January 10, 2019

திருக்குறள்-பதிவு-83


                      திருக்குறள்-பதிவு-83

விசாரணைக் குழு :
“Father Bruno…………..!
நீங்கள் எழுதியுள்ள
அனைத்து
புத்தகங்களையும்
படித்து பார்த்தோம் ;
அதில் நீங்கள்
பைபிளில் சொல்லப்பட்ட
கடவுளின் வார்த்தைக்கு
எதிராக பல்வேறு
கருத்துக்களையும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராக பல்வேறு
கருத்துக்களையும் ;
எழுதி இருப்பதிலிருந்து
நீங்கள் கிறிஸ்தவ
மதத்திற்கும் ;
கிறிஸ்தவ மதம்
நடைமுறைப்
படுத்தி வைத்து
இருக்கும் அனைத்து
நடவடிக்கைகளுக்கும் ;
எதிரானவர் என்பது
உங்களுடைய
எழுத்துக்களில்
இருந்து தெள்ளத்
தெளிவாக தெரிகிறது ”

விசாரணைக் குழு :
“நீங்கள்
மோசஸையும்
இயேசு கிறிஸ்துவையும்
தந்திரக் காரர்கள்
(Magician)
என்றும் அவர்கள்
செய்தவை அற்புதங்கள்
இல்லை என்றும்
நீங்கள் எழுதி
இருக்கிறீர்கள்……..? “

ஜியார்டானோ புருனோ :
“அற்புதம் என்பது
இந்த பிரபஞ்சத்தில்
எல்லா இடங்களிலும்,
எல்லாப் பொருட்களிலும்,
எல்லா உயிர்களிலும்,
நீக்கமற நிறைந்து
விரிந்து , பரந்து,
இணைந்து .
பிணைந்து கிடக்கிறது
அந்த தெய்வீகமான
அற்புதம் ;
தெய்வீகமான
வழியில் தொடர்ந்து
இயங்கிக் கொண்டு
இருப்பதோடு  
மட்டுமல்லாமல் ,
தன்னை இந்த
பிரபஞ்சத்தில்
வெளிப்படுத்திக்
கொண்டே இருக்கிறது. “

விசாரணைக் குழு :
“நீங்கள் தத்துவவாதி
அல்லவா அதான்
புரியாத மாதிரியே
பேசுகிறீர்கள் “

ஜியார்டானோ புருனோ :
“ நான் உண்மையைப்
பேசுகிறேன்
அதனால் தான்
நான் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தம்
உங்களுக்கு
புரியவில்லை……………….?
நீங்கள் உண்மையை
உணர்ந்தால்
நான் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தம் உங்களுக்கு
புரியும்………………………! “

விசாரணைக் குழு :
“ நீங்கள் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தத்தை
புரிந்து கொள்வதற்காக
நாங்கள் இங்கு
வரவில்லை…….?
நாங்கள் பேசும்
வார்த்தைகளின்
அர்த்தத்தை
உங்களுக்கு புரிய
வைக்க வேண்டும்
என்பதற்காகவே
நாங்கள் இங்கு
வந்திருக்கிறோம். “

விசாரணைக் குழு :
“Father Giordano
Bruno…………..!
நாங்கள் அனைவரும்
உங்களுக்கு உதவி
செய்வதற்காகத்
தான் இங்கு
இருக்கிறோம் !
நீங்கள் கிறிஸ்தவ
மதத்தின்  மீதும் ;
கிறிஸ்தவ மதம்
கடைபிடித்து வரும்
நம்பிக்கைகளின்  
மீதும் ;
பைபிளில்
சொல்லப்பட்ட
கருத்துக்களின் மீதும் ;
நீங்கள் நம்பிக்கை
வைத்திருப்பது
உண்மை என்றால்
அந்த நம்பிக்கைக்கு
உரிய தகுந்த
ஆதாரங்களை
எங்களுக்கு நீங்கள்
தர வேண்டும் “

“உங்கள் மேல்
சுமத்தப்பட்டுள்ள
பல்வேறு குற்றச்
சாட்டுக்களுக்கு
இந்த நீதிமன்றம்
ஏற்றுக் கொள்ளும்
வகையில்
நீங்கள் தகுந்த
பதில்களை
அளிப்பதன் மூலம்
உங்களை நீங்கள்
குற்றமற்றவர்
என்பதை நிரூபிக்க
முடியும்
இந்த நீதிமன்றம்
ஏற்றுக் கொள்ளும்
வகையில் நீங்கள்
தகுந்த பதிலை
அளிக்கவில்லை
எனில்………………………..? “

---------  இன்னும் வரும்
---------  10-01-2019
///////////////////////////////////////////////////////////