February 16, 2019

திருக்குறள்-பதிவு-109


                    திருக்குறள்-பதிவு-109

(பொதுமக்கள்
மத்தியில் ஜியார்டானோ
புருனோவிற்கு
வழங்கப்படும்
தண்டனையைப் பற்றி
வாசித்துக் கொண்டே
ஒருவர் தெருக்களில்
நடந்து சென்று
கொண்டிருந்தார்
காவலாளிகள்
அவரைத் தொடர்ந்து
நடந்து வந்து
கொண்டிருந்தனர்)

“ நாளை பொது
மக்கள் அனைவரும்
கண்டு களிக்கும் வகையில்
பொது வெளியில் ஒரு
சிறப்பான நிகழ்ச்சி
நடைபெற இருக்கிறது “

“ நோலா நகரத்தைச்
சார்ந்த புனிதமான
ஒருவருக்கு தண்டனை
அளிக்கப்பட இருக்கிறது “

“ இத்தகைய ஒரு
சிறப்பான நிகழ்ச்சியைக்
காண்பதற்கு
உங்கள் அனைவருக்கும்
ஒரு அரிய வாய்ப்பு
கிடைத்திருக்கிறது ‘

“ அவர் கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிரான கருத்துக்களை
உடையவர் “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கும்
கிறிஸ்தவ மதத்திற்கும்
எதிராக அவர்
பல்வேறு புத்தகங்களை
எழுதி இருக்கிறார் “

“ இது சம்பந்தமாக
அவர் பல்வேறு
முறை எச்சரிக்கப்பட்டு
இருக்கிறார்
இருந்தும் அவர்
தன்னுடைய குணத்தை
மாற்றிக் கொள்ளவில்லை “

“ தொடர்ந்து
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராகவும் ;
கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராகவும் ;
கருத்துக்கள் சொல்லி
வந்து இருக்கிறார் “

“ இவர் ஜெனிவா (Geneva)
நகருக்கு சென்று
இருக்கிறார் ;
டௌலௌஸ் (Toulouse)
லியொன், (Lyon)
பாரிஸ் (Paris)
மற்றும்
இங்கிலாந்து (England)
பின்பு ஜெர்மனி
சென்றுள்ளார் ; “

“ பின்பு அங்கிருந்து
இத்தாலி சென்றார் ;
அங்கு கைது
செய்யப்பட்டார் ; “

“ அவர் தன்னுடைய
பிடிவாத குணத்தால்
ஆறு வருடங்களுக்கும்
மேலாக சிறையில்
இருந்து இருக்கிறார் “

“ கார்டினல் சார்டோரி
கார்டினல் பெல்லரமினோ
ஆகியோரிடம்
விசாரணையின் போது
பலமுறை வாக்குவாதம்
செய்திருக்கிறார் ‘

“ அவருடைய தவறை
உணர்ந்து திருத்திக்
கொள்வதற்கு
அவருக்கு பலமுறை
வாய்ப்பு அளித்தும்
அவர் அதை சரியான
விதத்தில் பயன்
படுத்திக்
கொள்ளவில்லை “

“ இறுதியாக அவருக்கு
அவருடைய தவறை
உணர்ந்து மன்னிப்பு
கேட்டுக் கொள்வதற்கு
நாற்பது நாட்கள்
கொடுக்கப்பட்டது “

“ அவர் மன்னிப்பு
கேட்டுக் கொள்ளாத
காரணத்தினால்
கார்டினல் முட்ருஸி
இல்லத்தில்
அவருக்கு தண்டனை
வழங்கப்பட்டது “

“ நாளை அவருக்கு
அந்த புனிதமான
மனிதருக்கு தண்டனை
நிறைவேற்றப்பட
இருக்கிறது “

“ கடவுள் அவருக்கு
உதவவில்லை
கடவுள் அவரை
கை விட்டு விட்டார் “

“ கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராகவும்
கிறிஸ்தவ
மதத்திற்கு எதிராகவும்
பைபிளுக்கு எதிராகவும்
கருத்து சொல்லி
தான் செய்த தவறான
செயலுக்கு மன்னிப்பு
கூட கேட்காமல்
தண்டனை பெறப்போகும்
அந்த புனிதமான
மனிதர் தான்
“ஜியார்டானோ புருனோ”

 “ ஜியார்டானோ
புருனோவிற்கு தான்
நாளை தண்டனை
அளிக்கப்பட இருக்கிறது

“ ஜியார்டானோ
புருனோவிற்கு
தண்டனை
நிறைவேற்றப்படும்
நாள் “

நாளை

17-02-1600

17-02-1600

17-02-1600

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  16-02-2019
//////////////////////////////////////////////