February 13, 2019

திருக்குறள்-பதிவு-106


                     திருக்குறள்-பதிவு-106

(ஜியார்டானோ புருனோவிற்கு
எதிரான ரோம் நகரத்தின்
ஐந்தாம் கட்ட விசாரணை
தொடங்கியது.

சித்திரவதையினால் உடல்
தளர்ந்து போய் இருந்த
ஜியார்டானோ புருனோவை
இரண்டு காவலர்கள்
கைத்தாங்கலாக பிடித்துக்
கொண்டு ஜியார்டானோ
புருனோவுடன்
நின்று கொண்டிருந்தனர்

கார்டினல் சார்டோரி  
பெல்லரமினோ ஆகியோரும்
கார்டினல்களும் அந்த
அறையில் இருந்தனர்.)

கார்டினல் சார்டோரி :
“ Father ஜியார்டானோ
புருனோ அவர்களே !
உங்களுக்கு வழங்கப்பட்ட
கால அவகாசம்
முடிந்து விட்டது “

“ நீங்கள் சொல்லும்
பதிலுக்காக இந்த
நீதிமன்றம் காத்துக்
கொண்டிருக்கிறது “

“ நீங்கள் மன்னிப்பு
கேட்டு கொள்கிறீர்களா “

ஜியார்டானோ புருனோ :
“நான் என்ன
சொன்னேன்……………..!”

“சூரியனை மையமாக வைத்து
பூமி சுற்றி வருகிறது என்று
தானே சொன்னேன் ; “

“ கிறிஸ்தவ மதத்தின் மூலம்
அரசியலைக் கைப்பற்றி ;
அதிகாரத்தைப் பயன்படுத்தி ;
மக்களை அடிமைகளாக
வைக்க வேண்டாம் என்று
தானே சொன்னேன் ; “

“ மதத்தை அரசியலோடும்
கல்வியோடும் கலக்காதீர்கள்
என்று தானே சொன்னேன் ; “

“ இதில் என்ன
தவறு இருக்கிறது……………………………….?  

“ அன்பையும் கருணையையும்
போதித்து வந்த
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையும் ; சர்ச்சுகளும் ;
இப்போது அன்பையும்
கருணையையுமா
போதிக்கின்றன………………….? “

“ மனிதத் தன்மையை
அழித்து விட்டு
மதத் தன்மையையும்
மத வெறியையும்
தானே போதிக்கின்றன “

“ உண்மையான
கிறிஸ்துவத்தை
போதித்து உண்மையான
கிறிஸ்தவர்களை
உருவாக்காமல்
சிறந்த பேச்சாளர்களையும் ;
கிறிஸ்தவ மதத்தை
வைத்து பிழைப்பு
நடத்துபவர்களையும் ;
தானே உருவாக்கிக்
கொண்டிருக்கின்றன “

“ கிறிஸ்தவ மதம்
சாராத ஒருவரை
கிறிஸ்தவ மதத்திற்கு
மதம் மாற்றி – அதன்
மூலம் கிறிஸ்தவ மதத்தை
வளர்ப்பதற்காகச்
செய்யப்படும் செயல்கள்
அனைத்தும் - கிறிஸ்தவ
மதத்தின் கருத்துக்களை
மக்களிடம் கொண்டு சென்று
அவர்களை நல்வழிப்
படுத்துவதற்கு என்றால்
பரவாயில்லை “

“அவ்வாறு எதுவும்
நடைபெறவில்லை”

“ மாறாக கிறிஸ்தவ
மதத்தின் மூலம் அரசியலை
எப்படி கைப்பற்றுவது ;
அதற்கு தடையாக
வருபவர்களை எப்படி
அழிப்பது என்பதைப் பற்றி
தானே கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையும் ;
சர்ச்சுகளும் ;
போதித்து வருகின்றன ; “

“ கிறிஸ்தவ மதமாற்றத்தின்
மூலம் கிறிஸ்தவ மதத்தை
உலகம் முழுவதும் வளர்த்து ;
அரசியலைக் கைப்பற்றி ;
அரசாள்பவர்களை
கைப்பாவையாக்கி ;
அதிகாரத்தைப் பயன்படுத்தி ;
உலகின் எந்த மூலையில்
எத்தகைய மக்கள்
வாழ்ந்தாலும்
அவர்கள் நீங்கள் இடும்
கட்டளைகளை ஏற்று
நடக்கக்கூடியவர்களாக
மக்களை மாற்றுவதற்கும் ;
நீங்கள் இடும் கட்டளைகள்
சரியானதா ? தவறானதா ?
என்று கூட ஆராய்ந்து
பார்க்காமல் எத்தகைய
செயலையும் செய்யக்கூடிய
மக்களை உருவாக்குவதற்கும் ;
தங்களுடைய சுயஅறிவைக்
கூட பயன்படுத்தாமல் நீங்கள்
இடும் கட்டளைகளை
மட்டுமே ஏற்று நடத்தும்
தலையாட்டி பொம்மைகளாக
மக்களை ஆக்குவதற்கும் ;
நீங்கள் இடும் கட்டளைகளை
மட்டுமே ஏற்று நடத்தும்
விதத்தில் மக்களை
அடிமைகளாக
வைத்திருப்பதற்காக
செய்யப்படும் செயல்களைத்
தானே நான் எதிர்த்தேன்; “

“ கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபையிலும் ;
சர்ச்சுகளிலும் ; நிரம்பியுள்ள
இந்த நிலையைத்தானே
நான் எதிர்த்தேன் ; ”

“ மக்களுக்கு மிகப்பெரிய
பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய
இந்த நிலையைத் தானே
நான் எதிர்த்தேன் ;”

“ அதனால் தான் நான்
செல்லரித்துப்போய்
இருக்கும் இந்த ஓட்டு
மொத்த அமைப்பையும்
மாற்ற வேண்டும்
என்று சொன்னேன் “

“கிறிஸ்தவ மதத்தை
அரசியலுக்கு பயன்
படுத்துபவர்களை
விலக்கி விட்டு அன்பும்,
கருணையும், போதிக்கக்
கூடியவர்களையும் ;
சிறந்த பேச்சாளர்களை
விலக்கி விட்டு  - பைபிளில்
சொல்லப்பட்ட உண்மைகளை
உணர்ந்தவர்களையும் ;
கிறிஸ்தவ மதத்தை வைத்து
பிழைப்பு நடத்துபவர்களை
விலக்கி விட்டு கிறிஸ்தவ
மதத்திற்காக தன்னுடைய
வாழ்க்கையை
அர்ப்பணிப்பவர்களையும் ;
வைத்து கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபையையும் ;
கிறிஸ்தவ மதத்தையும் ;
கிறிஸ்தவர்களையும் ;
வழிநடத்தச் சொன்னேன் ; “

“ இதில் என்ன தவறு
இருக்கிறது “

“ உண்மையைச் சொன்ன
என்னை குற்றவாளி
என்கிறீர்கள்……………………………….? “

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  13-02-2019
//////////////////////////////////////////////