October 11, 2020

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-7

 

பதிவு-7

 

நான் அமர்ந்து

கொண்டிருந்தேன்

சிறிது நேரம் சென்று

கொண்டிருந்தது

அப்பா முணக

ஆரம்பித்தார்

நான் அருகில் சென்றேன்

சிறிது சிறிதாக

கண்களைத்

திறந்தார் அப்பா

பொறுமையாக

பேசத் தொடங்கினார்

 

“பிறந்த நாள் அன்று

HOSPITAL

வந்து விட்டோம்

என்று கவலைப்

படுகிறாயா?”

என்று என்னைப்

பார்த்து கேட்டார்

 

“இல்லை” என்றேன்

 

என் அப்பா கண்களை

மூடி உறங்கி விட்டார்

நான் எழுந்து

கிளம்ப முயன்றேன்

 

என்னுடைய அம்மா

“NIGHT ல எங்கே

போகிறாய்” என்றார்

 

“DOCTOR கூப்பிட்டார்

நான் அவரைப்

பார்க்க வேண்டும்”

என்று பொய்

சொல்லி விட்டு

கிளம்பி விட்டேன்

 

அந்த அறையை

விட்டு வெளியே

வந்தேன்

அந்த HOSPITAL ல்

இரவு நேரத்தில்

இறந்த உடல்களை

வெளியே அனுப்பி

வைப்பார்கள்

 

இறந்த உடலை

ஸ்ட்ரெச்சரில் வைத்து

தள்ளிக் கொண்டு

போகும் போது

நாலைந்து பேர்கள்

அந்த உடலைச்

சுற்றி அழுத வண்ணம்

சென்று கொண்டு

இருந்தார்கள்

 

வாழ்க்கை என்பது

இவ்வளவு தான்

என்று நினைத்துக்

கொண்டே நடந்து

சென்று கொண்டிருந்த

போது தான்

என்னுடைய

கையும் காலும் வலித்தது

விபத்து நடந்து

முடிந்த பிறகு

நான் என்னுடைய

காயத்திற்கு

மருந்து போடவில்லை

என்பது அப்போது

தான் தெரிந்தது

 

நான் மருந்து

போட்டுக் கொண்டு

அந்த HOSPITAL

எதிரே வெளியே

வந்து அமர்ந்தேன்

 

வானத்தில் இருந்த

நிலாவைப் பார்த்தபடி

அமர்ந்து கொண்டு

இருந்தேன்

 

என்னுடைய

அப்பா சொன்னது

என்னுடைய

ஞாபகத்திற்கு

வந்தது

 

“பிறந்த நாள்

கோயிலுக்குப்

போக வேண்டும்”

 

“HOSPITAL

போகக்கூடாது”

 

“யாரிடமும்

திட்டு வாங்கக்கூடாது”

 

என்னை அறியாமல்

என் கண்களிலிருந்து

கண்ணீர் வழிந்தது

அதை

துடைக்காமலேயே

நான் அந்த

நிலாவையே பார்த்துக்

கொண்டு இருந்தேன்

 

என்னுடைய மனதை

விட்டு நீங்காத

நினைவுகளில்

இதுவும் ஒன்று

 

எனக்கு அலுவலகத்தில்

ஏற்பட்ட பிரச்சினை

மன வருத்தம்

ஆகியவற்றின்

காரணமாக

10102020 அன்று

நான் பிறந்த நாள்

கொண்டாடவில்லை

யாரையும் வீட்டிற்கு

வர வேண்டாம் என்று

சொல்லி விட்டேன்

 

ஆனால் என்னுடைய

நண்பன் கார்த்திக்

பல வருடங்கள்

கழித்து என்னுடைய

பிறந்தநாளுக்கு

என்னைத் தேடி வந்தான்

அவனுடன் வெளியே

சென்ற நான்

10102020-ம் தேதி

சனிக்கிழமை

என்னுடைய

பிறந்தநாள் அன்று

எடுத்துக் கொண்ட

புகைப்படங்கள்

தான் இவைகள்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////



















10-10-2020-பிறந்த நாள்-பதிவு-6

 

பதிவு-6

 

அப்பாவை நன்றாக

பார்த்துக் கொள்ள

வேண்டும் என்ற

எண்ணம் உனக்கு

இல்லையா

உன்னுடைய அப்பாவை

இப்படியா

பார்த்துக் கொள்வது

இது தான் உன்னுடைய

அப்பாவை நீ

பார்க்கும் முறையா

 

உடல்நிலை

சரியில்லாமல்

இருப்பவர்களை

எப்படி பார்க்க

வேண்டும் என்பது

உனக்குத் தெரியாதா

 

உன்னுடைய

அப்பாவை எப்படி

பார்த்துக் கொள்ள

வேண்டும் என்பதைப்

பற்றி நாங்கள் உனக்கு

சொல்லிக் கொடுத்து

இருக்கிறோம் அல்லவா

 

நாங்கள் குறிப்பிட்ட

தேதியில் வரச்சொல்லி

அந்த தேதியில்

வரவில்லை என்றால்

உன்னுடைய அப்பாவிற்கு

உடல்நிலைக்கு

ஆபத்து என்று பலமுறை

உனக்கு சொல்லி

இருக்கிறோம் அல்லவா

 

ஒரு நாளும் நாங்கள்

சொல்வதை நீ

சிந்தித்துப் பார்ப்பதில்லை

செய்த தவறையே

திரும்ப திரும்ப

செய்கிறாய்

 

நான் என்ன சொல்வது

என்றே தெரியவில்லை

 

மீண்டும் இது மாதிரி

நீ செய்தால்

நான் எங்களுடைய

HOSPITAL –ல்

சேர்த்துக் கொள்ள

மாட்டேன்

 

என்று தொடர்ந்து

சில மணித்துளிகள்

திட்டிக் கொண்டிருந்து

விட்டு சரி போங்கள்

மீண்டும் இது மாதிரி

செய்தால்…….-?”

என்று நிறுத்தி விட்டு

நீங்கள் போகலாம்

என்றார்.

 

நானும் என்னுடைய

நண்பனும் அமைதியாக

இருந்து விட்டு

அந்த அறையை விட்டு

வெளியே வந்தோம்

 

நண்பன் என்னிடம்

கேட்டான் நாம் தான்

காசு தருகிறோம்

அப்புறம் ஏன் டாக்டர்

நம்மை திட்டுகிறார்

TREATMENT

செய்ய சொன்னால்

செய்ய வேண்டியது

தானே நம்மை

திட்டுவதற்கு அவருக்கு

யார் அதிகாரம்

கொடுத்தது என்றான்

 

“ஒருவர் கோபப்படுகிறார்

என்றால்

அவர் கோபப்படுகிறார்

என்று சொல்லக்கூடாது

கோபப்படுபவர்

நிலையில்

இருந்து பார்க்க

வேண்டும்

அவ்வாறு

பார்த்தால் மட்டுமே

அவர் எதற்காக

கோபப்படுகிறார்

என்பது தெரியும்

அப்பாவை

ஆரம்பத்தில் இருந்து

பார்ப்பவர் அவர் தான்

அப்பாவின்

உடல்நிலையைப் பற்றி

நன்றாக அறிந்தவர்

அவர் கோபப்படுவதில்

காரணம் இருக்கிறது

நான் கோபப்பட்டால்

தான் தப்பு”

என்றேன்

 

DIALYSIS முடிந்து

அப்பாவை ROOM ‘க்கு

கொண்டு சென்று

விட்டார்கள் நானும்

என்னுடைய நண்பனும்

அந்த அறைக்குள்

சென்றோம்

 

அந்த அறைக்குள்

அப்பா மயக்க நிலையில்

படுத்துக் கொண்டிருந்தார்

அம்மா அருகில்

அமர்ந்து கொண்டிருந்தார்

 

கார்த்தி நேரம் 

ஆகி விட்டது

கிளம்பு என்றேன்

அவனும் சரி பாலா

ஏதாவது உதவி

தேவைப்பட்டால்

உடனே எனக்கு

போன் பண்ணு - நான்

வந்து விடுகிறேன்

என்று சொல்லி

விட்டு சென்று

விட்டான்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-5

 

பதிவு-5

 

உடனடியாக

DIALYSIS நடக்கும்

அறைக்கு கூட்டிச்

சென்றார்கள்

ஒரு NURSE வந்து

ADMISSION

போட்டு விட்டு

DIALYSIS

அறைக்கு வாருங்கள்

என்றார்

 

நானும் என்னுடைய

நண்பனும் ADMISSION

போட்டு விட்டு

DIALYSIS

அறைக்கு வந்தோம்

அங்கே

அப்பாவிற்கு

DIALYSIS நடந்து

கொண்டிருந்தது

 

DIALYSIS

IN CHARGE

AND MANAGER

என்னைக் கூப்பிட்டார்

நான் சென்றேன்

 

அந்த அறையில்

வைத்து அவர்

பேசத் தொடங்கினார்

 

INCHARGE

“ஏற்கனவே உனக்கு

நாங்கள் பலமுறை

சொல்லி விட்டோம்

DIALYSIS

பண்ணுவதற்கு நாங்கள்

என்றைக்கு வர

வேண்டும் என்று

சொல்கிறோமோ

அப்போது வர வேண்டும்

அவ்வாறு வராமல்

உன் விருப்பபடி

வருவதற்கு

இது என்ன

CINEMA THEATRE ஆ

 

நீ படித்தவன்

தானே இது

மாதிரி செய்யலாமா

 

இப்போது என்ன

நடந்திருக்கிறது

உன்னுடைய

அப்பாவிற்கு

நினைவு எப்போது

திரும்பும் என்று

சொல்ல முடியாது

இக்கட்டான

சூழ்நிலையில்

கொண்டு வந்து

நிறுத்தியிருக்கிறாய்

என்று திட்டியபடியே

அந்த அறையில் அவர்

போட்ட சத்தம்

அந்த அறையில்

உள்ளவர்கள் மட்டுமின்றி

வெளியே நின்று

கொண்டிருந்தவர்களுக்கும்

கேட்டது

 

நான் எதுவும்

சொல்லாமல்

அமைதியாக

அவர் திட்டுவதை

கேட்டுக் கொண்டிருந்து

விட்டு அவர் திட்டி

முடித்தபின் அந்த

அறையை விட்டு

வெளியே வந்தேன்

 

ஒரு நர்ஸ் என்னை

தேடி வந்தார்

“சார் உங்களை

CHIEF DOCTOR

கூப்பிடுகிறார்”

என்றார்

 

 “நீ போய் விட்டு

வா நான் இங்கே

அம்மாவையும்

அப்பாவையும்

பார்த்துக்

கொள்கிறேன்”

என்று என்னுடைய

நண்பன் சொன்னான்

 

“டேய்

உள்ளே போய்

நான் மட்டும் தானே

திட்டு வாங்கினேன்

டாக்டரிடமும் நான்

மட்டும் தான்

திட்டு வாங்க

வேண்டுமா?

தனியாக என்னால்

திட்டு வாங்க

முடியாது

நீயும் வா”

என்றேன்.

 

“சரிவா”

என்று\ என்னுடைய

நண்பனும் என்னுடன்

கிளம்பி விட்டான்

 

CHIEF DOCTOR

முன்னால் நானும்

என்னுடைய நண்பனும்

அமைதியாக நின்று

கொண்டிருந்தோம்

 

CHIEF DOCTOR

“பாலா ஏன்

இவ்வாறு செய்கிறாய்

நாங்கள் சொல்வதை

எதுவும் செய்யக்

கூடாது என்று

முடிவில் இருக்கிறாயா

நாங்கள் சொல்வதை

ஏன் செய்ய

மாட்டேன் என்கிறாய்

உன் மனதுக்கு

என்ன தோன்றுகிறதோ

அதைத் தான்

செய்கிறாய்

இதே தவறை

பலமுறை

செய்திருக்கிறாய்

நீ செய்த தவறான

செய்கையினால்

இப்போது உன்னுடைய

அப்பா என்ன

நிலையில் இருக்கிறார்

என்று பார்த்தாயா

 

உன்னுடைய அப்பாவிற்கு

நினைவு எப்போது வரும்

என்று சொல்ல முடியாது

என்ற நிலை தான்

இப்போது இருக்கிறது

 

இந்த நிலைக்கு

யார் காரணம்

நீ தானே காரணம்

 

நான் பலமுறை

உன்னிடம் WARNED

பண்ணி இருக்கேன்

இது மாதிரி

செய்யாதே என்று

ஏன் நாங்கள்

சொன்னால்

அந்த தேதியில்

வரமாட்டாயா

 

என்ன நினைத்துக்

கொண்டிருக்கிறாய்

ஒவ்வொரு முறையும்

கூட்டிக் கொண்டு

வராததற்கு ஏதாவது

காரணம் சொல்கிறாய்

 

ஒவ்வொரு நாள்

ஒரு காரணம்

சொல்கிறாய்

இன்று என்ன

காரணம்

வைத்திருக்கிறாய்

என்ன சொல்லப்

போகிறாய் என்று

எனக்குத் தெரியாது

அதை கேட்கவும்

நான் விரும்பவில்லை

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////

10-10-2020-பிறந்த நாள்-பதிவு-4

 

பதிவு-4

 

நீங்கள் இருவரும்

REST எடுத்து விட்டு

செல்லுங்கள் என்றார்கள்

சிறிது நேரம் கழித்து

எனக்கு மயக்கம்

தெளிந்து நான்

NORMAL நிலைக்கு

வந்து விட்டேன்

என்னுடைய நண்பன்

கார்த்திக்கிற்கும்

நினைவு வந்து விட்டது

ஆனால் தரையில்

என்னுடைய கையும்

காலும் தேய்ந்ததால்

ஏற்பட்ட காயங்களால்

வலி உயிரை எடுத்தது

 

என்னுடைய நண்பனுக்கும்

உடல் முழுவதும்

காயங்கள்

அவனும் அவ்வாறே

வேதனைப் பட்டுக்

கொண்டிருந்தான்

 

வண்டிக்கு ஒரு சில

சேதங்களைத் தவிர

பெரிய வகையில்

சேதம் எதுவும் இல்லை

 

நான் கார்த்திக்கிடம்

கேட்டேன்

டேய் இப்போது

தான் உனக்கு கல்யாணம்

ஆகியிருக்கு இப்படி

பண்ணி விட்டாய்

உனக்கு ஏதாவது

ஆகி இருந்தால்

நான் என்ன

பண்ணுவேன்

எனக்கு உதவி பண்ண

வந்து உனக்கு இப்படி

ஆகி விட்டது என்றேன்

 

அந்த நேரத்திலும்

என்னுடைய நண்பன்

சொன்னான்

“என்னுடைய

பொண்டாட்டிக்கு

தாலி STRONG ஆக

கட்டியிருக்கேன்

அது அவ்வளவு

சீக்கிரத்தில்

அறுந்து விடாது

நான் அவ்வளவு

எளிதில்

சாக மாட்டேன்

 

அது மட்டுமல்ல

பாலா நாம்

போவது நல்ல

விஷயத்திற்கு

போகிறோம்

நாம் நல்ல விஷயம்

செய்ய போகிறோம்

நம்மை கடவுள்

சாக விட மாட்டார்

ஏன் நம்மை கடவுள்

தான் நம்முடைய

உயிரை காப்பாற்றினார்

என்று நினைத்துக்

கொள்ளேன்”

என்றான்

 

சரி ஜோக் அடிக்காதே

நாம் வண்டியை ஓரமாக

விட்டு விட்டு

ஆட்டோவில்

சென்று விடுவோம்

சரியா என்றேன்

 

வேண்டாம்

நாம் வண்டியில்

செல்வோம்

என்னால் வண்டியை

ஓட்ட முடியும்

என்று சொன்ன

காரணத்தினால்

நானும் என்னுடைய

நண்பன் கார்த்திக்கும்

BESANT NAGAR -ல்

இருந்து PERAMBUR

வந்தோம்

நாங்கள் தங்கி இருந்த

QUARTERS வந்தோம்

கீழே கார் நின்று

கொண்டிருந்தது

இப்போது தான்

சார் வந்தேன் என்றார்

கார் டிரைவர்

 

AD-22 நாங்கள்

தங்கி இருந்த

வீட்டிற்குள் நுழைந்தோம்

படுக்கையறையில்

படுத்துக் கொண்டிருந்த

என்னுடைய அப்பாவை

பார்த்தபடியே என்னுடைய

அம்மா அழுது

கொண்டிருந்தார்

 

நான் உள்ளே

நுழைந்ததும்

என்னுடைய அம்மா

என்னைக் கட்டிப்

பிடித்துக் கொண்டு

ஓ வென அழுத்

தொடங்கி விட்டார்

அப்பாவைப் பாருடா

அப்பாவைப் பாருடா

என்றார்

என்னுடைய அருகில்

என்னுடைய நண்பன்

நின்று கொண்டிருந்தான்

 

நான் சென்று

அப்பாவைப் பார்த்தேன்

உயிர் இருந்தது

அப்பா நன்றாகத் தான்

இருக்கிறார்

மயக்கத்தில் இருக்கிறார்

உடனே HOSPITAL

போவோம் என்று

கிளம்பினோம்

 

அப்பாவை நானும்

என்னுடைய நண்பர்

கார் டிரைவர் ஆகிய

அனைவரும்

தூக்கிக் கொண்டு

காரில் உட்கார

வைத்து விட்டு

HOSPITAL

நோக்கி சென்று

கொண்டிருந்தோம்

 

வண்டி HOSPITAL

வாசலில் போய்

நின்றது

EMERGENCY என்ற

காரணத்தினால்

ஸ்ட்ரெச்சர்

கொண்டு வந்து

அவரை படுக்க

வைத்து கூப்பிட்டு

போனார்கள்

 

---------என்றும் அன்புடன்

---------K.பாலகங்காதரன்

 

------11-10-2020

//////////////////////////////////////////////