July 30, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-51


              நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-51

இராமர் இளமையில்
ஶ்ரீநிவாசன் என்ற
நண்பனுடன் நட்பு
கொண்டு இருந்தார்.

இராமர், ஶ்ரீநிவாசனை
அடேய் சீனு
என்று தான் அழைப்பார்
அதைப்போல்
ஶ்ரீநிவாசனும், ராமரை
அடேய் ராமா என்று
தான் அழைப்பார்.

இராமர் வசிட்ட
முனிவரிடம் பல
கலைகளைக் கற்று
தாடகையை
வதம் புரிந்து விட்டு
சீதா கல்யாணம்
முடித்தபின்
கானகம் சென்றார்.

ஏழையாக இருந்த
ஶ்ரீநிவாசன்
பல ஊர்கள் சென்று
அலைந்து திரிந்து விட்டு
பல ஆண்டுகள் கழித்து
அயோத்தியை
அடைந்தான்.

“எங்கே? என் நண்பன்
ராமர் எங்கே?”
என்று கேட்டான்.
கானகம் சென்றிருக்கிறார்
என்பதை அறிந்தான்.
ராமர் காட்டுக்கு
சென்றதை நினைத்து
அழுதான்
அந்தோ ராமா
நீ கானகம் சென்றாயே
உனக்கு யார்
துணையாக இருப்பார்
மழை, வெயில், பனி
ஆகியவற்றால் நீ
துன்புறக்கூடிய
நிலை வருமே
அப்பொழுது நீ
என்ன செய்வாய்
நான் உன்னுடன்
வந்து இருந்தால்
உனக்கு துணையாக
இருந்து இருப்பேனே
என்று தன்னுள் கூறிக்
கொண்டு வருத்தப்பட்டான்.

காட்டை அடைந்தான்
ராமா ராமா என்று
கூவியழைத்த வண்ணம்
பித்தனைப் போல
கானகம் முழுவதும்
அலைந்தான்
காடெல்லாம் தேடினான்
ராமரைத் தேடி ஓடினான்
எவ்வளவு முயற்சிகள்
செய்தும் ஶ்ரீநிவாசனால்
ராமர் சென்ற
கானகத்தை அவனால்
கண்டு பிடிக்க முடியவில்லை
பதினான்கு ஆண்டுகள்
உருண்டு ஓடி
மறைந்து விட்டன

ஶ்ரீநிவாசன்
அயோத்தியை அடைந்தான்
இராமருக்கு
மகுடாபிஷேகம்
நடந்து கொண்டிருந்தது
மாதர்கள் மங்கல நாதம்
முழங்கிக் கொண்டு
இருந்தார்கள்
முனிவர்கள் மந்திரத்தை
உச்சாடனம் செய்து
கொண்டிருந்தார்கள்
மன்னர்கள் கைகூப்பி
நின்று கொண்டிருந்தார்கள்
கோலாகலமாக விழா
நடந்து கொண்டிருந்தது

அங்கே வந்தான்
ஏழை ஶ்ரீநிவாசன்
காவல் காரனை நோக்கி
“அடே ராமன் வந்து
விட்டானா” என்று கேட்டான்.

ஆம் வந்து விட்டார்
மகுடாபிஷேகம் நடந்து
கொண்டிருக்கிறது
என்றான் காவல்காரன்
ஶ்ரீநிவாசனுக்கு
அளவற்ற மகிழ்ச்சி
உண்டாகியது
தனக்கே மகுடாபிஷேகம்
நடப்பது போல்
உள்ளம் மகிழ்ந்தான்
ஒரே ஓட்டமாக
துள்ளி ஓடினான்
இரத்தின சிங்காசனத்தில்
வீற்றிருக்கின்ற
சக்கரவர்த்தித் திருமகனான
இராமரைக் கண்டான்

இளமையில் அழைத்த
நட்பின் பழக்கம்
உண்மையான நட்பின்
வெளிப்பாடு
அவையில் யாரைப்
பற்றியும் கவலைப்படவில்லை
மற்றவர்கள் என்ன
நினைப்பார்களோ
என்று நினைக்கவில்லை
ராமரிடம் எத்தகைய
நட்பை ஶ்ரீநிவாசன்
கொண்டிருந்தானோ
அத்தகைய நட்புடன்
"""""அடே ராமா
காட்டுக்குச் சென்றாயே
எப்படா வந்தாய்"""""
என்றான் ஶ்ரீநிவாசன்

இது தான் எந்த
சூழ்நிலையிலும் ஒரே
மாதிரியாக
இருக்கும் நட்பு
ஶ்ரீநிவாசனுக்கு தன்னைச்
சுற்றி இருப்பவர்கள்
யாரும் கண்ணுக்கு
தெரியவில்லை
இராமர் மட்டுமே
கண்ணுக்கு தெரிந்தார்
இராமர் மேல் கொண்ட
நட்பு மட்டுமே தெரிந்தது

ஶ்ரீநிவாசன் ராமரை
“ராமா” என்றும்
“எப்படா” என்றும்
“டா” போட்டு அழைத்த
வார்த்தைகளைக்
கேட்ட இலட்சுமணரின்
கண்கள் சிவந்தன
இவன் தலையை
துண்டிப்பேன் என்று
எடுத்தார் கோதண்டம்

பரதர், சத்ருக்கனர்
கோபத்துடன் பாய்ந்தனர்
ஆனுமந்தர் வாலை எடுத்தார்
இவனைக் கட்டி
ஏழு கடலுக்கும்
அப்பால் எறிவேன் என்றார்

வசிட்ட முனிவர்
ரகு நாதனுக்கு நான்
தான் பேரிட்டேன்
எனினும் நானே
ராமா என்று
அழைப்பதில்லை
அழைத்ததில்லை
ராகவேந்திரா ராமச்சந்திரா
என்று தானே
அழைக்கின்றேன்
இந்த மூடன் அடே
ராமா என்று அழைத்தானே
இவனை விட்டு
வைக்கலாமா என்று
சினந்து தருப்பைக்
கட்டை எடுத்து ஓங்கினார்
ஆ ஆ என்று
ஒலி எங்கும் எழுந்தது.

ஶ்ரீநிவாசனுடைய
சொற்கள் அரச அவையைக்
குலுங்க வைத்தது.
சபையில் பெரிய
பரபரப்பு உண்டாகியது


---------இன்னும் வரும்
------------30-07-2018
////////////////////////////////////////////