September 10, 2020

திருக்குறள்- உறங்குவது-பதிவு-9

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-9

 

(b)மரணம் :

மரணம் என்பது

நிகழும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாவே பிரிந்து

வெளியே செல்லும்

நம்முடைய

சூட்சும உடலானது

தன்னிடம் பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இந்த பிரபஞ்சத்தில்

சஞ்சரிக்கும்

தன்மையைப் பெறுகிறது

 

சூட்சும உடலில்

பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

சூட்சும உடலானது

இவ்வுலகில்

பிறப்பெடுப்பதற்காக

காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில்

தன்னுடைய

கர்ம வினைகளுக்கு

ஏற்றபடியான ஒரு

ஸ்தூல உடலை

தேடிக் கொண்டிருக்கிறது

 

தன்னுடைய

கர்ம வினைகளுக்குரிய

ஸ்தூல உடலானது

கிடைத்து விட்டால்

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுக்குள்

பிரவேசித்து இந்த

உலகத்தில் பிறக்கிறது

 

இறந்து போன

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

தன்னிடம் பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இப்பிரபஞ்சத்தில்

சஞ்சரித்து தன்னுடைய

கர்ம வினைகளுக்குரிய

ஸ்தூல உடல்

கிடைத்தவுடன்

அந்த

ஸ்தூல உடலுக்குள்

பிரவேசித்து பிறக்கிறது

 

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடல்

பிரிந்து செல்வது

உறக்கம் , இறப்பு

ஆகிய இரண்டு

நிலைகளில்

நடைபெறுகிறது

 

உறங்குவது போல்

சாக்காடு என்றால்

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலில்

உள்ள நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து வெளியே சென்று

எத்தகைய நிலைகளை

அடைகிறதோ - அதே

நிலைகளைத் தான்

நாம் இறந்தவுடன்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து வெளியே செல்லும்

சூட்சும உடலும் அடைகிறது

என்று பொருள்

 

உறங்கி விழிப்பதும் போலும்

பிறப்பு என்றால்

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து வெளியே சென்ற

சூட்சும உடலானது

மீண்டும் எப்படி

ஸ்தூல உடலுக்குள்

குடியேறுகிறதோ

அப்படியே

நாம் இறந்த பின்பு

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

தன்னுடைய

சூட்சும உடலில்

பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இப்பிரபஞ்சத்தில்

பிரவேசித்து விட்டு

மீண்டும் வந்து

தன்னுடைய

கர்ம வினைகளைத்

தீர்ப்பதற்குரிய

ஸ்தூல உடலைத்

தேர்ந்தெடுத்து

அதில் பிரவேசித்து

குடியேறுகிறது

என்று பொருள்

 

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாகவே

பிரிந்து சென்ற

சூட்சும உடலானது

இந்த பிரபஞ்சத்தில்

சஞ்சரித்து விட்டு

மீண்டும் நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

எப்படி பிரவேசிக்கிறதோ

அப்படியே நாம்

இறந்து விட்டால்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாகவே பிரிந்து

செல்லும் நம்முடைய

சூட்சும உடலானது

தன்னிடம் பதிந்துள்ள

கர்ம வினைகளுக்கேற்ப

இப்பிரபஞ்சத்தில்

சுற்றித் திரிந்து விட்டு

தன்னுடைய

கர்ம வினைகளுக்கேற்ற

ஒரு ஸ்தூல உடலைத்

தேர்ந்தெடுத்து

அதில் பிறக்கிறது

என்பதைத் தான்

திருவள்ளுவர்

 

உறங்கு வதுபோலும்

சாக்காடு உறங்கி

விழிப்பது போலும்

பிறப்பு என்ற

திருக்குறளின்

 

மூலம் தெளிவு

படுத்துகிறார்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

திருக்குறள்- உறங்குவது-பதிவு-8

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-8

 

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடல்

தானாகவே

பிரிந்து செல்வதை

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடல்

பிரிந்து

செல்கிறது என்று

சொல்லலாம்

 

நாம் உறங்கிக்

கொண்டிருக்கும் போது

அதாவது

நாம் விழிப்புணர்வு

அற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து செல்கிறது

அவ்வாறு

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

இந்த பிரபஞ்சத்தில்

உள்ள எந்தவொரு

இடத்திற்கும் செல்லும்

தன்மையையும்,

எந்த ஒரு நபரையும்

சந்திக்கும்

தன்மையையும்

சந்திக்கும் நபருடைய

மனதில் நம்முடைய

எண்ணங்களை

பதியச் செய்து

அதனை

செயல்படுத்துவதற்கான

தன்மையையும்

பெற்றிருக்கிறது.

 

நாம் என்ன என்ன

ஆசைகளை மனதில்

நினைத்துக் கொண்டு

அதை

செயல்படுத்த வேண்டும்

என்று நினைத்துக் 

கொண்டிருக்கிறோமோ

அந்த ஆசைகளை

எல்லாம்

சூட்சும உடலானது

தன்னுள்

வைத்துக் கொண்டிருக்கிறது

 

நாம் உறங்கும் போது

அதாவது

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

பிரிந்து வெளியே

சென்று

நாம் மனதில் எதை

நினைத்துக் கொண்டு

எதை செயல்படுத்த

வேண்டும் என்று

நினைத்துக்

கொண்டிருக்கிறோமோ

அவைகளை

செயல்படுத்துவதற்கு

தகுதியான

நபர்களை சந்தித்து

அவர்களிடம்

சூடசும உடலானது

தன்னுள்

சுமந்திருக்கும்

ஆசைகளை அவரிடம்

பரிமாற்றம் செய்கிறது

 

நம்முடைய

சூட்சும உடலிலிருந்து

தகவலானது

யாரிடம்

பரிமாற்றம் செய்தால்

செயல்கள்

நடக்குமோ

அவரைக் கண்டறிந்து

தகவல்களைப்

பரிமாற்றம் செய்து

அவைகளை

செயல்படுத்துவதற்கான

செயல்களை

நடைமுறைப்படுத்துகிறது

 

அவ்வாறு

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து

வெளியே சென்ற

நம்முடைய

சூட்சும உடலானது

தன்னுடைய

தகவலை பரிமாற்றம்

செய்த பின்பு

மீண்டும்

நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

அதிகாலை

விடியும் போது

மீண்டும்

உள்ளே நுழைகிறது

 

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

நம்முடைய

சூட்சும உடலானது

மீண்டும் வந்து

நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

புகுந்த பின்பு

நம்முடைய

ஸ்தூல உடலானது

விழித்துக் கொள்கிறது

 

நாம் உறக்கத்தில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

நம்முடைய

சூட்சும உடலானது

தான் மேற்கொண்ட

கடமையை

முடித்து விட்டு

மீண்டும்

நம்முடைய

ஸ்தூல உடலுக்குள்

வந்து சேர்ந்து

கொள்கிறது

 

நாம் உறக்கத்தில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

தானாகவே

பிரிந்து வெளியே

செல்லும்

சூட்சும உடலானது

இப்படித் தான்

செயல்படுகிறது.

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

திருக்குறள்- உறங்குவது-பதிவு-7

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-7

 

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

சூட்சும உடலானது

மீண்டும்

ஸ்தூல உடலுக்குள்

சென்றால் தான்

ஸ்தூல உடலானது

உயிரோடு இருக்கும்

இல்லை என்றால்

ஸ்தூல உடலானது

இறந்து விடும்

எனவே

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

சூட்சும உடலானது

ஸ்தூல உடலுக்குள்

சென்று தான்

ஆக வேண்டும்

 

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலைப்

பிரித்து செய்யப்படும்

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல்

ஆகிய இரண்டு

செயல்களும் நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

செய்வது ஆகும்

 

(2) நாம் விழிப்புணர்வு

அற்ற நிலையில்

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானே பிரிந்து

வெளியே சென்று

செயல்படுவது

 

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில் 

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலைப்

பிரித்து

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல்

ஆகிய இரண்டு

செயல்களை

நாமே செய்கிறோம்

 

இந்த இரண்டு

செயல்களையும் நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

செய்வது ஆகும்

அதாவது

நாமே முயன்று

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலைப்

பிரித்து அதனை

தனியாகச்செயல்பட

வைப்பது ஆகும்

இந்த இரண்டு

செயல்களும்

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

செய்யும்

செயல்கள் ஆகும்

 

ஆனால் நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

இல்லாத போது

விழிப்புணர்வு

அற்ற நிலையில்

இருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானாகவே

பிரிந்து செல்வதில்

பல்வேறு

பிரிவுகள்

இருந்தாலும்

இரண்டு பிரிவுகள்

முக்கியமான

இடத்தைப்

பெறுகின்றன

 

(a)உறக்கம்

(b),இறப்பு

 

 

(a)உறக்கம்

நாம் உறங்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

தானாகவே

பிரிந்து

வெளியே வந்து

எந்த இடத்திற்கு

செல்ல வேண்டுமோ

அந்த இடத்திற்கு

சென்று விட்டு

எந்த எண்ணங்களை

எவரிடம் சொல்ல

வேண்டுமோ

அந்த எண்ணங்களை

அவரிடம்

சொல்லி விட்டு

எந்த எண்ணங்களை

நிறைவேற்ற

வேண்டுமோ

அந்த எண்ணங்களை

நிறைவேற்றுவதற்கான

செயல்களைச்

செய்து விட்டு

சூட்சும உடலானது

தன்னுடைய

கடமையை

முடித்து விட்டு

மீண்டும்

தன்னுடைய

ஸ்தூல உடலுக்குள்

சென்று

சேர்ந்து கொள்கிறது

 

ஆக நாம்

விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

இல்லாத போது

அதாவது

உறங்கிக்

கொண்டிருக்கும் போது

நம்முடைய

ஸ்தூல உடலிலிருந்து

நம்முடைய

சூட்சும உடலானது

நம்மை விட்டு

தானாகவே

பிரிந்து செல்கிறது

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////

திருக்குறள்- உறங்குவது-பதிவு-6

 திருக்குறள்-

உறங்குவது-பதிவு-6

 

ஒருவர் முதலாவது

ஸ்தூல உடலிலிருந்து

தன்னுடைய

சூட்சும உடலைப்

பிரித்து

இரண்டாவது

இறந்த

ஸ்தூல உடலுக்குள்

சென்றாலும்

சூட்சும உடலானது

முதல்

ஸ்தூல உடலுடன்

இணைந்த நிலையில்

தான் இருக்கும்

 

சூட்சும உடலானது

முதல்

ஸ்தூல உடலுடன்

தொடர்பு கொண்ட

நிலையில்

தான் இருக்கும்

 

இரண்டாவது இறந்த

ஸ்தூல உடலுக்குள்

பிரவேசம் செய்யும்

சூட்சும உடலானது

தனது கடமையை

முடித்து விட்டால்

மீண்டும் முதல்

ஸ்தூல உடலுக்குள்

சென்று சேரும்

 

முதல் ஸ்தூல

உடலிலிருந்து பிரிந்து

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

செல்லும்

சூட்சும உடலானது 

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

தங்கி தன்னுடைய

கடமையை

முடிக்கும் வரை

முதல்

ஸ்தூல உடலைப்

பத்திரப் படுத்தி

வைக்க வேண்டும்

 

முதல்

ஸ்தூல உடலுக்கு

எந்தவிதமான பாதிப்பும்

ஏற்படாதவாறு பார்த்துக்

கொள்ள வேண்டும்

 

முதல்

ஸ்தூல உடலானது

எரிக்கப் பட்டாலோ

அல்லது

முதல்

ஸ்தூல உடலுக்கும்

முதல்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து சென்ற

சூட்சும உடலுக்கும்

உள்ள தொடர்பானது

துண்டிக்கப்பட்டாலோ

முதல்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

புகுந்து செயல்பட்டுக்

கொண்டிருக்கும்

சூட்சும உடலானது

மீண்டும் முதல்

ஸ்தூல உடலுக்குள்

புகவே முடியாது.

 

எனவே முதல்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து

வெளியே சென்ற

சூட்சும உடலானது

இரண்டாவது

ஸ்தூல உடலுக்குள்

புகுந்து வாசம்

செய்து மீண்டும்

முதல்

ஸ்தூல் உடலுக்குள்

சென்று வாசம்

செய்யும் வரை

முதல்

ஸ்தூல உடலானது

பாதுகாப்பாக வைக்கப்பட

வேண்டியது மிகவும்

அவசியம் ஆகும்

அவ்வாறு

செய்யாமல்

ஸ்தூல உடலை

பாதுகாப்பாக

வைக்காமல்

விட்டு விட்டா,ல்

மரணம் என்பது

ஏற்படும் என்பதை

நினைவில்

கொள்ள வேண்டும்

 

இவ்வாறு தான்

ஸ்தூல உடலிலிருந்து

பிரிந்து செல்லும்

சூட்சும உடலானது

இரண்டு முக்கியமான

செயல்களான

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல் என்ற

இரண்டு

முக்கியமானச்

செயல்களைச்

செய்கிறது

 

சூக்குமப் பயணம்

மற்றும்

கூடு விட்டு

கூடு பாய்தல்

ஆகிய இரண்டு

செயல்களுக்கும்

உள்ள பொதுவான

பண்பு என்று

எதைக் குறிப்பிடலாம்

என்றால்

ஸ்தூல உடலிலிருந்து

சூட்சும உடலானது

பிரிந்து வெளியே

சென்று தன்னுடைய

கடமையை

முடித்து வீட்டு

மீண்டும்

தன்னுடைய

ஸ்தூல உடலுக்குள்

செல்வது என்பதையும்

இந்த இரண்டு

செயல்களையும்

நாம் விழிப்புணர்வு

பெற்ற நிலையில்

தான் செய்கிறோம்  

என்பதையும் தான்

குறிப்பிட முடியும்

 

------என்றும் அன்புடன்

------K.பாலகங்காதரன்

 

------10-09-2020

//////////////////////////////////////////////////////