August 27, 2019

பரம்பொருள்-பதிவு-56


                    பரம்பொருள்-பதிவு-56

 “எந்த ஒரு சக்தியும்
வெளிப்பட வேண்டும்
என்றால் - அதற்கு
ஏதேனும் ஒரு
உருவம் தேவை ;
எந்த ஒரு உருவமும்
இல்லாமல் எந்த
ஒரு சக்தியும்
வெளிப்பட முடியாது ;
என்ற விதியை
பல நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
மெய்ஞ்ஞானத்தின்
மூலமாக கண்டுபிடித்த
இந்தியாவில் உள்ள
நம்முடைய முன்னோர்கள் ;
இந்த விதியைப் பின்பற்றி
இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிறைந்து
இருக்கக்கூடிய
உருவம் இல்லாத
கடவுள் சக்தியை ;
உருவம் உடைய
கடவுள் சிலைகளின் ;
மூலமாக வெளிப்படவைத்து
பக்தர்களின்
தேவையை பூர்த்தி
செய்யும் வகையில்
கடவுள் சிலைகளை
இந்து மதக் கோயில்களில்
வடிவமைத்து வைத்தார்கள்”

“அதாவது
உருவம் இல்லாத
கடவுள் சக்தியானது;
உருவம் உடைய
கடவுள் சிலைகளின்
மூலமாக வெளிப்படுகிறது;”

“உருவம் இல்லாத
சக்தியானது
வெளிப்படுவதற்கு உருவம்
உடைய ஏதேனும் ஒன்று
தேவைப்படுகிறது
என்ற விதியை பல
நூற்றாண்டுகளுக்கு
முன்பாகவே
மெய்ஞ்ஞானத்தின் மூலமாக
கண்டுபிடித்த நம்முடைய
முன்னோர்கள் அதை
இந்து மதக் கோயில்களில்
கடவுள் சிலைகளில்
பயன்படுத்தி
இருப்பதைப் பார்த்து ;
வியந்த விஞ்ஞானம்
அதனை அப்படியே
காப்பி அடித்து
உருவம் இல்லாத
மின்சாரத்தை
உருவம் உடைய
மின்விசிறியின் மூலமாக
காற்றை வெளிப்படுத்தும்
வகையில் கண்டுபிடிப்பை
கண்டு பிடித்தது
இதற்கு ஓர் உதாரணம்;”

“இந்த விதியை
அடிப்படையாக வைத்து
பல்வேறு விதமான
விதிகள் கண்டு
பிடிக்கப்பட்டதுடன் ;
பல்வேறு விதமான
கண்டு பிடிப்புகள்
கண்டு பிடிக்கப்
பட்டுள்ளன ; “

“இந்தியாவில்
நம்முடைய முன்னோர்கள்
மெய்ஞ்ஞானத்தின் மூலம்
கண்டுபிடித்த கண்டுபிடிப்பை
விஞ்ஞானம் காப்பி
அடித்து விட்டு
இந்து மதக் கோயில்களில்
உள்ள கடவுள்
சிலைகள் விஞ்ஞான
ரீதியாக அமைக்கப்
பட்டிருக்கிறது என்கிறது
விஞ்ஞானம் “

“விஞ்ஞான ரீதியாக
அமைக்கப்பட்டிருக்கிறது
என்ற வார்த்தை
சூழ்ச்சி நிறைந்த வார்த்தை;
இந்த வார்த்தை
எதை நிலைநாட்ட
முயல்கிறது என்றால்
மெய்ஞ்ஞானத்தை விட
விஞ்ஞானம் உயர்ந்தது
என்பதையும் ,
மெய்ஞ்ஞானத்தை விட
விஞ்ஞானம் காலத்தால்
முந்தியது என்பதையும்,
விஞ்ஞானம் தான்
இந்த உலகத்தில் உள்ள
மக்கள் அனைவருடைய
தேவையையும் பூர்த்தி
செய்கிறது என்பதையும்,
இச்சமுதாயத்தில்
நிலை நாட்டுவதற்கு
விஞ்ஞானம்
முயற்சி செய்கிறது”

“மேலை நாடுகளினால்
கண்டுபிடிக்கப்பட்ட
பெரும்பாலான
கண்டு பிடிப்புகள்
அனைத்தும் இந்திய
இலக்கியங்களிலிருந்து
காப்பி அடிக்கப்பட்டவை
என்பதை,
இந்திய இலக்கியங்களையும்;
விஞ்ஞானம் கண்டு
பிடித்ததாக சொல்லும்
கண்டுபிடிப்புகளையும்;
ஒன்றாக ஒப்பிட்டு
ஆராய்ந்து பார்த்தால்
உண்மை தெள்ளத்
தெளிவாக தெரியும் ;”

“எந்த ஒரு சக்தியும்
வெளிப்பட வேண்டும்
என்றால் - அதற்கு ஒரு
உருவம் தேவை
என்பதை உணர்ந்திருந்த
சித்தர்கள்
முக்தி நிலையை
நோக்கி சென்று
கொண்டிருப்பவர்கள்
ஞானம் அடைந்தவர்கள்
ஆகிய அனைவரும்
பிரபஞ்சம் முழுவதும்
நிறைந்து இருக்கக்கூடிய
உருவம் இல்லாத
கடவுள் சக்தியை
உருவம் உடைய
தன்னுடைய உடலில்
இணைத்ததின் விளைவாக
அவர்கள் தங்களுடைய
தேவையை பூர்த்தி
செய்து கொண்டார்கள்”

“இத்தகைய செயலை செய்ய
இயலாதவர்களுக்காக
கட்டப்பட்டு
உருவாக்கப்பட்டது தான்
இந்து மதக் கோயில்களில்
உள்ள கடவுள் சிலைகள்”

“ அதாவது இந்த பிரபஞ்சம்
முழுவதும் நிறைந்து
இருக்கக்கூடிய
உருவம் இல்லாத
கடவுள் சக்தியை
உருவம் உடைய
கடவுள் சிலைகளின்
மூலமாக பக்தர்களின்
தேவையை பூர்த்தி செய்யும்
வகையில் இந்து மதக்
கோயில்களில்
கடவுள் சிலைகளை
வடிவமைத்து இருக்கிறார்கள் “

-------- இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 27-08-2019
//////////////////////////////////////////////////////////