January 31, 2020

பரம்பொருள்-பதிவு-120


                பரம்பொருள்-பதிவு-120

அரவான் :
"நான் ஏற்கனவே
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு
களப்பலியாவதாக
வாக்கு
கொடுத்திருக்கிறேன் !"

"அப்படி இருக்கும்
போது நான் எப்படி
பாண்டவர்களுக்காக
களப்பலி
ஆக முடியும்?"

"பாண்டவர்களுக்காக
நான் களப்பலியானால்
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
செய்து கொடுத்த
வாக்கை மீறியவன்
ஆக மாட்டேனா ?"

கிருஷ்ணன் :
"பாண்டவர்களுக்காக
களப்பலியாக வேண்டும்
என்று தான் - நான்
உன்னை கேட்டேனே தவிர
துரியோதனனுக்காக
களப்பலியாக வேண்டாம்
என்று - நான் உன்னை
கேட்கவேயில்லையே?"

அரவான் :
"நீங்கள் சொல்வது
எனக்குப் புரியவில்லை?"

கிருஷ்ணன்  :
"வருகின்ற அமாவாசை
தினத்தன்று தானே
துரியோதனனுக்காக
களப்பலியாவதாக
வாக்கு கொடுத்திருக்கிறாய் "

அரவான் :
"ஆமாம்"

கிருஷ்ணன்  :
"வருகின்ற  அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாகக் கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகு "

அரவான் :
"அது எப்படி சாத்தியம்?"

கிருஷ்ணன்  :
"யோசித்துப் பார்த்தால்
எல்லாமே சாத்தியம் தான்"

"சாத்தியமாகாதது என்று
எதுவுமே - இந்த
உலகத்தில் இல்லை"

"ஒரு விஷயத்திற்காக
ஒரு நாள் குறித்து
அந்த நாளை
ஒருவர் பயன்படுத்திக்
கொள்வதற்காக
ஒரு வாய்ப்பு கொடுத்து
அந்த வாய்ப்பைப்
பெற்றவர்
அந்த  வாய்ப்பைப்
பயன்படுத்திக்
கொள்வதற்காக
வரவில்லையென்றால்
வாய்ப்பு
கொடுக்கப்பட்டவருக்கு
அடுத்து யார் இருக்கிறாரோ
அவருக்கு
அந்த வாய்ப்பை
வழங்குவது தானே
உலக நடைமுறை ;

அந்த உலக
நடைமுறையின்
படியே தான்
நான் கேட்கிறேன் ;
வருகின்ற அமாவாசை
தினத்தன்று
துரியோதனன் உன்னை
களப்பலியாக கேட்டு
வரவில்லையென்றால்
பாண்டவர்களுக்காக
களப்பலியாகிறேன்
என்று வாக்கு கொடு
அது போதும்."

அரவான் :
“நான் வாக்கு
கொடுப்பதினால் - எனக்கு
எந்தவிதமான நன்மைகளும்
ஏற்படப் போவதாகத்
தெரியவில்லையே ?”

“வருகின்ற அமாவாசை
தினத்தன்று பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வரவில்லை
என்றால் தானே
பாண்டவர்களுக்காக-நான்
களப்பலியாக முடியும் ;
எனக்கு வருங்காலத்தில்
நல்ல பெயர் கிடைக்கும் ”

“ஆனால், பெரிய தந்தை
துரியோதனன் அவர்கள்
களப்பலியாக என்னைக்
கேட்டு வந்து விட்டால்
அவருக்கு தானே - நான்
களப்பலியாக முடியும் ;
அப்படி என்றால்
வருங்காலத்தில் எனக்கு
கெட்ட பெயர்
தானே ஏற்படும் ;”

“பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாகாமல்
தடுப்பதற்கு நீங்கள்
எந்தவிதமான உபாயமும்
சொல்லவே இல்லையே?”
பெரிய தந்தை
துரியோதனன்
அவர்களுக்கு நான்
களப்பலியாவது
தடுக்கப்படவில்லையே !”

கிருஷ்ணன்  :
“அரவான் ஒன்றை
நன்றாக ஞாபகம்
வைத்துக் கொள் ;
இந்த உலகத்தில்
நடக்கக் கூடியவைகள்
எவற்றையும் தடுத்து
நிறுத்த முடியாது ;
மாற்றி அமைக்கத்
தான் முடியும் ;”

“துரியோதனனுக்காக-நீ
களப்பலியாவதை
தடுத்து நிறுத்த-நான்
முயற்சி செய்யவில்லை ;
துரியோதனனுக்காக
செய்யவிருக்கும்
உன்னுடைய களப்பலியை
பாண்டவர்களுக்கு
மாற்றி அமைக்கத் தான்
நான் முயற்சி செய்து
கொண்டிருக்கிறேன் ;”

----------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்

------------31-01-2020
//////////////////////////////////////////