April 02, 2019

7-ஜியார்டானோ புருனோ உருவான கதை(சுபம்)


7-ஜியார்டானோ புருனோ உருவான கதை(சுபம்)

அன்பிற்கினியவர்களே,

அவனன்றி ஒரு
அணுவும் அசையாது
கடவுள் தூணிலும் இருக்கிறான்
துரும்பிலும் இருக்கிறான் என்ற
உண்மையை உணர்ந்த
பெரியோர்கள் - மனிதர்கள்
இறைவனுடன் இணைப்பை
ஏற்படுத்திக் கொண்டு
தங்களுடைய தேவையை
பூர்த்தி செய்து கொள்வதற்கு
இணைப்புப் பாலமாக
இருந்திருக்கின்றனர்

அந்தக் காலக்கட்டத்தில்
மனிதர்களுக்கும், கடவுளுக்கும்
இடையில் உண்மையை
உணர்ந்தவர்கள் இணைப்புப்
பாலமாக இருந்து வந்துள்ளனர்
ஆனால் நாளடைவில்
உண்மையை உணர்ந்தவர்கள்
இல்லாத காரணத்தினால்
பொருளாதாரத் தலைவர்கள்
மனிதர்களுக்கும், கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக
இருந்து வருகின்றனர்.

பொருளாதாரத் தலைவர்கள்
தங்கள் பதவியை தக்க
வைத்துக் கொள்வதற்காகவும்
அதிகாரத்தை நிலை
நிறுத்துவதற்காகவும்
மதப்பற்று உள்ளவர்களையும்
அரசியல் தலைவர்களையும்
தங்களுக்கு துணையாக
வைத்துக் கொண்டு
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக
இருந்து வருகின்றனர்

உண்மையை உணர்ந்தவர்கள்
மதத்திற்கு இணைப்புப் பாலமாக
இருந்த சமயங்களில் மதமானது
மதத் தன்மை உடையதாக
இருந்தது - உண்மையை
உணராதவர்கள் மதத்திற்கு
தலைவர்களாக ஆன பிறகு
மதங்கள் மதப்பற்று
மிக்கதாகவும்- மனிதர்கள்
மதத் தன்மை அற்றவர்களாகவும்
மாறி விட்டனர்

பட்டினத்தார் அந்தக்
காலத்திலேயே கோடி கணக்கில்
பெறுமானமுள்ள சொத்துக்கள்
அனைத்தையும் துறந்து விட்டு
உண்மையை உணர்ந்து
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக இருந்தார்
அவ்வாறே புத்தரும் தன்னுடைய
ராஜ்ஜியத்தையே துறந்து
விட்டு சென்று உண்மையை
உணர்ந்து மனிதர்களுக்கும்
கடவுளுக்கும் இணைப்புப்
பாலமாக இருந்தார்

அன்று மனிதர்களுக்கும்
கடவுளுக்கும் இணைப்புப்
பாலமாக இருந்தவர்கள்
அனைத்தையும் துறந்து விட்டு
ஒன்றும் இல்லாதவர்களாக
இருந்தார்கள் - ஆனால் இன்றோ
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப் பாலமாக
இருப்பவர்கள் என்று தங்களை
சொல்லிக் கொள்பவர்கள்
அதாவது மதகுருமார்கள்
மதத்தலைவர்கள்
மதக் கருத்துக்களை
மக்களிடையே கொண்டு
செல்பவர்கள் - மனிதர்களுக்கும்
கடவுளுக்கும் இடையில்
இணைப்பை ஏற்படுத்துகிறேன்
என்று சொல்லிக் கொண்டு
திரியும் அனைவரும் கோடியில்
திளைக்கும் பணக்காரர்கள்

அன்று இணைப்புப் பாலமாக
இருந்தவர்கள்
ஒன்றுமில்லாதவர்களாக
இருந்தனர்- ஆனால் இன்றோ
இணைப்புப் பாலமாக இருப்பவர்கள்
கோடீஸ்வர்களாக இருக்கிறார்கள்
நான் கடவுள் அருளால்
நிரப்பப் பட்டவன்
கடவுளின் பெருமையை
மக்களிடம் சொல்ல கடவுள்
என்னை தேர்ந்தெடுத்தார்
கடவுளுக்காகவே என்
வாழ்க்கையை நான்
அர்ப்பணித்து இருக்கிறேன்
என்று மயக்கும்
வார்த்தைகளை பேசும்
இவர்களைக் கவனித்தால்
இவர்கள் அனைவரும்
பணக்காரர்களாகத் தான்
இருப்பார்கள்
கோடியில் குளித்திருப்பார்கள்
பணத்தில் மிதந்திருப்பார்கள்
நாணயங்களில் களித்திருப்பார்கள்
யாரும் ஏழையாக
இருக்க மாட்டார்கள்

உண்மையை உணராமல்
மனிதர்களுக்கும் கடவுளுக்கும்
இணைப்புப்பாலமாக
இருப்பவர்கள்- மக்கள்
அனைவரும் ஒன்றும்
தெரியாதவர்களாக
இருக்கும் வரையில் தான்
அவர்களை ஏமாற்றி
பணம் சம்பாதிக்க முடியும்
என்ற காரணத்திற்காக
மனிதர்களை அடிமைப்படுத்தும்
முயற்சிகளை செய்து
கொண்டிருக்கின்றனர்
என்ற உண்மையை
ஜியார்டானோ புருனோ
உணர்ந்த காரணத்தினால்
கிறிஸ்தவ மதம்
மனிதனை கடவுளுடன்
இணைக்கும் இணைப்புப்
பாலமாக இருப்பதாக
தன்னை காட்டிக் கொண்டு
மனிதர்களை அடிமைப்படுத்தும்
வேலையை செய்து
கொண்டிருக்கிறது
அந்த செயலை நிறுத்த
வேண்டும் என்ற சொன்ன
காரணத்திற்காக ஜியார்டானோ
புருனோ சிறையில்
அடைத்து சித்திரதை
செய்யப்பட்டார் - மன்னிப்பு
கேட்டால் விட்டு விடுகிறோம்
என்று சொல்லியும்
ஜியார்டானோ புருனோ
மன்னிப்பு கேட்கவில்லை
அதனால் அவரை உயிரோடு
எரித்து கொன்று விட்டனர்

கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக செயல்பட்ட
காரணத்திற்காக ஜியார்டானோ
புருனோ உயிரோடு
எரித்துக் கொல்லப்பட்டாலும்
ஜியார்டானோ புருனோவின்
புகழ் பல நூற்றாண்டுகள்
கடந்து இன்றும் இருப்பது
போலவே – இந்த உலகம்
உள்ளளவும் இருக்கும்
என்பது மட்டும் உண்மை

------சுபம்

என்றும் அன்புடன்
K.பாலகங்காதரன்
//////////////////////////////////////////

ஜியார்டானோ
புருனோவை
மன்னிப்பு கேட்டால்
உயிரோடு
விட்டு விடுகிறோம்
என்று சொல்லியும்
உயிரைப் பற்றிக்
கவலைப்படாமல்
தான் சொன்ன கருத்து
சரிதான் எதற்காக
நான் மன்னிப்பு
கேட்க வேண்டும்
மன்னிப்பு கேட்க
மாட்டேன் என்று
ஜியார்டானோ புருனோ
சொன்ன காட்சி
  
//////////////////////////////////