November 10, 2018

திருக்குறள்-பதிவு-46


                       திருக்குறள்-பதிவு-46

ஐரோப்பாக் கண்டம்
முழுவதும்
கிறித்துவ கத்தோலிக்க
திருச்சபையின்
ஆதிக்கத்தின் பிடியில்
பல நூற்றாண்டுகள்
இருந்த காலகட்டத்தில்;

அவர்கள் வைத்தது
தான் சட்டம்
என்ற நிலையில்
இருந்த காலகட்டத்தில்;

அவர்களை எதிர்த்து
யாரும் கேள்வி
கேட்க முடியாத
நிலையில் இருந்த
காலகட்டத்தில்;

இந்த உலகத்திற்கு
உயர்ந்த கண்டுபிடிப்புகளை
இந்த உலகத்திற்கு
அளிக்க வந்தவர்கள்
கிறித்துவ மதத்திற்கு
எதிராக செயல்படுகிறார்கள்
என்று குற்றம்
சுமத்தப்பட்டு
தண்டிக்கப்பட்டுக்
கொண்டிருந்த
காலகட்டத்தில்;

பைபிளில் உள்ள
கருத்துக்கு எதிராக
தங்கள் கண்டுபிடிப்புகள்
இருந்ததால் கிறித்துவ
கத்தோலிக்க திருச்சபைக்கு
பயந்து பலர்
தங்களுடைய
கண்டுபிடிப்புகளை
வெளியிடவே பயந்து
கொண்டிருந்த
காலகட்டத்தில்;

உயிருக்கு பயந்து
பலர் தங்களுடைய
கண்டுபிடிப்புகளை
வெளியிடாமல்
கண்டுபிடிப்புகளை
மறைத்து வாழ்ந்து
கொண்டிருந்த
காலகட்டத்தில்;

எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
தன்னுடைய உயிரை
துச்சமென மதித்து
தான் கண்டுபிடித்த
கண்டுபிடிப்பு பைபிளில்
சொல்லப்பட்ட கருத்துக்கு
எதிராக இருந்தாலும்;
கிறித்துவ மதத்திற்கு
எதிராக இருந்தாலும்;
எதைப் பற்றியும்
கவலைப்படாமல்
கலிலியோ தான்
கண்டுபிடித்ததை
இந்த உலகத்திற்கு
அளித்தார்

1632-ல்
இரு பிரதான உலக
அமைப்புகள் தொடர்பான
உரையாடல்
(Dialogue Concerning the
Two Chief World
Systems)
என்றழைக்கப்பட்ட
புத்தகம் ஒன்றை
வெளியிட்டார்
அதில் மூன்று கற்பனைப்
கதாபாத்திரங்கள் பேசிக்
கொள்வது போல்
எழுதினார்

ஒரு கதாபாத்திரம்
டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும்;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக்
கோட்பாடே சரி
என்றும் சொல்லி
கலிலியோவின்
கண்டுபிடிப்புகளைப்
பற்றி அறிவு
பூர்வமாகப் பேசும்

இரண்டாவது கதாபாத்திரம்
கலிலியோவின்
கண்டுபிடிப்புகள் தவறு
என்று சொல்லி
அதை முட்டாள்
தனமாக எதிர்க்கும்

மூன்றாவது கதாபாத்திரம்
நடுநிலையில் நின்று
எது சரி என்றும்
எது தவறு என்றும்
திறந்த மனதுடன்
அவற்றைப் பரிசீலிக்கும்

கலிலியோ இந்த
புத்தகத்தில்
டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும்;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரி என்றும் சொல்லி
அவர் தனது புதிய
தொலைநோக்கி மூலம்
கண்ட கோள்களின்
இயக்கங்களை
பல்வேறு விளக்கங்களுடனும்
சோதனைகளுடனும்
தேவையான ஆதாரங்களை
அனைவரும் ஏற்றுக்
கொள்ளத்தக்க வகையில்
உதாரணங்களுடன் நிரூபித்து
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் சொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரி என்று தெள்ளத்
தெளிவாக விளக்கி
இருந்தார்


கலிலியோவின் புத்தகத்தில்
உள்ள கருத்துக்கள்
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கு எதிராக
இருப்பதாகவும்;
பைபிளை இழிவு
படுத்தும் விதத்தில்
இருப்பதாகவும்;
கிறித்துவ மத
நம்பிக்கைகளுக்கு
விரோதமாக இருப்பதாகவும்;
கிறித்துவ மத
நம்பிக்கையையே தகர்க்கும்
விதத்தில் இருப்பதாகவும்;
சொல்லி கலிலியோவை
குற்றவாளி என
அறிவித்தது
கிறித்துவ கத்தோலிக்க
திருச்சபை

குற்றவாளி என
குற்றம் சுமத்தப்பட்ட
கலிலியோ
குற்றவாளிகளை
விசாரிக்கும்
விசாரணைக்குழு முன்
விசாரணைக்கு
ஆஜராக வேண்டும்
என்று உத்தரவு
இடப்பட்டார்

அவரை விசாரிக்க
அமைக்கப்பட்ட
விசாரணைக் குழு
எப்படிப்பட்ட
தன்மைகளைக்
கொண்டது என்று
தெரிந்தால் அனைவர்
மனமும் பதை
பதைத்து விடும்

---------  இன்னும் வரும்
---------  10-11-2018
//////////////////////////////////////////////////