February 16, 2025

ஜபம்-பதிவு-1032 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-10

                                                        அர்ஜுனனைக் கொன்ற

                                           பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-10


அர்ஜுனன் நாகக் கன்னி உலூபியைச் சந்தித்து காதல் செய்து திருமணம் செய்து கொண்ட பிறகு தென்னாட்டினை அடைந்தான்.


திருவேங்கடமலை, திருக்காளத்தி, திருத்தணிகை, திருக்காஞ்சீபுரம்,

திருக்கழுக்குன்றம், திருவண்ணாமலை, திருத்தில்லை,

சீர்காழி, புள்ளிருக்குவேளூர், மாயூரம், திருவிடைமருதூர்,

திருக்குடந்தை, திருவானைக்கா, திருவாவினன்குடி,

முதலிய திருத்தலங்களை சேவித்துக் கொண்டும்,

பாலாறு, சேயாறு, காவிரி முதலிய நதிகளில் முழுகிக் கொண்டும்,

திருவெண்ணீற்றால் முழுகிய திருமேனியுடன், உருத்திராட்சை அணிந்து,

நமசிவய என்ற ஐந்தெழுத்தை உச்சரித்துக் கொண்டு

மதுரையை அடைந்தான்


பாண்டியன் தலைநகராகிய மணலூர் வந்தடைந்தான் அர்ஜுனன்

பாண்டிய நாட்டிற்குள் காலடி எடுத்து வைத்து விட்டான் அர்ஜுனன்

பாண்டியர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளப் போகிறான் அர்ஜுனன்


வீரத்திற்கு எடுத்துக்காட்டாக இருப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


வீரர்களுக்கு உதாரணமாக இருப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மரணத்தை நேருக்கு நேராக சந்திப்பவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


மாணத்திற்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


நீதிக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


தமிழை வாழ வைக்க தன்னையே எரிக்கக் கூடியவர்கள் பாண்டியர்கள் என்பதையும்,


ஏரும், போரும் தன் இரு கண்களாகக் கொண்டு வாழக் கூடியவர்கள் 

பாண்டியர்கள் என்பதையும்,


மானம் போனால் தன் உயிரையும் விட்டு விடுபவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


அன்புக் காட்டினால் அடங்கிப் போகிறவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


ஆணவத்தைக் காட்டினால் அடக்கி விட்டு போகிறவர்கள்

பாண்டியர்கள் என்பதையும்,


பாண்டியர்களைப் பார்த்து அர்ஜுனன்

இனி தான் தெரிந்து கொள்ளப்போகிறான்


அர்ஜுனனைப் பின்தொடருங்கள் 

நாமும் பாண்டியர்களைப் பற்றித்

தெரிந்து கொள்வோம்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

////////////////////////////////

ஜபம்-பதிவு-1031 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-9

                                                      அர்ஜுனனைக் கொன்ற

                                          பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-9


அனைத்துமாக பரிணமித்து இருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்துமாக இருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்தையும் ஆண்டு கொண்டிருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்தையும் இயக்கிக் கொண்டிருப்பவன் இறைவன் என்ற காரணத்தினால்

அனைத்திற்குள்ளும் இருப்பவன் இறைவன் இருக்கின்றன காரணத்தினால்

செய்யும் செயலில் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

அதனால் உண்டாகும் விளைவில் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

விளைவுக்குரிய பாவ புண்ணியத்திற்குள் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

இடம் நேரம் காலம் சூழ்நிலையைப் பொறுத்து 

ஒருவன் செய்யும் செயலுக்குரிய விளைவில் உண்டாகும்

பாவ புண்ணியத்திற்குரிய பலன்களை

உலகத்தில் எங்கோ ஒரு இடத்தில் இறைவன் அமர்ந்து கொண்டு

வழங்க வேண்டிய அவசியம் இல்லை

அனைத்திற்குள்ளும் இறைவன் இருக்கின்ற காரணத்தினால்

இடம், நேரம், காலம், சூழ்நிலையைப் பொறுத்து பலன்களை

இறைவன் அளித்துக் கொண்டு தான் இருக்கிறார்.


இந்த உண்மைகளை நான் உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால் 

நாம் எந்த ஒரு குற்றச் செயலைச் செய்தாலும்

அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து இருக்கின்ற காரணத்தினால்

நான் செய்த குற்றச் செயலுக்குரிய தண்டனையை 

காலம் எனக்கு வழங்குவதற்கு முன்பாகவே

தண்டனையை நானே அனுபவிக்கத் தீர்மானித்துட்டேன்


நான் செய்த குற்றச் செயலை மறைக்க விரும்பவில்லை

குற்றச் செயலைச் செய்து விட்டு 

அதற்குரிய தண்டனையிலிருந்து தப்பிக்க நான் விரும்பவில்லை


குற்றச் செயலுக்குரிய தண்டனையை அனுபவிக்க முடிவு செய்து விட்டேன்

தண்டனையை அனுபவிக்க நான் வனவாசம் செல்லத் தீர்மானித்து விட்டேன்

அதனால் வனவாசம் செல்ல கிளம்பி விட்டேன்


தர்மர் : நீ வனவாசம் செல்வதை மாற்ற முடியாதா?


அர்ஜுனன் : நடக்கப் போகும் எந்த ஒரு செயலையும் தடுக்க முயற்சி செய்யக் கூடாது நடக்கப் போகும் செயல் எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தினாலும் அந்த செயலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்

அந்த செயலுக்குரிய பாதிப்பை அனுபவித்து விட்டு தான் கடந்து போக வேண்டும்

அப்போது தான் அந்த செயல் கழிந்து போகும்

இல்லை என்றால் அந்த செயலும் கழிந்து போகாது

அது ஏற்படத்த வேண்டிய பாதிப்பும் கழிந்து போகாது


நடக்க வேண்டிய எந்த ஒரு செயலையும் தடுக்கவும் முடியாது

அதனுடைய பாதிப்பிலிருந்து தப்பிக்கவும் முடியாது


நடக்கப் போகும் செயல் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதற்காக

நடக்கப் போகும் செயலை தடுக்க முயற்சி செய்தால்

அந்த செயல் வேறொரு செயலாக வெளிப்பட்டு

அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்

ஆகவே எந்த ஒரு செயலையும் தடுக்க முயற்சி செய்யக்கூடாது

நடக்கும் செயலை அனுபவித்து விட்டுத் தான் கடந்து போக வேண்டும்


தர்மர் : நீ இல்லாமல் நான் இருப்பேனா என்பதை நீ நினைத்துப் பார்த்தாயா. 

உன் பிரிவால் எனக்கு ஏற்படும் கஷ்டத்தை நீ நினைத்துப் பார்த்தாயா

நீ இல்லாமல் நான் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பேன் என்பதை 

நீ நினைத்துப் பார்த்தாயா 


இதை எல்லாம் நீ நினைத்துப் பார்த்து இருந்தால் 

வனவாசம் செல்லப் போகிறேன் என்று நீ சொல்லி இருக்க மாட்டாய்

என்னை தவிக்க விட்டு செல்லப் போகிறேன் என்று

சொல்லி இருக்க மாட்டாய்


அர்ஜுனன் : அண்ணா

நான் இருந்தால் தான் இன்பம் இருக்கும் என்பதும் கிடையாது

நான் இல்லா விட்டால் துன்பம் என்பது உருவாகும் என்பதும் கிடையாது


நான் இருந்தால் தான் குடும்பத்தால் வாழ முடியும் என்பதும் கிடையாது

நான் இல்லா விட்டால் குடும்பத்தால் வாழ முடியாது என்பதும் கிடையாது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும் 

இன்பமும், துன்பமும் இருக்கத் தான் போகிறது


நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும்

இந்த உலகம் இருக்கத் தான் போகிறது

இயங்கத் தான் போகிறது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும்

சூரியன் உதிக்கத் தான் போகிறது மறையத் தான் போகிறது


நான் இருந்தாலும் இல்லா விட்டாலும்

இந்த பிரபஞ்சத்தில் நடக்க வேண்டியது 

நடந்து கொண்டு தான் இருக்கப் போகிறது


அப்படி இருக்கும் போது நான் வனவாசம் செல்வதால் 

ஒரு இழப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை


நான் செல்கிறேன் என்னை வழியனுப்பி வையுங்கள்


தர்மர் : அர்ஜுனா இனி உன்னை யாராலும் தடுக்க முடியாது


கண்டிப்பாக நீ வனவாசம் சென்றே ஆக வேண்டும் என்பதை 

காலம் முடிவு செய்து விட்டது


ஏதோ ஒரு விஷயத்திற்காக 

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


ஒரு உயர்ந்த விஷயத்தை உருவாக்குவதற்காக

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


நல்லதை நடக்க வைக்க

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


தர்மத்தை நிலைநாட்ட

காலம் உன்னை வனவாசம் அனுப்புகிறது


சென்று வா

காலம் என்ன சொல்கிறதோ அதை செய்

காலம் ‘உன்னை வழி நடத்தும்

காலம் உன்னை காப்பாற்றும்

சென்று வா


(அண்ணனிடம் விடைபெற்றுக் கொண்டு அர்ஜுனன் வனவாசம் புறப்பட்டான்)


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1030 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-8

                                                      அர்ஜுனனைக் கொன்ற

                                           பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-8


அர்ஜுனன் : நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று 

எனக்குத் தெரிந்து விட்டது.


எனக்குத் தெரிந்தது இந்த உலகத்திற்குத் தெரிய வேண்டாம்


என்ன வார்த்தை சொல்ல வருகிறீர்கள் என்று யாருக்கும் தெரிய வேண்டாம்


அந்த வார்த்தை உங்களுடனேயே இருந்து விடட்டும்

வெளிப்பட வேண்டாம்


நீங்கள் சொல்ல விரும்பும் வார்த்தைகளை 

நான் மட்டுமல்ல இந்த உலகமும் கேட்க வேண்டாம்


அந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லவே வேண்டாம்  

அந்த வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே வரவே வேண்டாம்


உங்கள் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு விட்டால் 

அது அந்த தர்மத்திற்கே இழுக்காகி விடும்


தர்மம் தலை குனியக்கூடிய நிலை கூட ஏற்பட்டு விடலாம்


தர்மத்தை தலை குனிய வைத்து விடாதீர்கள்


நீங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் செய்யும் செயலைப் பொறுத்து 

பாவமும் புண்ணியமும் உண்டாவதில்லை

நாம் செய்யும் செயலின் விளைவைப் பொறுத்துத் தான்

பாவமும், புண்ணியமும் உண்டாகிறது


ஒருவர் தன்னுடைய நலனைப் பெரிதெனக் கருதாமல்

சுயநலம் கொண்டு வாழாமல்

மற்றவர்களுடைய நலனே பெரிதெனக் கொண்டு

பொதுநலன் கொண்டு பிறருடைய நலனுக்காகவே 

வாழ்ந்து கொண்டிருக்கிறார்


சமுதாயத்தில் பலருக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கிறார்

அவரால் வாழ்வு பெற்றவர்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது 

அத்தகையவரை அத்தகைய சிறப்பு மிக்கவரை

அத்தகைய குணநலன்களைப் பெற்றவரை

நான் கொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்

அவரைக் கொன்றது என்பது ஒரு செயல்


அவர் இறந்ததைக் கண்டு சமுதாயமே வருத்தப்படுகிறது

நல்லவர் இறந்து விட்டாரே என்று 

மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்


நான் செய்த செயலின் விளைவு சோகமாக இருக்கிறது 

எனவே, இது ஒரு பாவச் செயல்


இந்த இடத்தில் நான் ஒருவரைக் கொன்ற செயல் ‘

பாவமா புண்ணியமா என்பதை தீர்மானிக்கவில்லை

நாம் செய்த செயலின் விளைவு தான் 

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கிறது


ஒருவர் தன்னலம் கொண்டு

சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டு 

பிறர் செல்வங்களைக் கொள்ளையடிப்பது

பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது 

பித்தலாட்டம் செய்து பிறரை ஏமாற்றுவது

நன்றாக வாழும் குடும்பங்களைக் கெடுப்பது

என்று பல செயல்களைச் செய்து வருகிறார்

அத்தகையவரை நான் கொல்கிறேன்

அவரை நான் கொல்வது என்பது ஒரு செயல்

இதில் பாவமோ புண்ணியமோ ஏற்படாது


அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும்

பாவி இறந்து விட்டானே என்று சந்தோஷப்பட்டனர்

இறந்தவரை நினைத்து யாரும் வருத்தப்படவில்லை

எத்தனை குடும்பங்களை அழித்தான்

எத்தனை பேர்களின் வாழ்க்கையை கெடுத்தான்

படுபாவி இறந்து விட்டான்

இறந்தது நல்லது தான்

அவனைக் கொன்றது சரிதான்

அவன் சாக வேண்டியவன் தான்

அவனுக்கு சாவு என்பது வர வேண்டும் தான்

அவனைக் கொன்றவன் நன்றாக இருக்க வேண்டும்

என்று மக்கள் சொல்கின்றனர்


செய்த செயலின் விளைவு சந்தோஷமாக இருக்கிறது

எனவே செயலின் விளைவு புண்ணியம் ஆகும்


கொலை என்ற செயல் 

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கவில்லை

செயலின் விளைவு தான்

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கிறது


ஆகவே, நாம் செய்யும் செயலைப் பொறுத்து 

பாவமும், புண்ணியமும் ஏற்படுவதில்லை.

செய்யும் செயலின் விளைவைப் பொறுத்துத் தான்

பாவமும் புண்ணியமும் உண்டாகிறது 


கடவுள் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு

நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்குரிய பலன்களை

வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே தவறான விஷயம்


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1029 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-7

                                                         அர்ஜுனனைக் கொன்ற

                                              பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-7


 (பசுக்களை மீட்டு ஆசிரமத்தில் ஒப்படைத்து விட்டு தன்னுடைய அண்ணன் தர்மரைச் சந்தித்து அர்ஜுனன் பேசுகிறான்)


அர்ஜுனன் : நான் செல்கிறேன்.


தர்மர் : எங்கே செல்கிறாய் ?


அர்ஜுனன் : வனவாசம் செல்கிறேன்.


தர்மர் : எதற்காக செல்கிறாய்?


அர்ஜுனன் : விதிமுறைகளை மீறியதற்காக,


தர்மர் : எந்த விதிமுறைகளைப் பற்றிச் சொல்கிறாய்  


அர்ஜுனன் : நாம் அனைவரும் இணைந்து ஒரு மனதாக உருவாக்கிய விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.


நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டு, கடைபிடித்துக் கொண்டு, செயல்படுத்திக் கொண்டு வரும் விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.


திரௌபதியை பஞ்சபாண்டவர்களாகிய நாம் அனைவரும் 

திருமணம் செய்து கொண்ட பிறகு 

திரௌபதியின் பொருட்டு 

நமக்குள் சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது, 

நமக்குள் பிளவுகள் ஏற்பட்டு விடக்கூடாது, 

நமக்குள் மனவருத்தங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக 

நமக்காக விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டோம் அல்லவா 

அந்த விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.


நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக 

விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டோம் அல்லவா 

அந்த விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.


பஞ்ச பாண்டவர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில் 

ஒரு வருடம் திரௌபதியுடன் குடும்பம் நடத்த வேண்டும்.


அவ்வாறு திரௌபதியுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் 

குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் போது 

அவருக்கு மட்டுமே திரௌபதி மேல் முழு உரிமை உண்டு,

அவருக்கு மட்டுமே திரௌபதி மனைவியாக இருந்து கொண்டிருப்பார்.

அவருக்கு மட்டுமே திரௌபதி மனைவியாக இருந்து 

கணவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் 

செய்து கொண்டிருப்பார்.


அந்த காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கு மட்டுமே 

கணவன் மனைவியாக வாழும் உரிமை உண்டு

மற்ற பஞ்ச பாண்டவர்களுக்கு அந்த உரிமை இல்லை.


அந்த காலகட்டங்களில் பஞ்ச பாண்டவர்களில் உள்ள மற்றவர்களுக்கு 

திரௌபதியின் மேல் எந்தவிதமான உரிமையும் கிடையாது. 


திரௌபதியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவரைத் தவிர்த்து மற்றவர்கள் 

திரௌபதியிடம் எந்தவிதமான உரிமையும் கோரவும் முடியாது. 

கோரவும் கூடாது.


திரௌபதியும், திரௌபதியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் 

பஞ்ச பாண்டவர்களில் ஒருவரும் தனித்து ஒரு அறையில் இருக்கும் போது 

பஞ்ச பாண்டவர்களில் மற்றவர்கள் அந்த அறைக்குள் நுழையக் கூடாது. 

அவ்வாறு நுழைந்தால் அது குற்றச் செயலாகக் கருதப்படும்.


அந்த குற்றச் செயலுக்கு தண்டனையாக 

குற்றம் இழைத்தவர் 12 மாதங்கள் வனவாசம் செல்ல வேண்டும்

வனத்தில் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும் 

என்ற விதிகளை நாரதர் முன்னிலையில் 

பஞ்ச பாண்டவர்களாகிய நாமும், திரௌபதியும்,

கலந்து ஆலோசித்து முடிவு செய்து 

நாம் எதிர்காலத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக 

உருவாக்கப்பட்டது தான் இந்த விதிமுறைகள்


நாரதர் முன்னிலையில் அனைவரின் சம்மதத்துடன்

அனைவரின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்டது தான்

இந்த விதிமுறைகள்


நீங்களும் திரௌபதியும் அறையில் தனிமையில் இருந்த போது

நான் உள்ளே நுழைந்து விட்டேன். நீங்கள் இருவரும் தனிமையில் இருந்த

காட்சியைக் கண்டு விட்டேன்


விதிமுறைகளை மீறிவிட்டேன்

குற்றச் செயலைச் செய்து விட்டேன்

அதற்குரிய தண்டனையை அனுபவித்துத் தானே ஆக வேண்டும்

அதற்கு நான் வனவாசம் போய்த் தானே ஆக வேண்டும்

அதனால் வனவாசம் செல்ல கிளம்பி விட்டேன்


நம்மால் உருவாக்கப்பட்டது தான் விதிமுறைகள் என்றாலும், 

நாம் மட்டுமே உருவாக்கிய விதிமுறைகள் கிடையாது அல்லவா?


நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக 

உருவாக்கப்பட்ட விதிமுறைகள் அல்லவா?


நாரதர் முன்னிலையில் பஞ்ச பாண்டவர்களாகிய நாமும், 

திரௌபதியும் இணைந்து அனைவரின் ஒப்புதலுடன் 

உருவாக்கிய விதிமுறைகள்.அல்லவா?


நாரதர் முன்னிலையில் அனைவரின் சம்மதத்துடன் 

அனைவரின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் அல்லவா?


நம்மால் உருவாக்கப்பட்டது என்றாலும் 

அந்த விதிமுறைகளை நாமே மீறுவது தவறு அல்லவா? 


தர்மர் : பசுக்களை மீட்டுத் தரச் சொல்லி வந்த பிராமணருடைய பசுக்களை மீட்டு வருவதற்காக எங்களுடைய அறையில் நீ வைத்திருந்த உன்னுடைய ஆயுதங்களை எடுப்பதற்காக நானும் திரௌபதியும் தனிமையில் இருக்கும் போது எங்களுடைய அறைக்கு வந்தாய். 


எங்களுடைய அறைக்கு நீ வந்த போது நானும் திரௌபதியும் ஒன்றாக இருந்த நிலையை நீ பார்த்து விட்டாய்.. நீ எங்களைப் பார்த்ததை நான் மட்டுமே பார்த்தேன். திரௌபதி உன்னைப் பார்க்கவில்லை.


நீ விதிமுறைகளை மீறினாய் என்ற விஷயம் நம் இருவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட திரௌபதிக்குக் கூட இந்த விஷயம் தெரியாது.


நாம் இருவரும் சொன்னால் ஒழிய இந்த விஷயம் திரௌபதி உட்பட இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் தெரியாது. 


நாம் இருவரும் சொன்னால் மட்டுமே நீ விதிமுறைகளை மீறினாய் என்ற விஷயம் இந்த உலகத்திற்கே தெரியும்.


அப்படி இருக்கும் போது நீ ஏன் விதிமுறைகளை மீறியதாக எடுத்துக் கொள்கிறாய்


நம் இருவருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்

நாம் இருவரும் வெளியே சொல்லவில்லை என்றால் 

அந்த விஷயம் யாருக்கும் தெரியாது அல்லவா

அதனால் அந்த விஷயத்தை யாருக்கும் .............................


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

ஜபம்-பதிவு-1028 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-6

                                                      அர்ஜுனனைக் கொன்ற

                                          பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-6


சீடன் : ஏன் உங்களுக்கு நாட்டின் மேல் ஆசை இல்லையா? நாட்டின் மேல் ஆசைப்பட்டுத் தானே இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.


நாட்டின் மேல் ஆசை இல்லை என்றால் நாட்டை துரியோதனனிடம் ஒப்படைத்து விட வேண்டியது தானே!


உங்களுக்கும் நாட்டின் மேல் ஆசை அதனால் தான் நீங்களும் கௌரவர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.


அர்ஜுனன் : எங்களுக்கு நாட்டின் மேல் ஆசை கிடையாது. துரியோதனன் நாட்டை ஆட்சி செய்யக் கூடாது என்ற காரணத்தினால் தான் நாங்கள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம்.


ஏனென்றால், துரியோதனனுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரியாது

அப்படியே நாட்டை ஆட்சி செய்தாலும் ஒழுங்காக ஆட்சி செய்ய மாட்டான்

மக்களைப் பாதுகாக்க மாட்டான்


நாட்டை அவனிடம் கொடுத்தால் நாட்டை காடாக்கி விடுவான்

நாங்கள் துரியோதனனிடம் இருந்து நாட்டைப் பாதுகாக்க, 

மக்களைப் பாதுகாக்க நாட்டை நாங்கள் ஆண்டு கொண்டு இருக்கிறோம்.


சீடன் :  நீங்கள் மக்களைச் சரியாக பாதுகாத்து இருந்தால் நான் ஏன் உங்களைத் தேடி வருகிறேன் நீங்கள் மக்களைச் சரியாக பாதுகாக்காத காரணத்தினால் தான்  நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.


துரியோதனன் சரியாக ஆட்சி செய்ய மாட்டான் என்று நீங்கள் எப்படி சொல்கிறீர்கள்

உங்கள் ஆட்சி சரியில்லை

மக்களைப் பாதுகாக்க உங்களுக்குத் தெரியவில்லை

அதனால் துரியோதனனிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு செல்லுங்கள்


துரியோதனன் ஆட்சி செய்யட்டும் ஆட்சி நன்றாக இருக்கிறதா என்று பார்ப்போம்

உங்கள் ஆட்சியை விட அவர் ஆட்சி நன்றாக இருக்கிறதா என்று பார்ப்போம்

அதன் பிறகு முடிவு செய்வோம்

துரியோதனனுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரிகிறதா ?

மக்களைப் பாதுகாக்கத் தெரிகிறதா?

துரியோதனனுடைய ஆட்சியில் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?

என்று பார்போம்.


துரியோதனனை ஆட்சி செய்ய விடாமல் அவருக்கு

ஆட்சி செய்யத் தெரியாது என்று எப்படி சொல்கிறீர்கள்

உங்களுக்கு நாட்டை ஆட்சி செய்யத் தெரியவில்லை

அதனால் நாட்டை துரியோதனனிடம் ஒப்படையுங்கள்

அவர் ஆட்சி செய்யட்டும் அப்புறம் பார்ப்போம்.


அர்ஜுனன் : இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?


சீடன் : நாட்டில் அமைதி வேண்டும்

மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும்

அதற்கு முதற்கட்டமாக கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்ற எங்களுடைய பசுக்களை மீட்டு வந்து எங்களிடம் ஒப்படையுங்கள். 


அர்ஜுனன் : நீங்கள் ஆசிரமத்திற்கு செல்லுங்கள்

நான் உங்கள் பசுக்களை மீட்டு வருகிறேன்

(சீடன் ஆசிரமத்தை நோக்கிச் செல்கிறான். அர்ஜுனன் தர்மரும், திரௌபதியும் இருக்கும் அறைக்குள் நுழைந்து தனது ஆயுதங்களை எடுத்துக் கொண்டு பசுக்களை மீட்டுக் கொண்டு வர செல்கிறான்.)


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1027 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-5

                                                           அர்ஜுனனைக் கொன்ற

                                                   பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-5



ஆனால்., 

நாம் கோபப்படும் போது நாம் பேசும் வார்த்தைகள்

உண்மையான வார்த்தைகளாக மட்டுமே இருக்கும்


பொய்யான வாழ்க்கை வாழும் போது 

நாம் பேசிய பொய்யான வார்த்தைகளுக்கு நேர் எதிராக 

இந்த வார்த்தைகள் இருக்கும்


கோபப்படும் போது அந்த நேரத்தில் 

உண்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு

பிறரைப் பற்றி நாம் உண்மையாக என்ன நினைக்கிறோமோ

அந்த உண்மையான வார்த்தைகளை மட்டுமே பேசுவோம்


பிறரை பெரிய அறிவாளி இல்லை என்று பேசுவோம்

திறமைசாலி இல்லை என்று பேசுவோம்

சிறந்த உழைப்பாளி இல்லை என்று பேசுவோம்

கருணை உள்ளம் இல்லை என்று பேசுவோம்

பிறருக்கு உதவி செய்பவர் இல்லை என்று பேசுவோம்

முட்டாள் என்று பேசுவோம்

ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று பேசுவோம்

பிச்சைக்காரன் என்று பேசுவோம்

இரக்கமே இல்லாதவர் என்று பேசுவோம்


அப்போது இந்த சமுதாயம் கோபப்படாதே என்று சொல்லும்

கோபத்தில் பேசாதே என்று சொல்லும்

கோபம் விட்ட பிறகு பேசு என்று சொல்லும்


கோபத்தில் வார்த்தையை விடாதே 

கோபம் தணிந்த பிறகு பேசு என்று உலகம் சொல்லும்


கோபத்தில் பேசி விட்டால் அதை அள்ள முடியாது 

என்று உலகம் சொல்லும்


கோபத்தில் பேசும் வார்த்தைகள் 

பிறர் மனதை காயப்படுத்தும் என்று சொல்லும்


கோபத்தில் பேசும் வார்த்தைகள் உண்மையில்லை என்று நிரூபிக்க 

இந்த உலகம் முயற்சி செய்யும்

அதனால் கோபத்தில் பேசாதே என்று உலகம் சொல்கிறது


கோபத்தில் நாம் பிறரைப் பற்றி பேசும் வார்த்தைகள் தான் 

உண்மையான வார்த்தைகள் அந்த நேரத்தில் தான் 

நாம் உண்மையான வாழ்க்கையை வாழ்கிறோம் 

என்ற உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்


கோபத்தில் மட்டுமல்ல குடிகாரர்களும்

குடித்து விட்டால் உண்மையைப் பேசி 

உண்மையான வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள் 


குடிகாரர்கள் குடிக்காமல் இருந்தால் பிறரைப் பற்றி

பொய்யாகப் பேசி பொய்யான வாழ்க்கை வாழ்வார்கள்

ஆனால், அதுவே குடித்து விட்டால் அந்த நேரத்தில்

அவர்கள் உண்மையைப் பேசி 

உண்மையான வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள்


அப்போது அவர்கள் பேசும் பேச்சுக்கள் சம்பந்தப்பட்டவரை காயப்படுத்தத் தான் செய்யும்

சம்பந்தப்பட்டவரின் உண்மை வாழ்க்கையை வெளிப்படுத்தத் தான் செய்யும்

சம்பந்தப்பட்டவரின் உண்மை குணநலன்களை வெளிப்படுத்தத் தான் செய்யும்


கோபப்படும் போதும் 

குடித்து விட்டு பேசும் போது தான்

மனிதர்கள் பொய்யாகப் பேசி 

பொய்யான வாழ்க்கையை வாழ மாட்டார்கள்

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள் 

உண்மையைப் பேசி உண்மையான வாழ்க்கை வாழ்வார்கள் 

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

பிறருடைய உண்மையான குணநலன்களை

வெளிப்படுத்திக் காட்டி விடுவார்கள் 

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

பிறர் செய்யும் அட்டூழியங்களையும், அராஜகங்களையும் 

வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவார்கள்

என்ற காரணத்தினால் தான்,


அப்போது தான் அவர்கள்

நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு இருப்பவர்கள்

உண்மையாகவே நல்லவர்கள் இல்லை என்பதை

இந்த உலகத்திற்குப் புரிய வைத்து விடுவார்கள் 

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும்

பலபேருடைய வாழ்க்கையை வெளிக்கொண்டு வந்து விடுவார்கள்

என்ற காரணத்தினால் தான்


அப்போது தான் அவர்கள்

யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருக்கும் 

தங்களுடைய தவறுகளை வெளிப்படுத்தி மானத்தை வாங்கி விடுவார்கள்

என்ற காரணத்தினால் தான்,


அப்போது தான் அவர்கள்

யாரைப் பற்றிப் பேசுகிறார்களோ அவர்களைப் பற்றிய உண்மைகள் 

இந்த வெளி உலகத்திற்குத் தெரிந்து விடக்கூடாது 

என்ற காரணத்தினால் தான்


தங்களைப் பற்றி மறைத்து வைத்திருக்கும் உண்மைகள் 

இந்த உலகம் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற காரணத்தினால் தான்

இந்த உலகத்தில் வெளிப்படக் கூடாது என்ற காரணத்தினால் தான்

குடிகாரர்கள் குடித்து விட்டால் பேசாதே என்று சொல்கிறார்கள்

குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு என்கிறார்கள்


கோபப்பட்டு பேசும் போதும் குடித்து விட்டுப் பேசும் போதும் 

அவர்களை பேச விடாமல் தடுப்பதற்கும்,

பேசக் கூடாது என்று சொல்வதற்கும் 

,இது தான் முக்கிய காரணம்


அர்ஜுனன் : குருதேவர் கடைசியாக என்ன சொன்னார்?


சீடன் : கடைசியாக ஒரு வார்த்தை சொல்லச் சொன்னார்


அர்ஜுனன் : என்ன சொல்லச் சொன்னார்?


சீடன் : தர்மருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்றால் நாட்டை துரியோதனனிடம் ஒப்படைத்து விட்டு காட்டிற்குப் போகச் சொன்னார்.


அர்ஜுனன் : என்ன துரியோதனனிடமா?


சீடன் : ஆமாம்! துரியோதனனிடமே தான்


அர்ஜுனன் : நாட்டின் மேல் ஆசைப்படுபவனிடமே நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்றா சொல்கிறீர்கள்?


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1026 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-4

                                                          அர்ஜுனனைக் கொன்ற

                                               பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-4

                

பாண்டவர்கள் அனைவரும் பேச்சில் தான் வல்லவர்கள்

அவர்களுக்கு நாட்டையும் ஆளத் தெரியாது

மக்களையும் பாதுகாக்கத் தெரியாது

என்று சொல்லச் சொன்னார்


அர்ஜுனன் : கோபத்தில் பேசிய வார்த்தைகள்


சீடன் : உண்மை இருக்காது என்று சொல்கிறீர்களா?


அர்ஜுனன் : கோபத்தில் பேசும் வார்த்தைகள் தன்னை மறந்த நிலையில் பேசுபவை 

அதில் உண்மை இருக்காது.


சீடன் : தன்னை மறந்த நிலையில் பேசும் வார்த்தைகளில் தான் உண்மை இருக்கும்.

அதனால் தான் கோபத்தில் பேசும் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது.


இந்த உலகத்தில் வாழும் மக்கள் அனைவரும்

உண்மையான வாழ்க்கை 

பொய்யான வாழ்க்கை 

என்ற இரண்டு வேறுபட்ட வாழ்க்கை முறைகளைக் கொண்டு 

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.


நாம் பிறரைப் பற்றி உண்மையாகவே என்ன நினைக்கிறோம் என்று 

உண்மையை வெளியே சொல்லி வாழ்ந்தால் - அதற்கு

உண்மையான வாழ்க்கை என்று பெயர்


நாம் பிறரைப் பற்றி உண்மையாகவே என்ன நினைக்கிறோம் என்பதை

வெளியே சொல்லாமல் பொய்யைச் சொல்லி வாழ்ந்தால் - அதற்கு 

பொய்யான வாழ்க்கை என்று பெயர்


இந்த உலகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் 

உண்மையான வாழ்க்கையை வாழ்வதே இல்லை

பொய்யான வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்

இந்த உலகத்தில் உண்மையான வாழ்க்கையை வாழ முடியாது 

பொய்யான வாழ்க்கையைத் தான் வாழ முடியும்


பொய்யான வாழ்க்கையை வாழ்ந்தால் மட்டுமே 

நம்மால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழ முடியும்


உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தால் 

நம்மால் இந்த உலகத்தில் நிம்மதியாக வாழவே முடியாது


நாம் பிறரைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ற 

உண்மையைச் சொல்லாமல் 

பொய் சொல்லி பொய்யான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே

நம்மால் பிறருடன் நட்பாகவும் வாழ முடியும்.

இந்த உலகத்தில் நிம்மதியாகவும் வாழ முடியும்


நாம் பிறரைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்ற

உண்மையைச் சொல்லி 

உண்மையான வாழ்க்கையை வாழ்ந்தால்

நம்மால் பிறருடன் நட்பாகவும் வாழ முடியாது

இந்த உலகத்தில் நிம்மதியாகவும் வாழ முடியாது


நாம் உண்மையைச் சொல்லிக் கொண்டு 

உண்மையான வாழ்க்கை வாழ்ந்தால்

நாம் பிறருடன் சண்டை போடக் கூடிய நிலை தான் ஏற்படும்

உறவுகள் முறிந்து விடக்கூடிய நிலை தான் ஏற்படும்

பிரிவுகள் உண்டாகக் கூடிய நிலை தான் ஏற்படும்.


எனவே, நாம் பிறரைப் பற்றி உண்மையாக என்ன நினைக்கிறோம் என்ற 

உண்மையைச் சொல்லி 

உண்மையான வாழ்க்கையை வாழாமல்

பொய்யைச் சொல்லி 

பொய்யான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே 

நம்மால் பிறருடன் நட்பாகவும் வாழ முடியும்

இந்த உலகத்தில் நிம்மதியாகவும் வாழமுடியும்


நாம் கோபப்பட்டு பேசும் போது தான் 

பிறரைப் பற்றி என்ன நினைத்திருந்தோமோ அந்த உண்மைகளைப் பேசி 

அந்த நேரத்தில் தான் நாம் உண்மையான வாழ்க்கையையே வாழ்வோம்


நாம் கோப்பட்டு பேசும் போது அந்த பேச்சை உன்னிப்பாக கவனித்தால்

நாம் பிறறைப் பற்றி என்ன உண்மையாக நினைத்திருந்தோமோ

அந்த உண்மைகளை வெளிப்படையாகப் பேசுவோம்

அந்த நேரத்தில் தான் நாம் உண்மையான வாழ்க்கையை 

உண்மையாக வாழ்ந்து கொண்டிருப்போம்


இதுவரை பிறரைப் பற்றி பொய்யைப் பேசி 

பொய்யான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்த நாம்

கோபம் வந்து பேசும் போது தான் உண்மையைப் பேசி 

உண்மையான வாழ்க்கையை வாழ்வோம் 


நாம் பிறரைப் பற்றி பொய்யைப் பேசி 

பொய்யான வாழ்க்கை வாழும் போது

நாம் பிறரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவோம்

பெரிய அறிவாளி என்று பேசுவோம்

திறமைசாலி என்று பேசுவோம்

சிறந்த உழைப்பாளி என்று பேசுவோம்

கருணை உள்ளம் கொண்டவர் என்று பேசுவோம்

பிறருக்கு உதவி செய்பவர் என்று பேசுவோம்


நாம் பொய்யான வாழ்க்கை வாழும் போது

பிறரைப் பற்றி நாம் பேசும் வார்த்தைகள் அனைத்தும்

பொய்யான வார்த்தைகள்.


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

///////////////////////////////// 

ஜபம்-பதிவு-1025 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-3

                                                       அர்ஜுனனைக் கொன்ற

                                             பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-3


(தர்மர் வசிக்கும் அரண்மனைக்கு வந்த சீடனை அர்ஜுனன் பார்க்கிறான். சீடனைப் பார்த்த அர்ஜுனன் பேச ஆரம்பிக்கிறான்.)


அர்ஜுனன் : என்ன நடந்தது? 


சீடன் : நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் ஆட்சி செய்து 

கொண்டிருக்கிறீர்கள்?


இதை விட கேவலம் என்ன இருக்கிறது.


அர்ஜுனன் : நடந்ததைச் சொல்லுங்கள்.


சீடன் : எது நடக்க வேண்டுமோ அது நடக்கவில்லை?

எது நடக்கக் கூடாதோ? அது நடந்து கொண்டிருக்கிறது,


அர்ஜுனன் : புரியும்படியாகச் சொல்லுங்கள்.


சீடன் : அக்கிரமமும், அநியாயமும் நடந்து கொண்டிருக்கிறது.

மக்கள் அமைதியிழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.


அர்ஜுனன் : இன்னும் நீங்கள் விஷயத்தையே சொல்லவில்லை,


சீடன் : எங்கள் ஆசிரமத்தில் நாங்கள் குருதேவருடன் யாகம் செய்து கொண்டிருந்த போது கொள்ளையர்கள் எங்கள் பசுக்களை எங்கள் கண் முன்னாலேயே பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்,


அர்ஜுனன் : தடுக்க முயற்சி செய்தீர்களா?


சீடன் :  இல்லை?


அர்ஜுனன் : ஒருவர் கூடவா முயற்சி செய்யவில்லை?

சீடன் : தடுப்பது எங்கள் வேலை இல்லையே?


அர்ஜுனன் : கண்முன்னே தவறு நடந்து கொண்டிருந்திருக்கிறது

அதை தடுக்கவில்லை என்கிறீர்கள்?

ஏன் தடுக்க முயற்சி செய்யவில்லை என்று கேட்டதற்கு

அது உங்கள் வேலை என்கிறீர்கள்!


சீடன் : ஆமாம் எங்கள் வேலை இல்லை தான்?


நாட்டில் அக்கிரமங்களும், அநியாயங்களும் நடந்தால் 

அதைத் தடுகக வேண்டியது யார் வேலை?

அரசின் வேலையா? அல்லது மக்களின் வேலையா?


நாட்டில் கொள்ளைகள் நடந்தால் அதைத் 

தடுக்க வேண்டியது யார் வேலை?

அரசின் வேலையா? அல்லது மக்களின் வேலையா?


மக்கள் பயமின்றி வாழ்வதற்கான வேலைகளைச்

செய்ய வேண்டியது

யார் வேலை?

அரசின் வேலையா? அல்லது மக்களின் வேலையா?


யார் செய்ய வேண்டிய வேலை?

மன்னர் செய்ய வேண்டிய வேலை!

தர்மர் செய்ய வேண்டிய வேலை!

ஆனால், தர்மர் தன்னுடைய வேலையைச் செய்யவில்லை.


வேலையைச் செய்யாத தர்மரிடம் சென்று கேளுங்கள்

செய்ய வேண்டிய வேலையை 

ஏன் செய்யவில்லை என்று கேளுங்கள்


கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமோ 

அவரிடம் சென்று கேளுங்கள்

அதை விடுத்து யாரிடம் கேட்கக் கூடாதோ 

அவரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்


தர்மரிடம் கேட்க வேண்டிய கேள்வியை

பாதிப்பு அடைந்த மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். 


தர்மரிடம் சென்று கேளுங்கள்


அர்ஜுனன் : எல்லா இடங்களுக்கும் மன்னரும், ஆட்சியாளர்களும், 

மன்னரின் பிரதிநிதிகளும் சென்று காப்பாற்ற முடியாது அல்லவா


எந்த இடங்களில்,

எந்த காலங்களில்

எந்த சூழ்நிலைகளில்

மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமோ

அந்த இடங்களில் மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள 

சிறிதளவு முயற்சியாவது எடுக்க வேண்டாமா?


மக்களும் தங்கள் முன்னே அநியாயம் நடக்கும் போது

மக்களும் முயற்சி எடுத்து தங்களால் முடிந்த அளவு

தவறுகள் நடக்காத வண்ணம்

செயல்களைச்  செய்ய வேண்டும் அல்லவா?


சீடன் : நாட்டின் எல்லா இடங்களிலும் நடக்கும் 

அக்கிரமங்களையும் அநியாயங்களையும் 

மக்களே தடுப்பதற்கு

அரசு எதற்கு

மன்னர் எதற்கு

தர்மர் எதற்கு

பாண்டவர்கள் எதற்கு


நாட்டில் அக்கிரமங்களும் அநியாயங்களும் நடந்தால்

அரசு சரியில்லை என்று தானே அர்த்தம்

மன்னர் சரியாக ஆட்சி செய்யவில்லை என்று தானே அர்த்தம்


தர்மருக்கு மன்னராக இருக்க தகுதி இல்லை என்று தானே அர்த்தம்

பாண்டவர்கள் அனைவரும் மக்களைப் பற்றிக் 

கவலைப்படவில்லை என்று தானே அர்த்தம்


அர்ஜுனன் : உங்கள் குருதேவர் என்ன சொன்னார்?


சீடன் : பட்டப்பகலில் ஆசிரமத்திற்குள் புகுந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு 

கொள்ளையர்கள் சென்றார்கள் என்றால்


தர்மரைப் பார்த்து கொள்ளையர்களுக்கு பயம் இல்லை 

என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது 

என்று சொல்லச் சொன்னார்


தர்மருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை 

என்று சொல்லச் சொன்னார்


மக்களைப் பாதுகாக்கத் தெரியாத தர்மர் 

எதற்கு அரியணையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்

என்று சொல்லச் சொன்னார்


நாடு வேண்டும் மன்னராக இருக்க வேண்டும்

அதிகாரம் வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும் 

என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது

மக்களைக் காப்பாற்றத் தெரியவில்லை என்றால்

மக்களை அமைதியாக வாழ வைக்கத் 

தெரியவில்லை என்றால் 

எதற்கு தர்மருக்கு நாடு

என்று சொல்லச் சொன்னார்.


நானே சிறந்த வீரன் என்று பேசிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும் 

பீமனின் காதாயுதம் மக்களைப் பாதுகாக்க பயன்படவில்லை என்றால் 

எதற்காக கையில் வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்

என்று சொல்லச் சொன்னார்.


மக்கள் பயமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தாமல்

உலகத்திலேயே சிறந்த வில்லாளி, வில்லுக்கு விஜயன் 

என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு அர்ஜுனன் சுற்றுவதால் ஒரு பயனும் இல்லை 

என்று சொல்லச் சொன்னார்.


எதற்காக வாழ்கிறோம் என்று கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும்

அரண்மனையிலேயே சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்

நகுலனுக்கும், சகாதேவனுக்கும் மக்களைக் காக்க வேண்டும்

என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்படாதா 

என்று சொல்லச் சொன்னார்


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1024 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-2

                                                   அர்ஜுனனைக் கொன்ற

                                          பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-2


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அனுபவ நினைவும், சிந்தனையும், தெளிவும் 

அளிக்கின்ற நல்ல முடிவுகளைக் கொண்டு

உணர்ச்சிகளை  ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறன் தோன்றும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

இன்னது செய்தால் இன்னது விளையும் 

எனவே இன்னது செய்து வாழ வேண்டும் என்று கூறும் 

பக்தி மார்க்கம் என்றால் என்ன என்று தெரியும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

இன்னது செய்தால் இன்னது விளையும் 

எனவே இன்னது செய்து வாழ வேண்டும் என்று தானே உணர்ந்து செய்யும் 

ஞான மார்க்கம் என்றால் என்ன என்று தெரியும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அறிவென்றால் என்னவென்றும்

அறிவது எது என்றும்

அறியும் நான் யார் என்றும்

எது என் மூலம் என்றும்

அறியும் அறிவு தோன்றும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

ஆன்மாவை அறிந்து

ஆன்மாவின் பேராற்றலை அறிந்து

அதில் உள்ள இருப்பு நிலையை அறிந்து கொள்ளும்

அறிவு தோன்றும்


நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை

சரியாக நடத்தி இருக்கிறோம் என்பதற்கு

நாம் இறந்த பிறகு கூடும் கூட்டமும், ஆடும் ஆட்டமும், 

சிந்தும் கண்ணீரும் சாட்சி கிடையாது

நாம் இந்த உலகத்தில் உயிரோடு வாழும் போது

நாம் கஷ்டப்பட்டு வாடும் போது

அந்த கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து நீக்கும் 

ஒரு துணை நமக்கு இருந்தால்

அது தான் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை

சரியாக நடத்தி இருக்கிறோம் என்பதற்கான சாட்சி


நாம் நம் வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்தி இருந்தால்

எந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்பதையும்

எப்படி செய்ய வேண்டும் என்பதையும்

எந்த நேரத்தில் எந்த செயலை செய்யக் கூடாது என்பதையும்

இடம், நேரம், காலம், சூழ்நிலை உணர்ந்து

எந்த செயலை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையும்

நாம் தெரிந்து அதை செய்வோம்


இதுவரை வாழ்க்கைப் பயணத்தை 

நீ சரியாக வாழவில்லை என்பது தெரிகிறது

இனிமேல் வாழ்க்கைப் பயணத்தை சரியாக வாழ்ந்து பார்


சீடன் : இப்போது நான் என்ன செய்ய வேண்டும்


குரு : உனக்கென்று ஒதுக்கப்பட்ட பணி என்ன என்பதை முதலில் 

தெரிந்து கொள்ள வேண்டும் உனக்கென்று ஒதுக்கப்பட்ட பணியைச் செய்ய வேண்டும்


சீடன் : எனக்கு தெரியவில்லை


குரு : உனக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம்

கேட்டு தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்


சீடன் : என்னுடைய வேலை என்ன என்பதையும்

நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும்

நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும்


குரு : நாம் கடவுளுக்கு சேவை செய்யப் படைக்கப்பட்டவர்கள்

கடவுளின் அருளைப் பெற்ற நாம்

கடவுளின் அருளைப் பெற முடியாதவர்களுக்கு

கடவுளின் அருளைப் பெறுவதற்கு

ஒரு வழிகாட்டியாய் இருந்து வழிகாட்ட வேண்டும்.


கடவுள் எங்கே இருக்கிறார்

அவரை அடையக்கூடிய வழி என்ன

எதைக் கொண்டு கடவுளை அடையலாம்

என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டி

மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி

கடவுளுடன் இணைந்து என்ன வேண்டுமோ

அதை பெற்றுக் கொள்ளும் வழியை

மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் புனிதமான பணியைச்

செய்வவதற்காகப் பிறந்தவர்கள் நாம்


அந்த புனிதமான பணியைத் தவிர்த்து

வேறு எந்த ஒரு பணியையும் செய்யக் கூடாது


பசுக்களை மீட்டு வரும் பணியை செய்வது 

நம்முடைய வேலை அல்ல

அது ஷத்திரியர்களின் வேலை


நாட்டை ஆள்பவர்களின் வேலை

நாட்டை ஆளும் தர்மரின் வேலை


சீடன் : அவரிடம் போய் சொல்ல வேண்டுமா


குரு : ஆமாம் அவரிடம் போய் சொல்

நான் சொன்னேன் என்று சொல்

என்னுடைய குருநாதர் சொன்னார் என்று சொல்


கொள்ளையர்கள் பெருகி விட்டனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


கொள்ளையர்கள் தைரியமாக 

கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


அட்டூழியங்களும், அராஜகங்களும், 

அநியாயங்களும் பெருகி விட்டது

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


மக்களை அச்சத்திலேயே 

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


நாட்டை ஆளத் தெரியாத 

தர்மருக்கு நாடு எதற்கு என்று சொல்


மக்களை காப்பாற்றத் தெரியாத 

தர்மருக்கு ஆட்சி எதற்கு என்று சொல்


மக்களுடைய பயத்தை நீக்கி 

தர்மருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று சொல்


மக்கள் வாழக் கூடிய ஒரு நாடாக 

தர்மரின் நாடு இல்லை என்று சொல்


ஆட்சி நடத்தத் தெரியவில்லை என்றால் 

தர்மரை காட்டிற்குப் போகச் சொல்.


சீடன் : அப்படியே சொல்கிறேன்

தர்மரிடம் என்ன சொல்லச் சொன்னீர்களோ அதையே

தர்மரிடம் சொல்கிறேன்

என்னுடைய குருநாதர் சொன்னதாக சொல்கிறேன்


இந்த நாட்டின் மன்னனிடம் சொல்கிறேன்

உண்மையைச் சொல்கிறேன். 


(என்று சீடன் தர்மரின் அரண்மனையை நோக்கி செல்கிறான்)


-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

ஜபம்-பதிவு-1023 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-1

                                                    அர்ஜுனனைக் கொன்ற

                                       பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-1


(குரு ஆசிரமத்தில் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருக்கிறார். அவருக்கு துணையாக அவருடைய சீடர்களும் அவருடன் அமர்ந்து யாகம் செய்து கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில் கொள்ளையர்கள் ஆசிரமத்தில் இருந்த பசுக்களை ஓட்டிக் கொண்டு செல்கின்றனர். அதைப்பார்த்து சீடர்கள் அதைத் தடுக்க செல்கின்றனர். குரு தன் தலைமைச் சீடனை அழைக்கிறார்.)


குரு : எங்கே செல்கிறாய்?

சீடன் : கொள்ளையர்களை தடுக்கப் போகிறேன்!

குரு : உன்னால் முடியுமா?

சீடன் :  முடியாது? 

இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கிறேன்.


குரு : முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் 

முயற்சி செய்து பார்க்கலாம்.


முடியாது என்று முடிவெடுத்து விட்ட பிறகு

முயற்சி செய்வதால் என்ன பயன் ஏற்பட்டு விடப்போகிறது.


முடியாத ஒன்றை ஏன் முயற்சி செய்து பார்க்க வேண்டும்.


முடியாது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பது

அறிவற்றவர்களின் வேலை அல்லவா?


அந்த வேலையையா நீ செய்யப் போகிறாய்?


சீடன் : அப்படி என்றால் தடுக்க வேண்டாமா ?


குரு :  உன்னால் முடியாது என்று சொல்லி விட்டாய்

பிறகு ஏன் தடுக்கப் போகிறேன் என்று சொல்கிறாய்.


நமக்கு சம்பந்தம் இல்லாத வேலையை செய்வதும் தவறு.

நம்மால் முடியாத வேலையை செய்வதும் தவறு.

முடியாது என்று தெரிந்தும் முயற்சி செய்து பார்ப்பதும் தவறு.


நமக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளில் 

நாம் தலையிடக் கூடாது.


நம்முடைய வேலை என்ன என்பதை 

முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


இந்த உலகத்தில் பிறக்கும் அனைவரும் 

தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையை 

முடிப்பதற்காகத் தான் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள்


தாங்கள் எதற்காக பிறந்திருக்கிறோம்

எந்த வேலையை முடிப்பதற்காக 

இந்த உலகத்திற்காக வந்திருக்கிறோம்

என்பதை உணர்ந்தவர்கள் 

தங்கள் கடமையை முடித்து விட்டு

தாங்கள் வந்த வேலையை முடித்து விட்டு

கர்மாவைக் கழித்து 

பிறவியை அறுத்து

இறைவனுடன் இரண்டறக் கலந்து 

முக்தி என்ற நிலையை அடைந்து விடுகின்றனர்

இந்த உலகத்தை விட்டு சென்று விடுகின்றனர்.

அவர்கள் இந்த உலகத்தில் மீண்டும் வந்து பிறப்பதேயில்லை

அவர்களுக்கு பிறவி என்பதே கிடையாது.


ஆனால்,

தாங்கள் எதற்காகப் பிறந்திருக்கிறோம்

எந்த வேலையைச் செய்வதற்காகப் பிறந்திருக்கிறோம் 

என்ன காரணத்திற்காக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம் 

எந்த வேலையை முடிப்பதற்காக 

இந்த உலகத்திற்கு வந்திருக்கிறோம்

எதற்காக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

என்பதை உணராதவர்கள்

அதைக் கண்டு பிடிக்க முடியாதவர்கள்

தாங்கள் செய்த கர்மவினைகளுக்கு ஏற்ப 

துன்பங்களுக்குள் மாட்டிக் கொண்டு

பல்வேறு கஷ்டங்களை அடைந்து

மீள முடியாத துயரத்தில் மூழ்கி.

மீண்டும் மீண்டும் இந்த மண்ணில் வந்து பிறக்கிறார்கள்

வாழ்கிறார்கள்,

இறந்து விடுகிறார்கள்


தாங்கள் எதற்காகப் பிறக்கிறோம் என்பதை உணர்ந்து

அந்த வேலையை முடித்தவர்களுக்கு 

கர்மவினைகளைக் கழித்தவர்களுக்கு

மீண்டும் பிறவி என்பதே கிடையாது

ஆனால்

தாங்கள் எதற்காகப் பிறந்திருக்கிறோம் 

என்பதை உணராமல் இருப்பவர்களுக்கு

தாங்கள் வந்த வேலையை முடிக்காமல் 

வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கு

பிறவி என்பது உண்டு


சீடன் : மீண்டும் பிறக்காமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்


குரு : முதலில் பயணம் என்றால் என்ன என்பதை

தெரிந்து கொள்ள வேண்டும்


நாம் மேற்கொள்ள வேண்டிய பயணம் என்ன என்பதைத் 

தெரிந்து கொள்ள வேண்டும்


பயணம் மேற்கொண்டால் என்ன நடக்கும் என்பதைத்

தெரிந்து கொள்ள வேண்டும்.


சீடன் : பயணம் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?


குரு : பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நம்முடைய

வாழ்க்கைப் பயணத்தைத் தான் குறிப்பிடுகிறேன்.


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அனைவரையும் சமமாகப் பாவித்து

ஒருவருக்கொருவர் ஒத்தும் உதவியும் வாழ வேண்டும் 

என்ற சமத்துவ எண்ணம் தோன்றும்



-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////