December 09, 2019

பரம்பொருள்-பதிவு-94


              பரம்பொருள்-பதிவு-94

"நேரம் நகர்ந்த போது
நாள் உருவானது  ;
நாட்கள் நகர்ந்த போது
வாரம் உருவானது ;
வாரங்கள் நகர்ந்த போது
மாதம் உருவானது ;
மாதங்கள் நகர்ந்த போது
உலூபி அழகான ஒரு
ஆண் குழந்தையைப்
பெற்றெடுத்தாள் ;"

"பிறந்த ஆண் குழந்தையை
ஒரு தாய் தான் வளர்க்க
வேண்டும் என்றும் ;
பிறந்த பெண் குழந்தையை
ஒரு தந்தை தான் வளர்க்க
வேண்டும் என்றும் ;
இரு வேறுபட்ட
முறைகளை நம்முடைய
முன்னோர்கள் வகுத்து
வைத்திருக்கிறார்கள் ;"

"ஒரு தாய்
ஆண் குழந்தையை
வளர்க்கும் போது
அந்த ஆண்
குழந்தைக்கு 
முதலில்
அன்பை போதிப்பாள் ;
இரண்டாவதாக
அறிவைப் போதிப்பாள் ;
மூன்றாவதாக
வீரத்தைப் போதிப்பாள்.;
இதனால் அந்த
ஆண் குழந்தை வளர்ந்து
ஆண் மகனாக
இச்சமுதாயத்தில்
வாழும் போது
அந்த ஆண் மகன்
இச்சமுதாயத்தில் எந்தச்
செயலைச் செய்தாலும்
முதலில்
அன்பை
வெளிப்படுத்துவான் ;
இரண்டாவதாக
அறிவை
வெளிப்படுத்துவான் ;
மூன்றாவதாக
வீரத்தை
வெளிப்படுத்துவான்;
அதாவது
அன்பு ; அறிவு ; வீரம் ;
என்ற வரிசையில்
ஒரு ஆண் தன்னுடைய
குணங்களை வெளிப்படுத்த
வேண்டும் என்ற
காரணத்திற்காக
ஆண் குழந்தையை
தாய் வளர்க்க
வேண்டும் என்றார்கள்
நம்முடைய முன்னோர்கள்"

"ஒரு தந்தை
பெண் குழந்தையை
வளர்க்கும் போது
அந்த பெண் குழந்தைக்கு
முதலில்
வீரத்தை போதிப்பார் ;
இரண்டாவதாக
அறிவைப் போதிப்பார் ;
மூன்றாவதாக
அன்பைப் போதிப்பார்.;
இதனால் அந்த பெண்
குழந்தை வளர்ந்து
பெண் மகளாக
இச்சமுதாயத்தில் வாழும்
போது அந்த பெண்
மகள் இச்சமுதாயத்தில்
எந்தச் செயலைச்
செய்தாலும்
முதலில்
வீரத்தை
வெளிப்படுத்துவாள் ;
இரண்டாவதாக
அறிவை
வெளிப்படுத்துவாள்  ;
மூன்றாவதாக
அன்பை
வெளிப்படுத்துவாள் ;
அதாவது
வீரம் ; அறிவு ; அன்பு ;
என்ற வரிசையில்
ஒரு பெண் தன்னுடைய
குணங்களை வெளிப்படுத்த
வேண்டும் என்ற
காரணத்திற்காக
பெண் குழந்தையை
தந்தை வளர்க்க
வேண்டும் என்றார்கள்
நம்முடைய முன்னோர்கள் "

"உலூபி தான் பெற்றெடுத்த
ஆண் குழந்தையை
தானே வளர்த்தாள் ;
தாயால் வளர்க்கப்படும்
பேற்றை அந்த ஆண்
குழந்தை பெற்றது ;.

"உலூபி பெற்றெடுத்த
அந்த ஆண் குழந்தையின்
பெயர் தான்…………………………….? "

"பிரபஞ்சத்தில்
வித்தியாசமான
நிகழ்வின் மூலம் பிறந்த
அந்த குழந்தையின்
பெயர் தான்…………………………..?"

"அற்புதத்தில் அற்புதம்
என்று சொல்லத்தக்க
விதத்தில் பிறந்த
அந்த குழந்தையின்
பெயர் தான்…………………………?"

"இயற்கையே அதிசயித்து
பார்க்கும் விதத்தில் பிறந்த
அந்தக் குழந்தையின்
பெயர் தான்……………………………?"

"அரவான்"
"அரவான்"
"அரவான்"

"அரவம் + ஆன் = அரவான்
அரவம் என்றால்
நாகம் என்று பொருள் ;
ஆன் என்றால்
மனிதன் என்று பொருள் ;
அரவான் என்றால்
நாகமும் மனிதனும்
சேர்ந்ததால்
பிறந்தவன் என்று பொருள் ;"

"அதாவது நாக
கன்னிகையான உலூபிக்கும் ;
மனிதப் பிறவியான
அர்ஜுனனுக்கும் பிறந்தவன்
அரவான் என்று பொருள் "

"அரவான் பிறந்த
மகிழ்ச்சியில் உலூபியின்
கண்களிலிருந்து வெளிப்பட்ட
ஆனந்தக் கண்ணீர்
குழந்தை அரவானின்
கன்னத்தில் விழுந்தது ;
வருங்காலத்தில் இந்த
உலகமே அரவானுக்காக
கண்ணீர் வடிக்கப்
போகிறது என்ற செய்தி
அரவான் என்ற
தெய்வமகனை பெற்றெடுத்த
அந்த தெய்வத்
தாயான உலூபிக்கு
அப்போது தெரியாது ;"

"ஆமாம் அரவான்
பிறந்து விட்டான் ;
வரலாற்றில் புதிய
சகாப்தம் தொடங்கி விட்டது"

---------- இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------  09-12-2019
//////////////////////////////////////////