February 16, 2025

ஜபம்-பதிவு-1030 அர்ஜுனனைக் கொன்ற பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-8

                                                      அர்ஜுனனைக் கொன்ற

                                           பாண்டிய மன்னன் பப்ருவாகனன்-8


அர்ஜுனன் : நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று 

எனக்குத் தெரிந்து விட்டது.


எனக்குத் தெரிந்தது இந்த உலகத்திற்குத் தெரிய வேண்டாம்


என்ன வார்த்தை சொல்ல வருகிறீர்கள் என்று யாருக்கும் தெரிய வேண்டாம்


அந்த வார்த்தை உங்களுடனேயே இருந்து விடட்டும்

வெளிப்பட வேண்டாம்


நீங்கள் சொல்ல விரும்பும் வார்த்தைகளை 

நான் மட்டுமல்ல இந்த உலகமும் கேட்க வேண்டாம்


அந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லவே வேண்டாம்  

அந்த வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே வரவே வேண்டாம்


உங்கள் வாயிலிருந்து அந்த வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டு விட்டால் 

அது அந்த தர்மத்திற்கே இழுக்காகி விடும்


தர்மம் தலை குனியக்கூடிய நிலை கூட ஏற்பட்டு விடலாம்


தர்மத்தை தலை குனிய வைத்து விடாதீர்கள்


நீங்கள் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்

நாம் செய்யும் செயலைப் பொறுத்து 

பாவமும் புண்ணியமும் உண்டாவதில்லை

நாம் செய்யும் செயலின் விளைவைப் பொறுத்துத் தான்

பாவமும், புண்ணியமும் உண்டாகிறது


ஒருவர் தன்னுடைய நலனைப் பெரிதெனக் கருதாமல்

சுயநலம் கொண்டு வாழாமல்

மற்றவர்களுடைய நலனே பெரிதெனக் கொண்டு

பொதுநலன் கொண்டு பிறருடைய நலனுக்காகவே 

வாழ்ந்து கொண்டிருக்கிறார்


சமுதாயத்தில் பலருக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கிறார்

அவரால் வாழ்வு பெற்றவர்களை எண்ணிக்கையில் அடக்க முடியாது 

அத்தகையவரை அத்தகைய சிறப்பு மிக்கவரை

அத்தகைய குணநலன்களைப் பெற்றவரை

நான் கொல்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்

அவரைக் கொன்றது என்பது ஒரு செயல்


அவர் இறந்ததைக் கண்டு சமுதாயமே வருத்தப்படுகிறது

நல்லவர் இறந்து விட்டாரே என்று 

மக்கள் அனைவரும் கண்ணீர் விட்டு கதறி அழுகின்றனர்


நான் செய்த செயலின் விளைவு சோகமாக இருக்கிறது 

எனவே, இது ஒரு பாவச் செயல்


இந்த இடத்தில் நான் ஒருவரைக் கொன்ற செயல் ‘

பாவமா புண்ணியமா என்பதை தீர்மானிக்கவில்லை

நாம் செய்த செயலின் விளைவு தான் 

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கிறது


ஒருவர் தன்னலம் கொண்டு

சுயநலத்துடன் வாழ்ந்து கொண்டு 

பிறர் செல்வங்களைக் கொள்ளையடிப்பது

பிறரை ஏமாற்றி பிழைப்பு நடத்துவது 

பித்தலாட்டம் செய்து பிறரை ஏமாற்றுவது

நன்றாக வாழும் குடும்பங்களைக் கெடுப்பது

என்று பல செயல்களைச் செய்து வருகிறார்

அத்தகையவரை நான் கொல்கிறேன்

அவரை நான் கொல்வது என்பது ஒரு செயல்

இதில் பாவமோ புண்ணியமோ ஏற்படாது


அந்த ஊரில் உள்ள மக்கள் அனைவரும்

பாவி இறந்து விட்டானே என்று சந்தோஷப்பட்டனர்

இறந்தவரை நினைத்து யாரும் வருத்தப்படவில்லை

எத்தனை குடும்பங்களை அழித்தான்

எத்தனை பேர்களின் வாழ்க்கையை கெடுத்தான்

படுபாவி இறந்து விட்டான்

இறந்தது நல்லது தான்

அவனைக் கொன்றது சரிதான்

அவன் சாக வேண்டியவன் தான்

அவனுக்கு சாவு என்பது வர வேண்டும் தான்

அவனைக் கொன்றவன் நன்றாக இருக்க வேண்டும்

என்று மக்கள் சொல்கின்றனர்


செய்த செயலின் விளைவு சந்தோஷமாக இருக்கிறது

எனவே செயலின் விளைவு புண்ணியம் ஆகும்


கொலை என்ற செயல் 

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கவில்லை

செயலின் விளைவு தான்

பாவமா புண்ணியமா என்பதைத் தீர்மானிக்கிறது


ஆகவே, நாம் செய்யும் செயலைப் பொறுத்து 

பாவமும், புண்ணியமும் ஏற்படுவதில்லை.

செய்யும் செயலின் விளைவைப் பொறுத்துத் தான்

பாவமும் புண்ணியமும் உண்டாகிறது 


கடவுள் எங்கோ ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு

நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்குரிய பலன்களை

வழங்கிக் கொண்டிருக்கிறார் என்பதே தவறான விஷயம்


-----ஜபம் இன்னும் வரும்


-----K.பாலகங்காதரன்

-----எழுத்தாளர்

 

----16-02-2025

/////////////////////////////////

No comments:

Post a Comment