca Sartori Giordano Bruno Pope Clement VIII. Show all posts
Showing posts with label Fosca Sartori Giordano Bruno Pope Clement VIII. Show all posts

February 17, 2019

திருக்குறள்-பதிவு-110


                      திருக்குறள்-பதிவு-110

" சுட்டெரிக்கும் சூரியனின்
சுடர் நெருப்பில்
பூத்து வந்த
பகுத்தறிவுப் பகலவன் ;
இந்த உலகம் கண்டிராத
அறிவுலக மாமேதையான
ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்து
கொல்லும் தண்டனையை
நிறைவேற்றுவதற்காக
17-02-1600 ஆம் ஆண்டு
சிறைக்காவலர்கள்
ஜியார்டோனோ
புருனோவின் சிறை
அறைக்குள் நுழைந்து
தரையில் உட்கார்ந்திருந்த
அவரை கைத்தாங்கலாக
தூக்கி நிறுத்தினர் "

"ஜியார்டானோ புருனோ
நெருப்பில் எரியும் போது
அவருடைய அலறல் சத்தம்
யாருக்கும் கேட்டு
விடக்கூடாது என்பதற்காக
நாக்கை தாடையுடன்
சேர்த்து ஆணி அடித்தனர் ; “

“ அவருடைய கைகள்
இரண்டையும் பின்னால்
சேர்த்து கட்டினர் ; ”

" ஜியார்டானோ
புருனோவின் வாயிலிருந்து
வழிந்த இரத்தம்
அருவி என வழிந்தோடி
அவருடைய உடையை
இரத்தத்தால் நனைத்தது "

" ஜியார்டானோ புருனோவை
உயிருடன் எரித்து
கொல்வதற்காக தேர்வு
செய்யப்பட்ட இடமான
“ கம்ப்போ டே ப்யோரி “
(Campo de’ Fiori)
என்ற ரோமனின்
புகழ்பெற்ற சதுக்கத்திற்கு
நடந்தவாறு அழைத்துச்
சென்று கொண்டிருந்தனர் "

" சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது
என்று நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கருத்தே
சரியானது என்று
பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக கருத்து
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ புருனோவை
உயிரோடு எரித்து
கொல்வதற்காக அழைத்து
சென்று கொண்டு இருந்தனர் "

" விஞ்ஞானத்தையும் ,
கல்வியையும் சுதந்திரமாக
இருக்க விடுங்கள் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் மூலம்
அவைகளை கட்டுப்படுத்தி
விஞ்ஞானத்தையும் ;
கல்வியையும் ;
அழித்து விடாதீர்கள் என்று
சொன்ன காரணத்திற்காக
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரித்து கொல்வதற்காக
அழைத்து சென்று
கொண்டு இருந்தனர் "

" கிறிஸ்தவ மதத்தின்
மூலம் அரசியலைக்
கைப்பற்றி ஆள்பவரைக்
கைப்பாவையாக்கி
அதிகாரத்தை பயன்படுத்தி
உலகம் முழுவதும் உள்ள
மக்களை அடிமையாக்க
முயற்சி செய்யாதீர்கள்
என்று சொன்ன
காரணத்திற்காக
ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரித்து கொல்வதற்காக
அழைத்து சென்று
கொண்டு இருந்தனர் "

" கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிலும்
சர்ச்சுகளிலும்
அன்பும், கருணையும்
போதிக்கப்பட வேண்டும்
என்பதற்காகவும் ;
மனிதத் தன்மையை
நிலைபெறச் செய்ய
வேண்டும் என்ற
காரணத்திற்காகவும் ;
போராடிய ஜியார்டானோ
புருனோவை உயிரோடு
எரித்து கொல்வதற்காக
அழைத்து சென்று
கொண்டு இருந்தனர் “

“ அவர் நடந்து செல்லும்
பாதை முழுவதும்
இருபுறங்களிலும் மக்கள்
அனைவரும் தங்கள்
கைகளில் எரியும்
தீப்பந்தத்தை வைத்து
நின்று கொண்டிருந்தனர் “

“ ஜியார்டானோ புருனோ
ஒவ்வொரு தெருவாக
கைகள் பின்னால்
கட்டப்பட்ட நிலையில்
வாயிலிருந்து இரத்தம்
சொட்ட சொட்ட
அழைத்து செல்லப்பட்டு
கம்ப்போ டே ப்யோரி “
(Campo de’ Fiori)
என்ற ரோமனின்
புகழ்பெற்ற சதுக்கத்தின்
மையத்தில் தயார் செய்து
வைக்கப்பட்ட கம்பத்தில்
கட்டப்பட்டார் “

“அந்த இடத்தைச் சுற்றி
மக்களும் காவலர்களும்
நின்று கொண்டிருந்தனர் “


“ ஜியார்டானோ
புருனோவைச் சுற்றிலும்
விறகுச் சுள்ளிகள்
வரிசையாக அடுக்கி
வைக்கப்பட்டன 


“ விறகுச் சுள்ளியில்
நெருப்பு வைக்கப்பட்டது”

“விறகுச் சுள்ளியில்
வைக்கப்பட்ட நெருப்பானது
ஜியார்டானோ
புருனோவை அடைந்தது ;
ஜியார்டானோ புருனோவை
அடைந்த நெருப்பானது
கொஞ்சம் கொஞ்சமாக
அவரை எரிக்கத் தொடங்கியது ; “

“ உலகில் உள்ள
மக்கள் அனைவரும்
யாருக்கும் யாரும்
அடிமைகளாக இல்லாமல்
சுய அறிவைப் பெற்று ;
சுதந்திரமாக ;
சுயமரியாதையுடன் வாழ ;
வேண்டும் என்று போராடிய
ஜியார்டானோ புருனோ
கொஞ்சம் கொஞ்சமாக
நெருப்பில் எரிந்து
கொண்டிருந்தார் “

“மத வெறி ஜியார்டானோ
புருனோவை உயிருடன்
எரித்துக் கொன்று
தன்னுடைய இரத்தப்
பசியை தீர்த்துக் கொண்டது ‘

“ ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார் ‘

ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்ட நாள்
17-02-1600
17-02-1600
17-02-1600

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  17-02-2019
//////////////////////////////////////////////

////////////////////////////////////////////
17-02-1600
ஆம் ஆண்டு
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்ட காட்சியின்
படத் தொகுப்பு !

17-02-1600
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்டார் !

17-02-2019
ஜியார்டானோ புருனோ
உயிருடன் எரித்துக்
கொல்லப்பட்ட தினம்
இன்று !
/////////////////////////////////////////////////////





February 16, 2019

திருக்குறள்-பதிவு-109


                    திருக்குறள்-பதிவு-109

(பொதுமக்கள்
மத்தியில் ஜியார்டானோ
புருனோவிற்கு
வழங்கப்படும்
தண்டனையைப் பற்றி
வாசித்துக் கொண்டே
ஒருவர் தெருக்களில்
நடந்து சென்று
கொண்டிருந்தார்
காவலாளிகள்
அவரைத் தொடர்ந்து
நடந்து வந்து
கொண்டிருந்தனர்)

“ நாளை பொது
மக்கள் அனைவரும்
கண்டு களிக்கும் வகையில்
பொது வெளியில் ஒரு
சிறப்பான நிகழ்ச்சி
நடைபெற இருக்கிறது “

“ நோலா நகரத்தைச்
சார்ந்த புனிதமான
ஒருவருக்கு தண்டனை
அளிக்கப்பட இருக்கிறது “

“ இத்தகைய ஒரு
சிறப்பான நிகழ்ச்சியைக்
காண்பதற்கு
உங்கள் அனைவருக்கும்
ஒரு அரிய வாய்ப்பு
கிடைத்திருக்கிறது ‘

“ அவர் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிரான கருத்துக்களை
உடையவர் “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிராக அவர்
பல்வேறு புத்தகங்களை
எழுதி இருக்கிறார் “

“ இது சம்பந்தமாக
அவர் பல்வேறு
முறை எச்சரிக்கப்பட்டு
இருக்கிறார்
இருந்தும் அவர்
தன்னுடைய குணத்தை
மாற்றிக் கொள்ளவில்லை “

“ தொடர்ந்து
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராகவும் ;
கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராகவும் ;
கருத்துக்கள் சொல்லி
வந்து இருக்கிறார் “

“ இவர் ஜெனிவா (Geneva)
நகருக்கு சென்று
இருக்கிறார் ;
டௌலௌஸ் (Toulouse)
லியொன், (Lyon)
பாரிஸ் (Paris)
மற்றும்
இங்கிலாந்து (England)
பின்பு ஜெர்மனி
சென்றுள்ளார் ; “

“ பின்பு அங்கிருந்து
இத்தாலி சென்றார் ;
அங்கு கைது
செய்யப்பட்டார் ; “

“ அவர் தன்னுடைய
பிடிவாத குணத்தால்
ஆறு வருடங்களுக்கும்
மேலாக சிறையில்
இருந்து இருக்கிறார் “

“ கார்டினல் சார்டோரி
கார்டினல் பெல்லரமினோ
ஆகியோரிடம்
விசாரணையின் போது
பலமுறை வாக்குவாதம்
செய்திருக்கிறார் ‘

“ அவருடைய தவறை
உணர்ந்து திருத்திக்
கொள்வதற்கு
அவருக்கு பலமுறை
வாய்ப்பு அளித்தும்
அவர் அதை சரியான
விதத்தில் பயன்
படுத்திக்
கொள்ளவில்லை “

“ இறுதியாக அவருக்கு
அவருடைய தவறை
உணர்ந்து மன்னிப்பு
கேட்டுக் கொள்வதற்கு
நாற்பது நாட்கள்
கொடுக்கப்பட்டது “

“ அவர் மன்னிப்பு
கேட்டுக் கொள்ளாத
காரணத்தினால்
கார்டினல் முட்ருஸி
இல்லத்தில்
அவருக்கு தண்டனை
வழங்கப்பட்டது “

“ நாளை அவருக்கு
அந்த புனிதமான
மனிதருக்கு தண்டனை
நிறைவேற்றப்பட
இருக்கிறது “

“ கடவுள் அவருக்கு
உதவவில்லை
கடவுள் அவரை
கை விட்டு விட்டார் “

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராகவும்
கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராகவும்
பைபிளுக்கு எதிராகவும்
கருத்து சொல்லி
தான் செய்த தவறான
செயலுக்கு மன்னிப்பு
கூட கேட்காமல்
தண்டனை பெறப்போகும்
அந்த புனிதமான
மனிதர் தான்
“ஜியார்டானோ புருனோ”

 “ ஜியார்டானோ
புருனோவிற்கு தான்
நாளை தண்டனை
அளிக்கப்பட இருக்கிறது

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
தண்டனை
நிறைவேற்றப்படும்
நாள் “

நாளை

17-02-1600

17-02-1600

17-02-1600

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  16-02-2019
//////////////////////////////////////////////




February 15, 2019

திருக்குறள்-பதிவு-108



                      திருக்குறள்-பதிவு-108

(கார்டினல் முட்ருஸி
(Cardinal Madruzzi)
அவர்கள் வீட்டில்
ஜியார்டானோ
புருனோவிற்கு
வழங்கப்பட வேண்டிய
தண்டனைகள் குறித்த
தீர்ப்பு வாசிக்கப்பட்டது

ஒரு அதிகாரி தீர்ப்பை
வாசிக்கத் துவங்கினார்)

அதிகாரி :
“ இன்று பிப்ரவரி, 8, 1600
08-02-1600
ஜுப்ளி வருடம்
(Jubliee Year)
ஜியார்டானோ புருனோவிற்கு
வழங்கப்படும் தண்டனை
பற்றிய விவரங்களை
அறிவிக்கிறோம் “

“ ஜியார்டானோ புருனோவின்
தவறான செய்கைகளாலும் ;
கருத்துக்களாலும் ;
புனிதமான கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபை
இரண்டாக பிரிந்து ;
உடையும் நிலைக்கு
குழப்பத்தை ஏற்படுத்திய
காரணத்தால்
ஜியார்டானோ புருனோவிற்கு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையின் சட்டத்தின்படி
தண்டனை வழங்குகிறோம் “

“ ஜியார்டானோ புருனோவிற்கு
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையால்
வழங்கப்பட்ட பெரிய
மற்றும் சிறிய பதவிகள்
அனைத்தும் இப்போது
முதல் அவரிடமிருந்து
பறிக்கப்படுகின்றன “

“ அவர் அந்த பதவிகளை
வகிப்பதற்கு தகுதியற்றவர்
என அறிவிக்கப்படுகிறார் “

” புனிதமான கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையிலிருந்தும் ;
கிறிஸ்தவ மதத்திலிருந்தும் ;
அன்பும், கருணையும்
வழிந்தோடும் சர்ச்சுகளில்
இருந்தும் அவர்
வெளியேற்றப்படுகிறார் ; “

“ ஜியார்டானோ  
புருனோவினுடைய
புத்தகங்கள் அனைத்தும்
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிரான பல தவறான
தகவல்களையே
கொண்டிருக்கிறது ;
பொய்யானவைகளே
அதில் நிரம்பி இருக்கிறது “
அவைகள் பல்வேறு
விதமான பிழைகளைத்
தன்னுள் கொண்டவைகளாக
இருக்கிறது “
அவைகள் மக்கள் மனதில்
தவறானவைகளை விதைத்து
விட வாய்ப்பு இருக்கிறது ‘

மேலும், ஜியார்டானோ
புருனோவின் புத்தகங்கள்
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி இருக்கும்
பழக்க வழக்கங்களுக்கு
எதிராகவும் ;
கிறிஸ்தவ மக்கள்
காலம் காலமாக
கடைபிடித்து வரும்
மத பழக்கவழக்கங்களுக்கு
எதிராகவும் ;
சர்ச்சுகள் கடைபிடித்து
வரும் புனிதத் தன்மைக்கு
எதிராகவும் ;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராகவும் ;
ஜியார்டானோ புருனோவின்
எழுத்துக்கள் இருக்கின்ற
காரணத்தினால்
ஜியார்டானோ புருனோவின்
புத்தகங்கள் அனைத்தும்
தடை செய்யப்படுகின்றன. “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை தடை செய்து
வைத்திருக்கும் புத்தகங்களின்
பட்டியலில் ஜியார்டானோ
புருனோவின் புத்தகங்கள்
தடைசெய்யப்பட்ட
புத்தகங்கள் வரிசையில்
கொண்டு வரப்பட வேண்டும் ‘

“ஜியார்டானோ புருனோவின்
புத்தகங்கள் அனைத்தும்
புனிதர் பீட்டர்ஸ் சர்ச்சின்
(Saint Peter’s Square)
புனித படிக்கட்டிற்கு
முன்னால் உள்ள
திறந்தவெளியில் பொது
மக்கள் முன்னிலையில்
அவருடைய புத்தகங்கள்
அனைத்தும் எரிக்கப்பட்டு
அழிக்கப்படவேண்டும்”.

“ ஜியார்டானோ புருனோ
குற்றவாளி என்று
அறிவிக்கப்படுகிறார்
குற்றவாளியான
ஜியார்டானோ புருனோவிற்கு
வழங்கப்பட்ட தண்டனையை
நிறைவேற்றுவதற்காக
ரோம் நகரின் கவர்னரிடம்
ஜியார்டானோ புருனோவை
ஒப்படைக்கிறோம் “.

 "செயல்முறைகளின்படி
ஜியார்டானோ புருனோவிற்கு
வழங்கப்பட வேண்டிய
தண்டனை வாசிக்கப்பட்டது “

“ குற்றவாளியின்
முன்னிலையில்
காட்ரினல் மட்ருஸ்சியின்
(Cardinal Madruzzi’s)
இல்லத்தில்
நவனோ சதுக்கத்தில்
(Navano Square)
பிளமியனோ அட்ரினோ
(Notary Flaminio Adriano)
பதிவுரிமை அலுவலரால்
வாசிக்கப்பட்டது “

“ பிரான்செஸ்கோ
பீட்ரஸாண்டா
(Francesco Pietrasanta)
மற்றும்
பாதர் பெனட்டோ மண்டினா
(Father Benedetto Mandina)
இருவரும் ஜியார்டானோ
புருனோவிற்கு வழங்கப்படும்
தண்டனைக்கு சாட்சியாக
இருந்து தங்கள்
சாட்சியை பதிவு செய்தனர் “

“ஜியார்டானோ
புருனோவிற்கு வழங்கப்பட்ட
தண்டனையை
நிறைவேற்றுவதற்காக
ஜியார்டானோ புருனோ
ரோம் நகரின் ஆளுநரிடம்
ஒப்படைக்கப்படுகிறார். “

“ ஜியார்டானோ புருனோவிற்கு
எத்தகைய தண்டனை
வழங்கப்பட்டது என்பது
மிகவும் ரகசியமாக
வைக்கப்பட்டது “

08-02-1600
ஆம் ஆண்டு ஜியார்டானோ
புருனோவிற்கு இந்த
தீர்ப்பு வழங்கப்பட்டது “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  15-02-2019
//////////////////////////////////////////////