May 31, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-16


                நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு-16

ஆடி மாதத்தில்
வைரஸ் போன்ற
நோய்க் கிருமிகளால்
சின்னம்மை, தட்டம்மை
போன்ற நோய்களும்
பிற நோய்களும்
அதிக அளவில்
பரவக்கூடிய
வாய்ப்புகள் அதிகம்

ஒவ்வொரு ஆண்டும்
ஆடி மாதத்தில்
நோய்த் தொற்று
ஏற்படுகிறது
என்பதை உணர்ந்த
நம் முன்னோர்கள்
மக்களுக்கு
நோய்த் தொற்று
ஏற்படாமல் இருக்க
ஊர் எல்லையைச்
சுற்றியும்,
வீட்டிலும், வீட்டைச்
சுற்றிலும்
வேப்பிலையைக்
கட்டி வைத்தனர்

அதையும் மீறி
எதிர்பாராத விதமாக
நோய் எதிர்ப்பு சக்தி
குறைந்தவர்களுக்கு
நோய் ஏற்பட்டு
விட்டால்
நோயைக்
குணப்படுத்துவதற்கும்
அந்நோய்
மற்றவர்களுக்கும்
பரவாமல் தடுப்பதற்கும்
ஊரின்
பொதுவான இடத்தில்
அதாவது
சத்திரத்திலோ அல்லது
திருமண மண்டபத்திலோ
அல்லது
கோயிலிலோ
அல்லது
ஊருக்கு பொதுவான
ஒரு இடத்திலோ வைத்து
மருத்துவ குணம் கொண்ட
நோய் எதிர்ப்பு சக்தி
அதிகம் கொண்ட
உணவுகளான
கேழ்வரகுக் கூழ்
கருவாட்டுக் குழம்பு
முருங்கைக் கீரை
ஆகியவற்றைச் செய்தனர்

கிராமத்தில்
உள்ள அனைவருக்கும்
கேழ்வரகுக் கூழ்
கருவாட்டுக் குழம்பு
முருங்கைக் கீரை
ஆகியவற்றை
சாப்பிடக் கொடுத்து
மக்களைச்
சாப்பிடச் செய்தனர்

ஆடி மாதத்தில்
ஒவ்வொரு வாரமும்
வாரத்திற்கு
ஒரு முறையோ
அல்லது
இரண்டு முறையோ
ஆக மொத்தம்
மொத்தமாக
ஏழு அல்லது
எட்டு நாட்கள்
ஆடி மாதத்தில்
கூழ் உடன்
கருவாட்டுக் குழம்பு
முருங்கைக் கீரை
ஆகியவற்றைத்
தயார் செய்து
கிராமத்தில் உள்ள
அனைத்து
மக்களுக்கும் கொடுத்து
சாப்பிடச் செய்தனர்
நம் முன்னோர்கள்
அதன் மூலம்
நோயிலிருந்து
கிராமத்தையும்
கிராம மக்களையும்
காப்பாற்றினர்

அந்தக் காலங்களில்
ஒவ்வொரு வருடமும்
ஆடி மாதத்தில்
இந்த முறைகள்
மக்களால் தொடர்ந்து
கடைபிடிக்கப்பட்டு வந்தது

இன்றும் இந்த முறை
ஒவ்வொரு வருடமும்
ஆடி மாதத்தில்
அம்மனுக்கு
கூழ் ஊற்றும்
பண்டிகையாக
கொண்டாடப்பட்டு
வருகிறது


நோய்த் தொற்று
ஏற்படாமல் இருக்கவும்
நோய் வந்துவிட்டால்
நோய் பரவாமல்
தடுப்பதற்கும்
நோய் குணமடைவதற்கும்
ஆடி மாதத்தில்
கூழ் ஊற்றும்
பண்டிகையாக
கொண்டாடச் செய்து
அதை ஒவ்வொரு
வருடமும் தவறாமல்
தொடர்ந்து
பின்பற்றும் வகையில்
செய்திருக்கும்
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்


--------- இன்னும் வரும்
////////////////////////////////////////////////////////