February 28, 2019

திருக்குறள்-பதிவு-114


                  திருக்குறள்-பதிவு-114

“ ஜியார்டானோ
புருனோவின் முழுஉருவ
வெண்கல சிலை
மூன்று முக்கியமான
கூறுகளைத் தன்னுள்
கொண்டதாக இருக்கிறது “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலை
அனைவரையும் ஈர்த்து
விடும் வகையில்
அமைந்து இருப்பதோடு
மட்டுமல்லாமல் - அந்த
சிலையைப் பார்ப்பவர்கள்
நின்று பார்த்து அதன்
பெருமையை உணர்ந்து
கொள்ள வேண்டும் என்ற
நினைப்பை தூண்டும்
விதத்திலும் அமைந்து
இருப்பது இந்த
சிலையின் சிறப்பாகும் “

“ ஜியார்டானோ
புருனோவின் சிலையை
மக்கள் பார்க்கும்போது
அவர்களுடைய மனதில்
ஜியார்டானோ புருனோ
நிறைய தன்னம்பிக்கைகளை
கொண்ட ஒரு மனிதராகவும்
அஞ்சா நெஞ்சத்தையுடைய  
ஒரு மனிதராகவும் தெரிகிறார் “

 “ உலகில் உள்ள
பெரும்பாலான சிலைகளின்
தலை மேல் நோக்கி
வானத்தை நோக்கி
பார்த்த வண்ணம் இருக்கும் ;
அல்லது தலை நேராக
இந்த உலகத்தை பார்த்தபடி
இருக்கும்  ; - ஆனால்
ஜியார்டானோ புருனோவின்
சிலை இதிலிருந்து
மாறுபட்டு தலை கவிழ்ந்த
நிலையில் இருக்கிறது ;
அதாவது ஜியார்டானோ
புருனோ தான் சொன்ன
உண்மைகள் மக்களுக்கு
புரிந்திருக்கிறதா ? என்ற
சிந்தனையுடன் மக்களை
பார்க்கும்படியான
நிலையில் இருக்கிறது ;
அதேபோல் மக்கள் அவர்
சொன்ன கருத்துக்கள்
அனைத்தும்
உண்மையானதாக
இருக்குமோ  ? என்று
தலையை மேல் நோக்கி
ஆச்சரியத்துடன் அவரை
வியந்து பார்க்கும்
வண்ணம் சிலை
அமைந்து இருக்கிறது ; “

“ தன்னுடைய கருத்துக்கள்
எவ்வளவு தூரம் மக்களை
சென்று அடைந்திருக்கிறது
என்ற பதில் தெரியாத
கேள்விக் குறியுடன்……?
ஜியார்டானோ புருனோ
இருக்கிறார் என்பதைக்
குறிக்கும் வகையில்
ஜியார்டானோ
புருனோவின் முகம்
ஏதோ ஒன்றை சிந்தித்துக்
கொண்டு இருப்பதைக்
குறிக்கும் வகையில்
அமைந்து இருக்கிறது ; ‘

“ ஜியார்டானோ புருனோ
அணிந்து இருக்கின்ற
உடையை வைத்து
அவர் எத்தகைய மனிதர்
என்பதை அந்த சிலை
சொல்கிறது - அவர்
அணிந்து இருக்கின்ற
உடையானது தலை
முதல் பாதம் வரை
மூடிய நிலையில் இருக்கிறது
அவர் அணிந்து இருக்கின்ற
உடை ஒரு டொமினிக்கன்
அணியும் உடை
போன்று உள்ளது “


“ ஜியார்டானோ
புருனோவிற்கு அளிக்கப்பட்ட
சித்திரவதையின் மூலம்
அவர் பலமான மன
அழுத்தத்தில் இருந்த போதும்
விசாரணையின் போது
அவர் அளித்த பதில்கள்
மூலம் ஜியார்டானோ
புருனோ எவ்வளவு
நெஞ்சுறுதி படைத்த மனிதர்
என்பதை விசாரணை
அதிகாரிகள் இந்த
உலகத்தில் உள்ள
மக்களுக்கு தெரியப்
படுத்த நினைத்தனர்”

“ ஜியார்டானோ புருனோ
தான் சொன்ன உண்மைகளை
நிலைநாட்டுவதற்காக
தன்னுடைய உயிரே
போனாலும் பரவாயில்லை
என்று இறுதி வரை
பின்வாங்காமல் தான்
சொன்ன வார்த்தையில்
உறுதியாக இருந்தார் “

“ நீதி விசாரணையை
ஜியார்டானோ புருனோ
கையாண்ட விதம் பற்றி
குறிப்பிடும் குறிப்புகள்
அனைத்தும் அவருடைய
குணத்திற்கும் அவர்
வாழ்ந்து காட்டிய
வாழ்க்கைக்கும்
பொருத்தமானவையாக
இருக்கிறது “

“ ஜியார்டானோ புருனோ
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபை நடைமுறைப்
படுத்தி வைத்திருக்கும்
பழக்க வழக்கங்கள் ;
சர்ச்சுகள் கடைபிடித்து
வரும் மத பழக்கவழக்கங்கள் ;
பைபிளில் சொல்லப்பட்ட
கருத்துக்கள் ஆகியவற்றிற்கு
எதிராக கருத்துக்கள் ;
கொண்டிருந்தாலும் - அவர்
கிறிஸ்தவ மதத்தின் மீதும்
இயேசு கிறிஸ்து மீதும்
மிகுந்த கடவுள் நம்பிக்கை
கொண்டவராக இருந்தார் “

“ இந்த உலகத்தைப் பற்றிய
அவருடைய எண்ணங்கள்
ஒரு போப்பிற்கு இருப்பதை
விடவும் வேறுபட்டு இருந்தது. “

“ ஜியார்டானோ புருனோ
சொன்ன அனைத்து
கருத்துக்களும் அறிவியல்
பூர்வமாக இருந்தது ;
ஆனால் போப் சொன்ன
அனைத்து கருத்துக்களும்
அறிவியல் பூர்வமாக
இல்லாமல் இருந்தது ;
எனவே, போப் சொன்ன
கருத்துக்களை மட்டுமே
வேத வாக்காக எடுத்துக்
கொண்டு வாழ்ந்து கொண்டு
இருந்த மக்களுக்கு போப்பின்
கருத்துக்கள் அனைத்தும்
பொய்யானது என்றும்
ஜியார்டானோ புருனோவின்
கருத்துக்கள் அனைத்தும்
உண்மையானது என்றும்
நினைக்கத் தொடங்கி
விட்டனர்.”

போன்ற கருத்துக்களை
வெளிப்படுத்தும் வகையில்
ஜியார்டானோ புருனோ
சிலையின் ஒரு கூறு
அமைந்து இருந்தது
மட்டுமல்லாமல்
ஜியார்டானோ புருனோ
கையில் வைத்திருக்கும்
புத்தகமும் ஒரு முக்கியமான
கருத்தை சொல்ல
வருகிறது ………………….?

---------  இன்னும் வரும்

----------  K.பாலகங்காதரன்
---------  28-02-2019
//////////////////////////////////////////////