March 22, 2020

பரம்பொருள்-பதிவு-159


               ஜபம்-பதிவு-407
             (பரம்பொருள்-159)

(பாண்டவர்கள்
அறைக்குள்
நுழைகிறார்
கிருஷ்ணன்)

கிருஷ்ணன் :
“நாளை மறுநாள்
நடக்கவிருக்கும்
அமாவாசையை
நாளைய
தினத்திலேயே
வரும்படி செய்யப்
போகிறேன் - அதனால்
நாளை அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்குத்
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்யுங்கள்
என்று சொன்னேனே
செய்து விட்டீர்களா ?
நான் சொன்ன
ஏற்பாடுகள்
அனைத்தையும்
செய்து முடித்து
விட்டீர்களா?”

பீமன் :
“நாளை
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்குத்
தேவையான
அனைத்து
ஏற்பாடுகளையும்
செய்து விட்டோம்
ஆனால்……………..? "

கிருஷ்ணன் :
“என்ன ஆனால் ?”

தர்மர் :
“அரவானைத்
திருமணம் செய்து
கொள்ளக்கூடிய
எந்த பெண்ணும்
கிடைக்கவில்லை”

கிருஷ்ணன் :
“ஏன்
கிடைக்கவில்லை?”

தர்மர் :
“யாரும்
சம்மதிக்கவில்லை”

கிருஷ்ணன் :
“ஏன்
சம்மதிக்கவில்லை?”

தர்மர் :
“நாளை களப்பலியாகப்
போகும் அரவானை
யாரும் திருமணம்
செய்து கொள்ள
விரும்பவில்லை
அதனால்
தான் யாரும்
சம்மதிக்கவில்லை “

கிருஷ்ணன் :
“பொன் தருவதாக
சொன்னீர்களா ? “

தர்மர் :
“சொன்னோம் “

கிருஷ்ணன் :
“பொருள் தருவதாக
சொன்னீர்களா ?”

தர்மர் :
“சொன்னோம்”

கிருஷ்ணன் :
“ஆடை ,
அணிகலன்கள்
ஆபரணங்கள்
தருவதாக
சொன்னீர்களா?”

தர்மர் :
“சொன்னோம்”

கிருஷ்ணன் :
“நிலம், வீடு,
வயல் தருவதாக
சொன்னீர்களா?”

தர்மர் :
“சொன்னோம்”

கிருஷ்ணன் :
“இவ்வளவு
செல்வங்கள்
தருவதாக சொல்லியும்
பிறகு ஏன் யாரும்
சம்மதிக்கவில்லை?”

தர்மர் :
“அரவான்
இறந்த பிறகு
விதவையாக
இவ்வளவு
செல்வங்களை
வைத்துக் கொண்டு
இந்த உலகத்தில்
எப்படி
நிம்மதியாக
வாழ முடியும் ;
நிம்மதியாக
வாழ முடியாது
என்ற காரணத்தினால்
தான் யாரும்
சம்மதிக்கவில்லை”

கிருஷ்ணன்  :
“செல்வத்தில்
நிம்மதி கிடையாது
என்பதை மக்கள்
உணர்ந்திருப்பதாக
சொல்கிறாய்”

“நிம்மதியா அல்லது
செல்வமா என்ற
நிலை வரும்போது
தான் மக்கள்
நிம்மதியைத் தான்
தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்”

“நிம்மதி என்பது
தங்களுடைய
சந்தோஷங்கள்
அனைத்தையும்
இழந்து விட்டு
செல்வங்களை
சேர்ப்பதோ
அல்லது
பிறரை ஏமாற்றி
அவர்களுடைய
செல்வங்களை
அபகரிப்பதோ
கிடையாது என்பதை
இந்த உலகத்தில்
உள்ள மக்கள் தெரிந்து
வைத்திருக்கிறார்களா
என்று தெரியவில்லை “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 22-03-2020
//////////////////////////////////////////