November 12, 2018

திருக்குறள்-பதிவு-47


                      திருக்குறள்-பதிவு-47

இரண்டாயிரம்
வருடங்களுக்கு முன்
இயேசு கிறிஸ்து
இந்த உலகத்தில்
தோன்றி மனிதன்
மனிதனாக இருந்து
மனிதனை
மனிதன் நேசித்து
ஒருவொருக்கொருவர்
ஒத்தும் உதவியும்
வாழ வேண்டும்
என்பதற்காக
வாழ்க்கை
நெறிமுறைகளை
இந்த உலகத்திற்கு
அளிக்க
தன் இரத்தத்தை
சிந்திய
இறை மகனாம்
பிதாவின் குமாரனாம்
இயேசு கிறிஸ்துவின்
போதனைகள் கொண்டு
உருவானது தான்
கிறிஸ்தவ மதம்

கிறிஸ்தவ மதம்
நாளடைவில்
ஐரோப்பா முழுவதும்
வேகமாகப் பரவி
அதனுடைய
தலைமையகம்
இத்தாலி நாட்டிலுள்ள
ரோம் நகரில்
நிறுவப்பட்டது
அதன் தலைவராக
இருப்பவர் போப்

உலகம் எங்கும்
வாழும்
கோடிக்கணக்கான
கத்தோலிக்க
கிறிஸ்தவர்களின்
தலைவராக இருப்பவர்
தான் போப்

கத்தோலிக்க கிறித்துவ
திருச்சபையின்
தலைவர் என்ற
முறையில்
திருத்தூதர்களின்
பாரம்பரியத்திற்கு ஏற்ப
கிறிஸ்தவர்களின்
வாழ்க்கை ஒழுங்குகளை
புதுப்பிக்கவும்
மாற்றி அமைக்கவும்
போப்புக்கு
அதிகாரம் உண்டு

அதனால் ஆதியில்
இயேசு கிறிஸ்து
எந்த கருத்தை
கூறியிருந்தாலும்
அதற்கு போப் என்ன
விளக்கம் கூறினாலும்
அத்தகைய
விளக்கத்தைக்
கொண்டதே
கிறிஸ்தவ மதம்
என்று உலக மக்கள்
நம்பி வந்தனர்

அதனால் போப்
கூறும் விளக்கத்திற்கு
எதிராக விளக்கம்
கூறுவதும்;
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக நடந்து
கொள்வதும்;
பைபிளில் சொல்லப்
பட்டவைகளுக்கு
எதிராக கருத்து
சொல்வதும்;
குற்றமென
சொல்லப்பட்டது

அந்த குற்றத்தைச்
செய்பவர்களைத்
தண்டித்து ஆண்டவனின்
காலடியில் சேர்ப்பதற்காக
1232-ம் ஆண்டில்
இன்குஷீஷன் என்ற
பெயருடைய
கிறிஸ்தவ
விசாரணை சபை
அமைக்கப்பட்டது

அந்த விசாரணை
சபையானது செய்து
வந்த செயல்கள்
அனைத்தும்
வார்த்தைகளால்
சொல்லக்கூடிய
நிலையில் இருக்காது

கிறிஸ்த மதக்
குருக்கள்மார்
தங்களுடைய
அபிப்ராயங்களை
ஏற்றுக்
கொள்ளாதவர்களை
எல்லோரையும் பிடித்து
சிறையில் அடைத்தும்;
சித்திரவதை செய்தும்;
உயிரோடு தீயிட்டுக்
கொளுத்தியும்;
வந்தார்கள்

அதனால் அந்த சபை
உலக சரித்திரத்தில்
இது போன்று கொடிய
சபை கிடையாது
என்று பெயர்
வாங்கியது

அந்தக் காலத்தில்
அந்த சபையின்
பெயரைக்
கேட்டால் போதும்
அன்னையின்
வயிற்றிலுள்ள
சிசு கூட அழுது
அடங்கி விடும்
என்று கூறுவார்கள்

அத்தகைய
சபை தான்
1633-ஆம் ஆண்டு
ஜுன் மாதம்
22-ம் தேதி காலையில்
ரோமபுரியில் மினர்வா
மடாலயத்தில்  கிறிஸ்தவ
மத விசாரணை சபை
கூடி கலிலியோவை
விசாரிக்க காத்துக்
கொண்டு இருந்தது

இத்தகைய நினைத்து
கூடபார்க்க முடியாத
தன்மைகளைகத்
தன்னுள் கொண்ட
கிறிஸ்தவ மத
விசாரணை சபையில்
வீற்றிருந்த மத
குருக்கள்
முன்னிலையில்
குற்றவாளி என
குற்றம் சாட்டப்பட்ட
கலிலியோ நேரில்
வந்து ஆஜரானார்

---------  இன்னும் வரும்
---------  12-11-2018
///////////////////////////////////////////////////////////