March 26, 2019

1-ஜியார்டானோ புருனோ உருவான கதை

            1-ஜியார்டானோ புருனோ உருவான கதை

அன்பிற்கினியவர்களே !
நான் பல ஆண்டுகளாக
பல்வேறு இணையதளங்களில்
ஆன்மீகக் கட்டுரைகள் ;
சித்தர்கள் பாடல்கள் ;
இலக்கியங்களில் உள்ள
பாடல்கள் ; ஆகியவற்றிற்கு
விளக்கங்கள் 200 க்கும்
மேற்பட்ட தலைப்புகளில் எழுதி
இருக்கிறேன் - இந்து மதம்
கிறிஸ்தவ மதம் ஆகிய
இரண்டு மதங்களையும்
இணைத்து ஆய்வு செய்து
100 க்கும் மேற்பட்ட ஆய்வுக்
கட்டுரைகளையும் எழுதி
இருக்கிறேன் !

அதனைத் தொடர்ந்து
Whats app -ல் கலிலியோ
அவர்களின் வாழ்ககை
வரலாறை எழுதிக்
கொண்டிருந்தபோது வேறு
யாரேனும் சூரியனை மையமாக
வைத்து பூமி சுற்றுகிறது என்று
சொல்லி இருக்கிறார்களா என்று
தேடியபோது ஒருவர் சொல்லி
இருக்கிறார் அவரை உயிரோடு
எரித்து விட்டார்கள் அவருடைய
பெயர் ஜியார்டானோ புருனோ
என்ற விவரம் கிடைத்தது

அவரைப்பற்றிய தெளிவான
விவரங்கள் எதுவுமே
இணையதளங்களிலும் ;
புத்தகங்களிலும் ;
வீடியோக்களிலும் ; இல்லை
அவரை சிறையில் அடைத்து
7 வருடம் சித்திரவதை செய்து
உயிரோடு எரித்துக் கொன்றார்கள்
என்ற விவரம் மட்டுமே
தமிழ், ஆங்கிலம் ஆகிய
இரண்டு மொழிகளிலும்  நான்
தேடியவைகள் அனைத்திலும்
இருந்தன அவரைப்பற்றி
விவரங்கள் அனைத்துமே
அழிக்கப்பட்டிருந்தன ;

இருந்தும் மிகுந்த
பிரயாசைக் கிடையில்
சென்னையில் உள்ள முக்கியமான
நூலகங்கள் பலவற்றிற்கும் சென்று
அங்கு உள்ள புத்தகங்களைப்
படித்துப் பார்த்து அவைகளை
நகல் எடுத்தும் இணையதளத்தில்
முடிந்த அளவு Download செய்த
தகவல்களை அடிப்படையாகக்
கொண்டும் பல்வேறு வகையான
வரலாற்று Video க்களை
அடிப்படையாகக் கொண்டும்
எழுதப்பட்டவை தான் நீங்கள்
படித்த ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு

ஆங்கில புத்தகங்களில் உள்ள
முக்கிய பகுதிகளை குறித்து
கொடுப்பேன் நண்பர்கள்
அனைவரும் அதை மொழி
பெயர்த்து கொடுப்பார்கள்
பின்னர் நான் அந்த
மொழிப்பெயர்ப்புகளையும்
புத்தகத்தையும் ஒப்பு நோக்கி
கருத்துக்களை உள் வாங்கிக்
கொண்டு டைப் செய்ய
ஆரம்பிப்பேன்

நான் ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை ஆராய்ச்சி
செய்து ஏறத்தாழ 500 பக்கங்களுக்கு
மேல் டைப் செய்து வைத்திருந்தேன்
அந்த கருத்துக்களில் கிட்டத்தட்ட
160 பக்கங்கள் வரைதான்
பதிவு செய்திருப்பேன்

விசாரணைக் காட்சிகளும்
பெரும்பாலான முக்கியமான
காட்சிகளும் அதனுடைய
கருத்து சிதைந்து விடக்கூடாது
என்ற காரணத்திற்காக பத்து
நாட்கள் ஒரே இரவில் எழுதினேன்
அதாவது இரவு 09.00 மணிக்கு
தொடங்கி காலை 06.30 மணி
வரை முடித்து விட்டு தூங்காமல்
அலுவலகத்திற்கு சென்றிருக்கிறேன்
தொடர்ச்சியாக ஒரே இரவில்
டைப் செய்து விட்டு
அதை இரண்டு அல்லது
மூன்று பதிவுகளாக பிரித்து
பதிவு செய்தேன்

எண்ணிக்கையில் அடங்காத
புத்தகங்களை படித்து
அதில் குறிப்பிட்ட பக்கங்கள்
600 பக்கங்களுக்கு மேல்
புத்தகங்களிலிருந்து
நகல் எடுத்து இருக்கிறேன்
இணையதளத்தில் இருந்து
1000 க்கும் மேல் உள்ள
பக்கங்களை தரவிறக்கம்
செய்து Print எடுத்திருக்கிறேன்

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு மற்றும்
அதில் இடம்பெறும் விசாரணைக்
காட்சிகளை தமிழில் முதன்
முதலில் திரைக்கதை வசனம்
அமைத்து எழுதி இருக்கிறேன்

ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாற்றை எனக்கு
எழுதுவதற்கு உறுதுணையாக
இருந்தவர்கள்

1,கிரிஷ் கிருஷ்ணா
இயக்குநர், இசையமைப்பாளர்
சென்னை

2.வெங்கட சுப்பிரமணி
Manager-வேலூர்

3.சையது ரியாஸ்
System Administrator-DUBAI

4.கார்த்தி
Visa Executive, சென்னை

5.சந்தோஷ குமார்
HR-Assistant. சென்னை

இவர்களுடைய அயராத
உழைப்பினாலும் உதவியினாலும்
ஒத்துழைப்பினாலும் உருவானது
தான் ஜியார்டானோ புருனோவின்
வாழ்க்கை வரலாறு

இதை எல்லாம் கடந்து
நான் எழுதுவதற்கு எந்தவிதமான
எதிர்ப்பும் சொல்லாமல்
எந்தவிதமான தடங்கலையும்
செய்யாமல் எனக்கு என்றும்
உறுதுணையாக இருந்து
கொண்டிருக்கும் என்னுடைய
அன்பு மனைவி பிரதிபா
அவர்களுக்கும் என்னுடைய
நன்றியினைத் தெரிவித்துக்
கொள்கிறேன்

என்னுடைய நண்பர் ஒருவர்
ஜியார்டானோ புருனோவின்
ஆத்மாவை 600 ஆண்டுகள்
கழித்து உயிரோடு உலவ
விட்டு இருக்கிறீர்கள் என்றார்
நான் சொன்னேன் இல்லை
600 ஆண்டுகளாக உலவிக்
கொண்டிருந்த ஜியார்டானோ
புருனோவின் ஆத்மாவை
அமைதி பெற
வைத்திருக்கிறேன் என்று !

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்