December 06, 2019

பரம்பொருள்-பதிவு-93


             பரம்பொருள்-பதிவு-93

"நாம் செய்யும் செயலில்
எந்த செயலில் காலம்
என்ற ஒன்று கிடையாதோ ?
அந்த செயல் தெய்வீகத்
தன்மை வாய்ந்த
செயலாகக் கருதப்படுகிறது !
உலகம் முழுவதும்
செய்யப்படும் செயல்களை
எடுத்துக் கொண்டால்
மூன்று செயல்களில்
காலம் என்பது கிடையாது"

ஒன்று :
"காதலின் ஆழத்தில்
காலம் என்பது கிடையாது !"

இரண்டு :
"காமத்தின் உச்சத்தில்
காலம் என்பது கிடையாது !"

மூன்று :
"கடவுளாக மாறும் போது
காலம் என்பது கிடையாது !"

"காதலின் ஆழத்தில் ;
காமத்தின் உச்சத்தில் ;
கடவுளாக மாறும் போது ;
ஆகிய மூன்று செயல்களிலும்
காலம் என்ற ஒன்று
இல்லாத காரணத்தினால் ,
இந்த மூன்றும்
தெய்வீகத் தன்மை வாய்ந்த
செயலாகக் கருதப்படுகிறது."

"இந்த மூன்று செயல்களில்
காதலின் ஆழத்தில்
இருப்பதும் ;
காமத்தின் உச்சத்தில்
இருப்பதும் ; - ஆகிய 
இரண்டு செயல்களும்
சிற்றின்பத்தைச் சேர்ந்தது ;"

"கடவுளாகவே மாறுவது ;
என்ற ஒரு செயல்
பேரின்பத்தைச் சேர்ந்தது;"

"இந்த மூன்று
செயல்களையும் குறிப்பது
தான் முக்கோணம்  ;
முக்கோணம் என்பது
மூன்று புள்ளிகளை
ஒன்றாக இணைப்பதின்
மூலம் உண்டாவது ;"

"காதல் ; காமம் ; கடவுள் ;
ஆகிய மூன்றிலும் காலம்
என்ற ஒன்று கிடையாது ;
என்பதைக் குறிப்பது
தான் முக்கோணம் ;"

"முக்கோணத்தில் உள்ள
மூன்று புள்ளிகளில்
கீழே உள்ள
இரண்டு புள்ளிகள்
காதல் ; காமம் ; - என்ற
இரண்டு சிற்றின்பச்
செயல்களையும் ;
மேலே உள்ள ஒரு
புள்ளி கடவுள்
என்ற பேரின்பச்
செயலையும் குறிக்கிறது ;"

"அதைப்போல
தமிழ் உயிர் எழுத்தில்
உள்ள ஃ என்ற எழுத்தில்
கீழே உள்ள
இரண்டு புள்ளிகள்
காதல் ; காமம் ; - என்ற
இரண்டு சிற்றின்பச்
செயல்களையும் ;
மேலே உள்ள ஒரு
புள்ளி கடவுள் என்ற
பேரின்பச் செயலையும் ;
குறிக்கிறது "

"முக்கோணமும் ;
தமிழ் உயிர் எழுத்தில்
உள்ள ஃ என்ற எழுத்தும் ;
காதல் ; காமம் ; கடவுள் ;
ஆகிய மூன்று
செயல்களிலும் காலம்
என்ற ஒன்று கிடையாது
என்பதைக் குறிக்கிறது"

"அர்ஜுனனும் உலூபியும்
இரண்டு தெய்வீகத் தன்மை
வாய்ந்த செயல்களான
காதலின் ஆழத்திற்கும்  ;
காமத்தின் உச்சத்திற்கும் ;
சென்று இன்பத்தைத்
துய்த்தப் பின் அர்ஜுனன்
தான் பிரிந்து செல்ல
அனுமதி அளிக்க வேண்டும்
என்று உலூபியிடம்
கேட்டதற்கு உலூபி
எந்த விதமான
எதிர்ப்பும் சொல்லாமல்
அமைதியாக இருந்தாள் ;
அர்ஜுனனின்
வார்த்தைகளுக்கு
கட்டுப்பட்டு எதுவும்
பேசாமல் இருந்தாள் ;
அர்ஜுனனின்
வார்த்தைகளைக்
கேட்டு உலூபி
எந்தவிதமான எதிர்ப்பும்
தெரிவிக்கவில்லை;
அர்ஜுனன் தன்னை விட்டு
பிரிந்து செல்வதற்கு
மௌனத்தின் மூலமே
சம்மதம் தெரிவித்தாள் ;
வார்த்தைகளின்றி
மொனத்தின் மூலம்
உலூபி பேசிய
சம்மதத்தின் வார்த்தைகளை
அர்ஜுனன் புரிந்து கொண்டு
புறப்படத் தயாராக இருந்தான் ;"

உலூபி அர்ஜுனனை
அழைத்து வந்து கங்கைக்
கரையில் விட்டாள் ;
பிறகு அர்ஜுனனை நோக்கி,
“நீரில் வாழ்பவை
உங்களுக்கு அடிபணியும் ;
தண்ணீரில் உங்களை
யாராலும் வெல்ல முடியாது ;”
என்ற வரங்களை உலூபி
அர்ஜுனனுக்கு அளித்தாள் .

"பிரிந்து செல்லும்
நேரம் வந்து விட்டது ;
அர்ஜுனனின் கண்களும் ;
உலூபியின் கண்களும் ;
வார்த்தைகளின்றி
மௌனத்தின் மூலம்
இறுதியாக பேசிக் கொண்டன ;"

அர்ஜுனன், "நான்
எப்போது மீண்டும்
உன்னை பார்ப்பேன்- என்று
எனக்கே தெரியவில்லை ?
காலம் தான் பதில்
சொல்ல வேண்டும்"
என்ற கேள்விகளை
கண்களில் தாங்கியபபடி
உலூபியைப் பார்த்தான்.

உலூபி ."தாங்கள் எப்போது
திரும்பி வருவீர்கள் என்று
எதிர்பார்த்து உங்கள்
வருகைக்காக நான் என்றும்
உங்கள் நினைவுகளுடன்
காத்துக் கொண்டிருப்பேன் "
என்ற ஏக்கத்துடன்
அர்ஜுனனைப் பார்த்தாள் .

"இருவருடைய பார்வையும்
கேள்விக் குறிகளால்
சந்தித்து முடித்தபின் ;
இருவருமே
ஒருவருக்கொருவர்
மௌனத்தின் மூலம்
விடை பெற்றனர் ;
உலூபி தன்னுடைய
இருப்பிடம் சென்றாள் ;
அர்ஜுனன் எதிர்காலத்தை
நோக்கி தன் பயணத்தை
தொடங்கினான் ;"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
---------- 06-12-2019
//////////////////////////////////////////