அர்ஜுனனைக் கொன்ற
பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-7
(பசுக்களை மீட்டு ஆசிரமத்தில் ஒப்படைத்து விட்டு தன்னுடைய அண்ணன் தர்மரைச் சந்தித்து அர்ஜுனன் பேசுகிறான்)
அர்ஜுனன் : நான் செல்கிறேன்.
தர்மர் : எங்கே செல்கிறாய் ?
அர்ஜுனன் : வனவாசம் செல்கிறேன்.
தர்மர் : எதற்காக செல்கிறாய்?
அர்ஜுனன் : விதிமுறைகளை மீறியதற்காக,
தர்மர் : எந்த விதிமுறைகளைப் பற்றிச் சொல்கிறாய்
அர்ஜுனன் : நாம் அனைவரும் இணைந்து ஒரு மனதாக உருவாக்கிய விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.
நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டு, கடைபிடித்துக் கொண்டு, செயல்படுத்திக் கொண்டு வரும் விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.
திரௌபதியை பஞ்சபாண்டவர்களாகிய நாம் அனைவரும்
திருமணம் செய்து கொண்ட பிறகு
திரௌபதியின் பொருட்டு
நமக்குள் சண்டைகள் ஏற்பட்டு விடக்கூடாது,
நமக்குள் பிளவுகள் ஏற்பட்டு விடக்கூடாது,
நமக்குள் மனவருத்தங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக
நமக்காக விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டோம் அல்லவா
அந்த விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.
நாம் அனைவரும் இணைந்து ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக
விதிமுறைகளை உருவாக்கிக் கொண்டோம் அல்லவா
அந்த விதிமுறைகளைப் பற்றித் தான் சொல்கிறேன்.
பஞ்ச பாண்டவர்களில் ஒவ்வொருவரும் சுழற்சி முறையில்
ஒரு வருடம் திரௌபதியுடன் குடும்பம் நடத்த வேண்டும்.
அவ்வாறு திரௌபதியுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவர்
குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும் போது
அவருக்கு மட்டுமே திரௌபதி மேல் முழு உரிமை உண்டு,
அவருக்கு மட்டுமே திரௌபதி மனைவியாக இருந்து கொண்டிருப்பார்.
அவருக்கு மட்டுமே திரௌபதி மனைவியாக இருந்து
கணவனுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும்
செய்து கொண்டிருப்பார்.
அந்த காலகட்டத்தில் அவர்கள் இருவருக்கு மட்டுமே
கணவன் மனைவியாக வாழும் உரிமை உண்டு
மற்ற பஞ்ச பாண்டவர்களுக்கு அந்த உரிமை இல்லை.
அந்த காலகட்டங்களில் பஞ்ச பாண்டவர்களில் உள்ள மற்றவர்களுக்கு
திரௌபதியின் மேல் எந்தவிதமான உரிமையும் கிடையாது.
திரௌபதியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பவரைத் தவிர்த்து மற்றவர்கள்
திரௌபதியிடம் எந்தவிதமான உரிமையும் கோரவும் முடியாது.
கோரவும் கூடாது.
திரௌபதியும், திரௌபதியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கும்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரும் தனித்து ஒரு அறையில் இருக்கும் போது
பஞ்ச பாண்டவர்களில் மற்றவர்கள் அந்த அறைக்குள் நுழையக் கூடாது.
அவ்வாறு நுழைந்தால் அது குற்றச் செயலாகக் கருதப்படும்.
அந்த குற்றச் செயலுக்கு தண்டனையாக
குற்றம் இழைத்தவர் 12 மாதங்கள் வனவாசம் செல்ல வேண்டும்
வனத்தில் பிரம்மச்சாரியாக இருக்க வேண்டும்
என்ற விதிகளை நாரதர் முன்னிலையில்
பஞ்ச பாண்டவர்களாகிய நாமும், திரௌபதியும்,
கலந்து ஆலோசித்து முடிவு செய்து
நாம் எதிர்காலத்தில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக
உருவாக்கப்பட்டது தான் இந்த விதிமுறைகள்
நாரதர் முன்னிலையில் அனைவரின் சம்மதத்துடன்
அனைவரின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்டது தான்
இந்த விதிமுறைகள்
நீங்களும் திரௌபதியும் அறையில் தனிமையில் இருந்த போது
நான் உள்ளே நுழைந்து விட்டேன். நீங்கள் இருவரும் தனிமையில் இருந்த
காட்சியைக் கண்டு விட்டேன்
விதிமுறைகளை மீறிவிட்டேன்
குற்றச் செயலைச் செய்து விட்டேன்
அதற்குரிய தண்டனையை அனுபவித்துத் தானே ஆக வேண்டும்
அதற்கு நான் வனவாசம் போய்த் தானே ஆக வேண்டும்
அதனால் வனவாசம் செல்ல கிளம்பி விட்டேன்
நம்மால் உருவாக்கப்பட்டது தான் விதிமுறைகள் என்றாலும்,
நாம் மட்டுமே உருவாக்கிய விதிமுறைகள் கிடையாது அல்லவா?
நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காக
உருவாக்கப்பட்ட விதிமுறைகள் அல்லவா?
நாரதர் முன்னிலையில் பஞ்ச பாண்டவர்களாகிய நாமும்,
திரௌபதியும் இணைந்து அனைவரின் ஒப்புதலுடன்
உருவாக்கிய விதிமுறைகள்.அல்லவா?
நாரதர் முன்னிலையில் அனைவரின் சம்மதத்துடன்
அனைவரின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்ட விதிமுறைகள் அல்லவா?
நம்மால் உருவாக்கப்பட்டது என்றாலும்
அந்த விதிமுறைகளை நாமே மீறுவது தவறு அல்லவா?
தர்மர் : பசுக்களை மீட்டுத் தரச் சொல்லி வந்த பிராமணருடைய பசுக்களை மீட்டு வருவதற்காக எங்களுடைய அறையில் நீ வைத்திருந்த உன்னுடைய ஆயுதங்களை எடுப்பதற்காக நானும் திரௌபதியும் தனிமையில் இருக்கும் போது எங்களுடைய அறைக்கு வந்தாய்.
எங்களுடைய அறைக்கு நீ வந்த போது நானும் திரௌபதியும் ஒன்றாக இருந்த நிலையை நீ பார்த்து விட்டாய்.. நீ எங்களைப் பார்த்ததை நான் மட்டுமே பார்த்தேன். திரௌபதி உன்னைப் பார்க்கவில்லை.
நீ விதிமுறைகளை மீறினாய் என்ற விஷயம் நம் இருவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட திரௌபதிக்குக் கூட இந்த விஷயம் தெரியாது.
நாம் இருவரும் சொன்னால் ஒழிய இந்த விஷயம் திரௌபதி உட்பட இந்த உலகத்தில் உள்ள யாருக்கும் தெரியாது.
நாம் இருவரும் சொன்னால் மட்டுமே நீ விதிமுறைகளை மீறினாய் என்ற விஷயம் இந்த உலகத்திற்கே தெரியும்.
அப்படி இருக்கும் போது நீ ஏன் விதிமுறைகளை மீறியதாக எடுத்துக் கொள்கிறாய்
நம் இருவருக்கும் மட்டுமே தெரிந்த விஷயம்
நாம் இருவரும் வெளியே சொல்லவில்லை என்றால்
அந்த விஷயம் யாருக்கும் தெரியாது அல்லவா
அதனால் அந்த விஷயத்தை யாருக்கும் .............................
-----ஜபம் இன்னும் வரும்
-----K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர்
----16-02-2025
No comments:
Post a Comment