November 10, 2019

பரம்பொருள்-பதிவு-81


             பரம்பொருள்-பதிவு-81

தர்மர் :
“சட்டத்தை
உருவாக்கிய
எத்தனையோ பேர்
காலத்திற்கு
ஏற்றபடியும் ;
நடைபெற்ற
சூழ்நிலையின்
அவசியத்திற்கு
ஏற்றபடியும் ;
சட்டத்தில்
திருத்தங்கள் செய்து
கொள்வதில்லையா ?
நாமும் காலத்தை
கருத்தில் கொண்டும் ;
நடைபெற்ற
சூழ்நிலையின்
அவசியத்தை
கருத்தில் கொண்டும்;
நாம் வகுத்துக்
கொண்ட சட்டத்தில்
ஏன் திருத்தங்கள்
செய்யக்கூடாது.”

அர்ஜுனன்:
“சட்டத்தை
யாரால் பின்பற்ற
முடியவில்லையோ ?
அவர்கள் தான்
சட்டத்தை
திருத்துவார்கள் ;
சட்டம் தன்னை
பாதிக்கிறது என்று
தெரிந்தவுடன்
தனக்கு தேவைப்படும்
விதத்தில் சட்டத்தை
திருத்துவார்கள் ;
தன்னுடைய
கொள்கைகளை
பிறர் மேல்
திணிக்க வேண்டும்
என்ற காரணத்திற்காக
சட்டத்தை
திருத்துவார்கள்;
தனக்கும் தன்னைச்
சுற்றியுள்ளவர்களுக்கும்
நன்மைகள் ஏற்பட
வேண்டும் என்ற
காரணத்திற்காக
சட்டத்தை
திருத்துவார்கள் ;
எந்தவிதமான
குற்றத்திற்குரிய
தண்டனையையும் தான்
அனுபவிக்கக்கூடாது
என்ற காரணத்திற்காக
சட்டத்தை
திருத்துவார்கள் ;
நாமும் அப்படியே
செய்தால் நமக்கும்
மற்றவர்களுக்கும்
என்ன வேறுபாடு
இருக்கிறது?”
       
“சட்டத்தை மதிக்காமல்
நமக்கு ஏற்றபடி
சட்டத்தை
திருத்திக் கொணடால்
நாளைய வரலாறு
நம்மைப் பார்த்து
எள்ளி நகையாடாதா?
மக்கள் நம்மை
தவறாக நினைக்க
மாட்டார்களா ?
உண்மையைப் பின்பற்றி
வாழ்ந்து கொண்டிருக்கும்
நம்மைப் பார்த்து
வரலாறு சிரிக்காதா?”

“இத்தகைய ஒரு
இழிநிலை நமக்கு
ஏற்படாமல் இருக்க
வேண்டும் என்றால்
நமக்கு நாமே
ஏற்படுத்திக் கொண்ட
சட்டத்தை மீறிய
குற்றத்திற்காக
நான் 12 மாதங்கள்
கண்டிப்பாக
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்லத்
தான் வேண்டும் ;
சட்டத்திற்கு முன்
அனைவரும் சமம்
என்பதை இந்த உலகம்
உணர வேண்டும்
என்றால் நான்
12 மாதங்கள்
கண்டிப்பாக
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்லத்
தான் வேண்டும் ;
எனக்கு ஆசி
கூறி வழியனுப்பி
வையுங்கள்”

தர்மர் :
“அர்ஜுனா
தர்மத்தின் காவலனாக
என்னை இந்த
உலகம் ஏற்றுக்
கொண்டிருக்கும்
என்னிடமே நீ
தர்மத்தைப் பற்றி
உரைப்பதைக்
கேட்கும் போது
தர்மரின் தம்பி
அர்ஜுனனும்
ஒரு தர்மவான்
என்பதை எனக்கு
உணர்த்தி விட்டாய் ;
இதற்கு மேல்
நான் உன்னைத்
தடுக்கப் போவதில்லை ;
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம் செல்ல
அனுமதிக்கிறேன்”

அர்ஜுனன்:
“என்னை ஆசிர்வதித்து
வழியனுப்பி
வையுங்கள் அண்ணா!”

தர்மர் :
“என்னுடைய ஆசி
உனக்கு
என்றுமே உண்டு!
நீ வரும்
வழி நோக்கி - நான்
விழி வைத்து
காத்துக்
கொண்டிருப்பேன்
சென்று வா!”

என்று தர்மர்
தன்னுடைய தம்பி
அர்ஜுனனை வாழ்த்தி
வழியனுப்பி வைத்தார்;
அனைவரிடமும்
விடைபெற்றுக் கொண்டு
அர்ஜுனன்
12 மாதங்கள்
பிரம்மச்சாரியாக
வனவாசம்
செல்லத் தயாரானான்;”

-----------இன்னும் வரும்

-----------K.பாலகங்காதரன்
-----------10-11-2019
//////////////////////////////////////////