October 29, 2019

ஒன்றாமை ஒன்றியார்--திருக்குறள்


அன்பிற்கினியவர்களே!

“ஒன்றாமை ஒன்றியார்
கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது”
----------திருக்குறள்

"ஆழ்துளைக் கிணற்றுக்குள்
ஒரு குழந்தை
விழுந்து விடுகிறது ;
இந்த செய்தி நாட்டிலுள்ள
மக்கள் அனைவருக்கும்
தெரிந்து விடுகிறது ;
நாட்டை ஆளும்
அரசியல்வாதிகள் அந்த
இடத்திற்கு செல்ல
வேண்டிய கட்டாயத்திற்கு
உள்ளாக்கப் படுகின்றனர்;  
குழந்தை விழுந்த ஆழ்துளைக்
கிணறு இருக்கும் இடத்திற்கு
ஓடோடிச் செல்கின்றனர் ;
அங்கிருக்கும் நிலையைக்
கவனிக்கின்றனர்- குழந்தையைக்
காப்பாற்றுவதற்காக
அனைத்து முயற்சிகளையும்
மேற்கொள்கின்றனர்."

"அதாவது ஆழ்துளைக்
கிணற்றில் குழந்தை
விழுந்ததற்கு முக்கியமான
காரணம் ஆழ்துளைக்
கிணறுகளை மூடாமல்
குழந்தை விழுவதற்கு
காரணமாக இருந்த
அரசியல்வாதிகள் என்ற
விஷயத்தை மக்கள்
உணர்ந்து கோபம் கொண்டு
அரசியல்வாதிகளுக்கு எதிராக
மக்கள் திரும்பி விடக்கூடாது
என்ற காரணத்திற்காக
குழந்தையைக் காப்பாற்றும்
முயற்சியில் ஈடுபட்டு
அரசியல்வாதிகள் தாங்கள்
செய்த தப்பை மறைத்து
விடுகின்றனர்; மக்களும்
அரசியல்வாதிகள் செய்த
தப்பை மறந்து விடுகின்றனர்
இதன் மூலம் அரசியல்வாதிகள்
தங்களுடைய தப்பை
மறைத்து விடுகின்றனர்"..

"அரசியல்வாதிகள் குழந்தையைக்
காப்பாற்ற விஞ்ஞானத்தை
பயன்படுத்த வேண்டும் என்று
முடிவு செய்கின்றனர் ;
விஞ்ஞானத்தை வைத்து
பிழைப்பு நடத்திக்
கொணடிருக்கும் பொருளாதாரத்
தலைவர்கள் மூலமாக
விஞ்ஞானக் கருவிகளைப்
பயன்படுத்தி குழந்தையைக்
காப்பாற்றத் தேவையான
அனைத்து முயற்சிகளையும்
செய்கின்றனர் - ஆனால்
பொருளாதாரத் தலைவர்களாலும்
குழந்தையைக் காப்பாற்ற
முடியவில்லை என்ற நிலை
வரும்போது மக்களை
நோக்கி குழந்தை பிழைக்க
வேண்டும் என்று கடவுளை
நோக்கி பிரார்த்தனை
செய்யுங்கள் என்று
சொல்கின்றனர், இந்து மதம்,
கிறிஸ்தவ மதம்,
இஸ்லாமிய மதம், புத்த மதம்,
ஜைன மதம் என்று
அனைத்து மதத்தை
சார்ந்தவர்களும் மதவேறுபாடு
மறந்து தொடர்ந்து
பிரார்த்தனை செய்கின்றனர். "

"விஞ்ஞானம் தோற்றால்
மக்கள் யாரும் விஞ்ஞானத்தை
மதிக்க மாட்டார்கள் ;
விஞ்ஞானத்தை நம்ப மாட்டார்கள்.
விஞ்ஞானம் தோற்று விட்டது
என்று சொன்னால்
விஞ்ஞானத்திற்கு அசிங்கம்
என்று உணர்ந்து விஞ்ஞானத்தின்
தோல்வியை மக்கள் புரிந்து
கொள்ள கொள்ளக்கூடாது
என்ற காரணத்திற்காக
கடவுளை நோக்கி
குழந்தைக்காக பிரார்த்தனை
செய்யச் சொல்கின்றனர்.
மக்களும் விஞ்ஞானத்தின்
தோல்வியை உணராமல்
கடவுளை நோக்கி பிரார்த்தனை
செய்கின்றனர். இதன் மூலம்
விஞ்ஞானம் தன்னுடைய
தோல்வியை
மறைத்து விடுகிறது."
               
"இந்த நிலையில் இரண்டொரு
நாள்களில் குழந்தை
இறந்து விடுகிறது. "

"தங்கள் மதம் தான்
உண்மையான மதம்,
தங்களுடைய மதத்தின்
கடவுள் தான் உண்மையான
கடவுள், தங்களுடைய
மதத்தின் புனித நூல்
தான் உண்மையான
புனிதநூல் தங்களுடைய
கடவுள் தான் மக்களுடைய
பாவங்களை மீட்டெடுக்க
வந்த கடவுள்.என்று
சொல்லித் திரிந்து
கொண்டிருந்த அனைத்து
மதத்தைச் சேர்ந்தவர்களும்
குழந்தை இறந்த பிறகு
எதுவும் பேசாமல் அமைதியாக
இருந்து விடுகின்றனர்.
ஏதாவது ஒரு மதத்தைச்
சேர்ந்த கடவுள் அந்த
குழந்தையைக் காப்பாற்றி
இருக்க வேண்டும். எந்த
மதத்தைச் சேர்ந்த
கடவுளும் குழந்தையைக்
காப்பாற்றவில்லை.
அப்படி என்றால்
எந்த மதமும் உண்மையான
மதம் இல்லையா எந்த
கடவுளும் சக்தி வாய்ந்த
கடவுள் இல்லையா
கடவுள் இருக்கிறாரா
இல்லையா என்று  
மக்களில் யாருமே
கேள்விகள் கேட்கவில்லை
இதன் மூலம் மதவாதிகள்
மதத்தின் பெயரைச் சொல்லியும்
கடவுளின் பெயரைச் சொல்லியும்
பக்தியின் பெயரால் மக்களை
ஏமாற்றி  வருவதை
மறைத்து விடுகின்றனர்,”

“அரசியல் தலைவர்கள்,
பொருளாதாரத் தலைவர்கள்,
மதத் தலைவர்கள் இந்த
மூன்று பேரும் ஒன்றாகச்
சேர்நது தவறு செய்திருந்தாலும்
தங்களுடைய தவறை
அழகாக மறைத்து விடுகின்றனர்.
ஆனால் பாதிப்பு மக்களுக்கு
ஏற்பட்டு விடுகிறது,.
இதனை உணராத மக்கள்
ஒருவருக்கொருவர் குறை
சொல்லிக் கொண்டு
குற்றம் சொல்லிக் கொண்டு
சண்டையிட்டுக்
கொண்டிருக்கின்றனர்.
பெற்றோர்கள் தங்கள்
குழந்தை பத்திரமாக
பார்த்துக் கொள்ள வேண்டும்
என்கின்றனர் ஒருசாரார்.
வீட்டிற்குள் உட்கார்ந்து
கொண்ட சமோசா
சாப்பிட்டுக் கொண்டு கருத்து
சொல்வதை விட்டு விட்டு
களத்தில் இறங்கி வேலை
செய்ய வேண்டும் என்கின்றனர்
மற்றொரு சாரார் ஆக
மொத்தம் அரசியல் தலைவர்கள்
பொருளாதாரத் தலைவர்கள்
மதத் தலைவர்கள் ஆகிய
மூன்று பேரும் தங்கள்
மேல் எந்த தப்பும்
ஏற்படாதவாறு
தப்பித்துக் கொள்கின்றனர்,.

"உலக வரலாற்றை எடுத்துக்
கொண்டால் அந்தக் காலம்
முதல் இந்தக் காலம்
வரை எந்த ஒரு போரை
எடுத்துக் கொண்டாலும் ;
எந்த ஒரு நிகழ்வை
எடுத்துக் கொண்டாலும் ;
அரசியல் தலைவர்கள் ;
பொருளாதாரத் தலைவர்கள்;
மதத் தலைவர்கள்; -இந்த
மூவர் தான் இருப்பார்கள் ;
ஆனால் இவர்கள் அனைவரும்
தாங்கள் செய்த தப்பிலிருந்து
தப்பித்துக் கொண்டு மக்கள்
தங்களை நல்லவர்களாக
நம்பும்படி செய்து விடுவார்கள்;
இவர்கள் தான் இந்த
உலகம் முழுவதையும்
தங்களுக்கு கீழே அடிமையாக
வைத்திருப்பவர்கள் – ஆனால்
இதைப் பற்றி எதுவும்
தெரியாமல் மக்கள்
ஒருவருக்கொருவர் தங்களுக்குள்
சண்டையிட்டு அடித்துக் கொண்டு
செத்துக் கொண்டிருக்கிறார்கள்; "
  
"இதனைத் தான் திருவள்ளுவர்
நெருக்கமாக இருப்பவர்களே
உட்பகைவர்களாக இருந்தால்
ஒருவன் அழிவிலிருந்து
எப்போதும் தப்ப முடியாது
என்று 
“ஒன்றாமை ஒன்றியார்
கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல்
அரிது” 
என்ற திருக்குறளின்
மூலம் விளக்குகிறார்”


---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்
---------29-10-2019
//////////////////////////////////////////////