February 16, 2025

ஜபம்-பதிவு-1024 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-2

                                                   அர்ஜுனனைக் கொன்ற

                                          பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-2


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அனுபவ நினைவும், சிந்தனையும், தெளிவும் 

அளிக்கின்ற நல்ல முடிவுகளைக் கொண்டு

உணர்ச்சிகளை  ஒழுங்குபடுத்திக் கொள்ளும் திறன் தோன்றும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

இன்னது செய்தால் இன்னது விளையும் 

எனவே இன்னது செய்து வாழ வேண்டும் என்று கூறும் 

பக்தி மார்க்கம் என்றால் என்ன என்று தெரியும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

இன்னது செய்தால் இன்னது விளையும் 

எனவே இன்னது செய்து வாழ வேண்டும் என்று தானே உணர்ந்து செய்யும் 

ஞான மார்க்கம் என்றால் என்ன என்று தெரியும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

அறிவென்றால் என்னவென்றும்

அறிவது எது என்றும்

அறியும் நான் யார் என்றும்

எது என் மூலம் என்றும்

அறியும் அறிவு தோன்றும்


உன்னுடைய வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்திப் பார்

ஆன்மாவை அறிந்து

ஆன்மாவின் பேராற்றலை அறிந்து

அதில் உள்ள இருப்பு நிலையை அறிந்து கொள்ளும்

அறிவு தோன்றும்


நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை

சரியாக நடத்தி இருக்கிறோம் என்பதற்கு

நாம் இறந்த பிறகு கூடும் கூட்டமும், ஆடும் ஆட்டமும், 

சிந்தும் கண்ணீரும் சாட்சி கிடையாது

நாம் இந்த உலகத்தில் உயிரோடு வாழும் போது

நாம் கஷ்டப்பட்டு வாடும் போது

அந்த கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து நீக்கும் 

ஒரு துணை நமக்கு இருந்தால்

அது தான் நாம் நம்முடைய வாழ்க்கைப் பயணத்தை

சரியாக நடத்தி இருக்கிறோம் என்பதற்கான சாட்சி


நாம் நம் வாழ்க்கைப் பயணத்தை சரியாக நடத்தி இருந்தால்

எந்த செயலை எப்போது செய்ய வேண்டும் என்பதையும்

எப்படி செய்ய வேண்டும் என்பதையும்

எந்த நேரத்தில் எந்த செயலை செய்யக் கூடாது என்பதையும்

இடம், நேரம், காலம், சூழ்நிலை உணர்ந்து

எந்த செயலை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதையும்

நாம் தெரிந்து அதை செய்வோம்


இதுவரை வாழ்க்கைப் பயணத்தை 

நீ சரியாக வாழவில்லை என்பது தெரிகிறது

இனிமேல் வாழ்க்கைப் பயணத்தை சரியாக வாழ்ந்து பார்


சீடன் : இப்போது நான் என்ன செய்ய வேண்டும்


குரு : உனக்கென்று ஒதுக்கப்பட்ட பணி என்ன என்பதை முதலில் 

தெரிந்து கொள்ள வேண்டும் உனக்கென்று ஒதுக்கப்பட்ட பணியைச் செய்ய வேண்டும்


சீடன் : எனக்கு தெரியவில்லை


குரு : உனக்கு தெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம்

கேட்டு தெரிந்து கொண்டு செய்ய வேண்டும்


சீடன் : என்னுடைய வேலை என்ன என்பதையும்

நான் என்ன செய்ய வேண்டும் என்பதையும்

நீங்கள் தான் எனக்கு சொல்ல வேண்டும்


குரு : நாம் கடவுளுக்கு சேவை செய்யப் படைக்கப்பட்டவர்கள்

கடவுளின் அருளைப் பெற்ற நாம்

கடவுளின் அருளைப் பெற முடியாதவர்களுக்கு

கடவுளின் அருளைப் பெறுவதற்கு

ஒரு வழிகாட்டியாய் இருந்து வழிகாட்ட வேண்டும்.


கடவுள் எங்கே இருக்கிறார்

அவரை அடையக்கூடிய வழி என்ன

எதைக் கொண்டு கடவுளை அடையலாம்

என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லி வழிகாட்டி

மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே ஒரு தொடர்பை ஏற்படுத்தி

கடவுளுடன் இணைந்து என்ன வேண்டுமோ

அதை பெற்றுக் கொள்ளும் வழியை

மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் புனிதமான பணியைச்

செய்வவதற்காகப் பிறந்தவர்கள் நாம்


அந்த புனிதமான பணியைத் தவிர்த்து

வேறு எந்த ஒரு பணியையும் செய்யக் கூடாது


பசுக்களை மீட்டு வரும் பணியை செய்வது 

நம்முடைய வேலை அல்ல

அது ஷத்திரியர்களின் வேலை


நாட்டை ஆள்பவர்களின் வேலை

நாட்டை ஆளும் தர்மரின் வேலை


சீடன் : அவரிடம் போய் சொல்ல வேண்டுமா


குரு : ஆமாம் அவரிடம் போய் சொல்

நான் சொன்னேன் என்று சொல்

என்னுடைய குருநாதர் சொன்னார் என்று சொல்


கொள்ளையர்கள் பெருகி விட்டனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


கொள்ளையர்கள் தைரியமாக 

கொள்ளையடித்து விட்டு செல்கின்றனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


அட்டூழியங்களும், அராஜகங்களும், 

அநியாயங்களும் பெருகி விட்டது

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


மக்களை அச்சத்திலேயே 

வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

தர்மருடைய ஆட்சியில் என்று சொல்


நாட்டை ஆளத் தெரியாத 

தர்மருக்கு நாடு எதற்கு என்று சொல்


மக்களை காப்பாற்றத் தெரியாத 

தர்மருக்கு ஆட்சி எதற்கு என்று சொல்


மக்களுடைய பயத்தை நீக்கி 

தர்மருக்கு ஆட்சி செய்யத் தெரியவில்லை என்று சொல்


மக்கள் வாழக் கூடிய ஒரு நாடாக 

தர்மரின் நாடு இல்லை என்று சொல்


ஆட்சி நடத்தத் தெரியவில்லை என்றால் 

தர்மரை காட்டிற்குப் போகச் சொல்.


சீடன் : அப்படியே சொல்கிறேன்

தர்மரிடம் என்ன சொல்லச் சொன்னீர்களோ அதையே

தர்மரிடம் சொல்கிறேன்

என்னுடைய குருநாதர் சொன்னதாக சொல்கிறேன்


இந்த நாட்டின் மன்னனிடம் சொல்கிறேன்

உண்மையைச் சொல்கிறேன். 


(என்று சீடன் தர்மரின் அரண்மனையை நோக்கி செல்கிறான்)


-----ஜபம் இன்னும் வரும்

-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

No comments:

Post a Comment