June 25, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-31



               நம் முன்னோர்கள் புத்திசாலிகள்- பதிவு-31

எண்ணம், சொல்,
செயலால்
பிற உயிர்களின்
உயிருக்கும், உடலுக்கும்
துன்பத்தை விளைவிக்கக்
கூடியவை அனைத்தும்
பாவம் எனப்படும்

பொய் பேசுதல்,
பொய் சாட்சி சொல்லுதல்,
பிறரை ஏமாற்றி பணம்
சம்பாதித்தல்,
பிறருடைய நிலத்தை
அபகரித்தல்,
பிறருடைய வீட்டை
ஏமாற்றி வாங்கிக்
கொள்ளுதல்,
நம்பிக்கை துரோகம்
செய்தல்,
கொலை செய்தல்,
பிறர் பொருட்களை
திருடுதல்,
ஊர் மக்களை
எமாற்றி கொள்ளை
அடித்தல்,
பிறன்மனை நோக்குதல்,
இன்னும் பல
குற்றங்களும்
பாவத்தில்  வரும்

மனிதன் தெரிந்து
செய்த பாவங்களையும்,
தெரியாமல் செய்த
பாவங்களையும்,
ஆராய்ந்து பார்த்தால்
அவைகள் அனைத்தும்
பொய், சூது, கொலை,
கொள்ளை,
கற்பு நெறி பிறழ்தல்
என்ற ஐந்து
நிலைகளுக்குள்
தான் இருக்கும்
என்பதை
நாம் அறிந்து
கொள்ளலாம்

ஒரு(1)
மனிதன்
பாவம், புண்ணியம்
என்ற
இரண்டு(2)
செயல்ளைச் செய்தாலும்
பாவத்தை
அறியாமை, அலட்சியம்,
உணர்ச்சி வயப்படுதல்
என்ற
மூன்று(3)
நிலைகளில் இருந்து
செய்கிறான்

அதனால் மனிதனுக்கு
இன்பம், துன்பம்
அமைதி, பேரின்பம்
என்ற
நாலறிவு(4)
என்று சொல்லப்படக்
கூடியவைகள்
எப்படி உண்டாகின்றன
என்பதை
தன் வாழ்வில்
அறிய முடியாமலேயே
மனிதன்
போய் விடுகிறான்

இதனால் மனிதன்
பஞ்சமா
பாதகங்கள்
என்று சொல்லப்படக்
கூடிய
பொய், சூது,
கொலை, கொள்ளை
கற்புநெறி பிறழ்தல்
ஆகிய
ஐந்து(5)
பாவங்களை
மனிதன்
காம, குரோத, லோப,
மோக, மத, மாச்சரியம்
என்று சொல்லப்படக்
கூடிய
பேராசை, சினம்,
கடும்பற்று,
முறையற்ற பால்கவர்ச்சி.
உயர்வு தாழ்வு
மனப்பான்மை.
வஞ்சம்  
என்ற
ஆறு(6)
குணங்களைக் கொண்டு
பாவங்களைச் செய்கிறான்
அதனால் மனிதன்
ஏழு(7)
ஜென்மத்திற்கும்
துன்பங்களை
அனுபவித்து
கஷ்டப்படுகிறான்
இதனால் மனிதனுக்கு
நிம்மதி, அமைதி
இன்பம், நோயற்ற வாழ்க்கை
என்பது
எட்டும்(8)
கனியாக இல்லாமல்
எட்டாக் கனியாகி
விடுகிறது
இதனால் மனிதன்
ஒன்பது(9)
ஓட்டைகளைக் கொண்ட
இந்த உடலைக்
கொண்டு
துன்பங்களை அனுபவித்து
பிறவி தோறும்
கஷ்டங்களில் உழன்று
இறக்கிறான்
பசி வந்தால்
எப்படி
பத்தும்(10)
பறந்து போகுமோ
அதைப்போல
மனிதன் பாவம்
செய்தால்
அவனிடமிருந்து
நிம்மதி போய் விடும்

என்பதை
மனிதன்
உணர்ந்து கொண்டால்
பாவம் செய்யாமல்
இருப்பான்
உணர்ந்து கொள்ளவில்லை
என்றால்
மனிதன் தொடர்ந்து
பாவம் செய்து
கொண்டே இருப்பான்.

---------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////////////