October 26, 2018

திருக்குறள்-பதிவு-39


                       திருக்குறள்-பதிவு-39

“”””பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை
காணப்படும்”””

எண்ணிலடங்காத
பல பிறவிகளை
பல்வேறுபட்ட
காலங்களில்
பல்வேறு நிலைகளில்
நாம் எடுத்து
துன்பம் என்னும்
துயரச் சேற்றில்
சிக்கி ஆற்றொணாத்
துயரத்தில்
தள்ளாடிக் கொண்டு
இருக்கிறோம்
இவ்வாறு தொடர்ந்து
நாம் ஓயாமல்
பல பிறவிகள்
எடுக்கக் காரணம்
பற்றை நாம்
பற்றிக் கொண்டு
இருப்பதே ஆகும்

நம்முடைய
உடைமை மீது
நாம் வைக்கும்
விருப்பத்தை
பற்று என்கிறோம்

இத்தகைய
பற்றை இரண்டு
நிலைகளில் பிரித்து
விடலாம்

ஒன்று  : அகப்பற்று
இரண்டு : புறப்பற்று

நான் என்கிற
எண்ணம் தான்
அகப்பற்று எனப்படும்

எனது என்கிற
எண்ணம் தான்
புறப்பற்று எனப்படும்

நான் உழைத்தேன்
நான் சம்பாதித்தேன்
நான் எல்லோரையும்
காப்பாற்றினேன்
நான் நடத்தினேன்
நான் மிகவும்
அறிவாளி
நான் இந்த
செயலை செய்தேன்
இந்த செயலை
எண்ணால் தான்
செய்ய முடியும்
வேறு யாராலும்
செய்ய முடியாது
என்ற எண்ணம் தான்
நான் என்னும்
இந்த எண்ணம் தான்
அகப்பற்று எனப்படும்

என்னுடைய வீடு
என்னுடைய நிலம்
என்னுடைய நகை
என்னுடைய பணம்
என்னுடைய சொத்து
என்று கூறுகிறோமே
அந்த எனது
என்ற எண்ணம் தான்
புறப்பற்று எனப்படும்

ஒரு சட்டியில்
அரிசியைப் போட்டு
கட்டையினால்
நெருப்பை மூட்டி
அரிசியை கொதிக்க
வைத்துக்
கொண்டிருக்கிறோம்
அரிசியானது
கொதித்துக்
கொண்டிருக்கிறது
எரியும் கட்டையை
எடுத்து விட்டால்
அரிசியானது கொதிப்பது
நின்று விடும்
எரியும் கட்டை
என்பது காரணம்
அரிசி கொதிப்பது
என்பது காரியம்
காரணம் இல்லாமல்
காரியம் இல்லை

பற்று என்ற
காரணத்துடன்
பிறவி என்ற
காரியம் பிணைந்து
இருக்கிறது

எரியும் நெருப்புக்
கட்டையை எடுத்தால்
எப்படி அரிசியானது
கொதிப்பது
நின்று விடுகிறதோ
அதைப்போல
அகப்பற்று
புறப்பற்று
என்ற இரண்டு
பற்றுகளையும்
நம்மிடம் இருந்து
எடுத்து விடும்போது
நாம் இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே மாறி
விடுகிறோம்
எனவே, அது
அதுவாக மாறி
விடுவதால் நமக்கு
பிறவி என்பது
ஏற்படாது

அகப்பற்று
புறப்பற்று
என்ற இரண்டு
பற்றுகளையும்
விட்டு விட்டு
இறைவனுடன்
இரண்டறக் கலந்து
இறைவனாகவே மாறி
விட்டவர்களுக்கு
பிறவி என்பது
கிடையாது
பற்றை எல்லாம்
விடாமல்
பற்றை பற்றிக்
கொண்டு
இருப்பவர்களுக்கு
இறைவனுடன்
இரண்டறக் கலக்காமல்
இறைவனாகவே
மாறாமல்
இருப்பவர்களுக்கு
பிறவி என்பது
ஏற்பட்டு வருத்தப்பட்டு
துன்பப்பட வேண்டியது
என்பதைத் தான்

பற்றற்ற கண்ணே
பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை
காணப்படும்

என்ற திருக்குறளின்
மூலம் நமக்கு
தெரியப்படுத்துகிறார்
திருவள்ளுவர்

---------  இன்னும் வரும்
---------  26-10-2018
/////////////////////////////////////////////////