அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-3
(தர்மர் வசிக்கும் அரண்மனைக்கு வந்த சீடனை அர்ஜுனன் பார்க்கிறான். சீடனைப் பார்த்த அர்ஜுனன் பேச ஆரம்பிக்கிறான்.)
அர்ஜுனன் : என்ன நடந்தது?
சீடன் : நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் ஆட்சி செய்து
கொண்டிருக்கிறீர்கள்?
இதை விட கேவலம் என்ன இருக்கிறது.
அர்ஜுனன் : நடந்ததைச் சொல்லுங்கள்.
சீடன் : எது நடக்க வேண்டுமோ அது நடக்கவில்லை?
எது நடக்கக் கூடாதோ? அது நடந்து கொண்டிருக்கிறது,
அர்ஜுனன் : புரியும்படியாகச் சொல்லுங்கள்.
சீடன் : அக்கிரமமும், அநியாயமும் நடந்து கொண்டிருக்கிறது.
மக்கள் அமைதியிழந்து தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
அர்ஜுனன் : இன்னும் நீங்கள் விஷயத்தையே சொல்லவில்லை,
சீடன் : எங்கள் ஆசிரமத்தில் நாங்கள் குருதேவருடன் யாகம் செய்து கொண்டிருந்த போது கொள்ளையர்கள் எங்கள் பசுக்களை எங்கள் கண் முன்னாலேயே பட்டப்பகலில் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்,
அர்ஜுனன் : தடுக்க முயற்சி செய்தீர்களா?
சீடன் : இல்லை?
அர்ஜுனன் : ஒருவர் கூடவா முயற்சி செய்யவில்லை?
சீடன் : தடுப்பது எங்கள் வேலை இல்லையே?
அர்ஜுனன் : கண்முன்னே தவறு நடந்து கொண்டிருந்திருக்கிறது
அதை தடுக்கவில்லை என்கிறீர்கள்?
ஏன் தடுக்க முயற்சி செய்யவில்லை என்று கேட்டதற்கு
அது உங்கள் வேலை என்கிறீர்கள்!
சீடன் : ஆமாம் எங்கள் வேலை இல்லை தான்?
நாட்டில் அக்கிரமங்களும், அநியாயங்களும் நடந்தால்
அதைத் தடுகக வேண்டியது யார் வேலை?
அரசின் வேலையா? அல்லது மக்களின் வேலையா?
நாட்டில் கொள்ளைகள் நடந்தால் அதைத்
தடுக்க வேண்டியது யார் வேலை?
அரசின் வேலையா? அல்லது மக்களின் வேலையா?
மக்கள் பயமின்றி வாழ்வதற்கான வேலைகளைச்
செய்ய வேண்டியது
யார் வேலை?
அரசின் வேலையா? அல்லது மக்களின் வேலையா?
யார் செய்ய வேண்டிய வேலை?
மன்னர் செய்ய வேண்டிய வேலை!
தர்மர் செய்ய வேண்டிய வேலை!
ஆனால், தர்மர் தன்னுடைய வேலையைச் செய்யவில்லை.
வேலையைச் செய்யாத தர்மரிடம் சென்று கேளுங்கள்
செய்ய வேண்டிய வேலையை
ஏன் செய்யவில்லை என்று கேளுங்கள்
கேள்வியை யாரிடம் கேட்க வேண்டுமோ
அவரிடம் சென்று கேளுங்கள்
அதை விடுத்து யாரிடம் கேட்கக் கூடாதோ
அவரிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்
தர்மரிடம் கேட்க வேண்டிய கேள்வியை
பாதிப்பு அடைந்த மக்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.
தர்மரிடம் சென்று கேளுங்கள்
அர்ஜுனன் : எல்லா இடங்களுக்கும் மன்னரும், ஆட்சியாளர்களும்,
மன்னரின் பிரதிநிதிகளும் சென்று காப்பாற்ற முடியாது அல்லவா
எந்த இடங்களில்,
எந்த காலங்களில்
எந்த சூழ்நிலைகளில்
மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியுமோ
அந்த இடங்களில் மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள
சிறிதளவு முயற்சியாவது எடுக்க வேண்டாமா?
மக்களும் தங்கள் முன்னே அநியாயம் நடக்கும் போது
மக்களும் முயற்சி எடுத்து தங்களால் முடிந்த அளவு
தவறுகள் நடக்காத வண்ணம்
செயல்களைச் செய்ய வேண்டும் அல்லவா?
சீடன் : நாட்டின் எல்லா இடங்களிலும் நடக்கும்
அக்கிரமங்களையும் அநியாயங்களையும்
மக்களே தடுப்பதற்கு
அரசு எதற்கு
மன்னர் எதற்கு
தர்மர் எதற்கு
பாண்டவர்கள் எதற்கு
நாட்டில் அக்கிரமங்களும் அநியாயங்களும் நடந்தால்
அரசு சரியில்லை என்று தானே அர்த்தம்
மன்னர் சரியாக ஆட்சி செய்யவில்லை என்று தானே அர்த்தம்
தர்மருக்கு மன்னராக இருக்க தகுதி இல்லை என்று தானே அர்த்தம்
பாண்டவர்கள் அனைவரும் மக்களைப் பற்றிக்
கவலைப்படவில்லை என்று தானே அர்த்தம்
அர்ஜுனன் : உங்கள் குருதேவர் என்ன சொன்னார்?
சீடன் : பட்டப்பகலில் ஆசிரமத்திற்குள் புகுந்து பசுக்களை ஓட்டிக் கொண்டு
கொள்ளையர்கள் சென்றார்கள் என்றால்
தர்மரைப் பார்த்து கொள்ளையர்களுக்கு பயம் இல்லை
என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது
என்று சொல்லச் சொன்னார்
தர்மருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை
என்று சொல்லச் சொன்னார்
மக்களைப் பாதுகாக்கத் தெரியாத தர்மர்
எதற்கு அரியணையில் அமர்ந்து கொண்டிருக்கிறார்
என்று சொல்லச் சொன்னார்
நாடு வேண்டும் மன்னராக இருக்க வேண்டும்
அதிகாரம் வேண்டும் ஆட்சி செய்ய வேண்டும்
என்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது
மக்களைக் காப்பாற்றத் தெரியவில்லை என்றால்
மக்களை அமைதியாக வாழ வைக்கத்
தெரியவில்லை என்றால்
எதற்கு தர்மருக்கு நாடு
என்று சொல்லச் சொன்னார்.
நானே சிறந்த வீரன் என்று பேசிக் கொண்டு திரிந்து கொண்டிருக்கும்
பீமனின் காதாயுதம் மக்களைப் பாதுகாக்க பயன்படவில்லை என்றால்
எதற்காக கையில் வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறார்
என்று சொல்லச் சொன்னார்.
மக்கள் பயமின்றி வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தாமல்
உலகத்திலேயே சிறந்த வில்லாளி, வில்லுக்கு விஜயன்
என்ற பட்டத்தை வைத்துக் கொண்டு அர்ஜுனன் சுற்றுவதால் ஒரு பயனும் இல்லை
என்று சொல்லச் சொன்னார்.
எதற்காக வாழ்கிறோம் என்று கூட தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கும்
அரண்மனையிலேயே சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும்
நகுலனுக்கும், சகாதேவனுக்கும் மக்களைக் காக்க வேண்டும்
என்ற எண்ணமே அவர்களுக்கு ஏற்படாதா
என்று சொல்லச் சொன்னார்
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----16-02-2025
/////////////////////////////////
No comments:
Post a Comment