July 16, 2019

பரம்பொருள்-பதிவு-42


                  பரம்பொருள்-பதிவு-42

" திருஞான சம்பந்தர்
திருவொற்றியூரில்
தங்கி இருந்து
சைவநெறியைப் பரப்பிக்
கொண்டிருப்பதன் மூலம்
இந்து மதத்தின்
ஒரு பிரிவான
சைவ மதத்திற்கு
தொண்டாற்றிக்
கொண்டு இருக்கிறார்
என்ற செய்தியையும் ;

உலகில் உள்ள
மக்கள் அனைவரும்
சிவனின் பெருமையை
உணர்ந்து
சிவனை வணங்கி
வாழ்வில் உயர்வடைய
வேண்டும் என்ற நோக்கில்
அரும்பெரும் செயல்களை
திருஞான சம்பந்தர்
செய்து கொண்டிருக்கிறார் ;
என்ற செய்தியையும் ;

“சிவநாமத்தை
அனுதினமும் தான்
மட்டும் உச்சரிக்காமல்
அனைவரையும்
உச்சரிக்க வைக்க
வேண்டும் என்ற
உயர்ந்த நோக்கத்திற்காக
திருஞான சம்பந்தர்
பிரமிக்கத்தக்க
செயல்களைச் செய்து
கொண்டிருக்கிறார்
என்ற செய்தியையும்

யாரெல்லாம்
தன்னிடம் வந்து
சொல்கிறார்களோ ?
அவர்களுக்கெல்லாம்
அளவற்ற பொன்னையும் ;
பொருளையும் ; வாரி
வாரி வழங்கினார்
சிவநேசர்;

" திருஞான சம்பந்தரின்
பெயரைக் கேட்கும்
போது மட்டுமல்ல ………..
திருஞான சம்பந்தர்
செய்து கொண்டிருக்கும்
செயல்களின் மேன்மைகளை
கேட்கும் போதும் கூட ……!
சிவநேசருக்கு ஏற்டக்கூடிய
மகிழ்ச்சி இத்தகைய
தன்மையைக் கொண்டது
என்று விவரிக்க
முடியாத அளவிற்கு
சிவநேசர் மிக்க
மகிழ்ச்சியுடன் விளங்கினார் "

" சிவநேசர் தான்
தங்கி இருந்த
திருமயிலாப்பூரிலிருந்து
திருஞான சம்பந்தர்
தங்கி இருந்த
திருவொற்றியூர் வரை
நடைபந்தர் அமைத்தார் ;
அந்த நடைபந்தரில்
தூய அழகான
உடைகளை அணிவித்தார் ;
மகாதோரணங்களைக்
எத்தகைய கலைநயத்துடன்
கட்ட வேண்டுமோ?
அத்தகைய
கலைநயங்களைப்
பயன்படுத்தி கலை
நயத்துடன் கட்டினார் ;
வாழை ; கமுகு ;
போன்றவைகளை
எந்த எந்த இடங்களில்
எல்லாம் வைக்க
வேண்டுமோ ?
அந்த அந்த இடங்களில்
எல்லாம் நாட்டினார் ;
பூமாலைகளை
கண்டவர் மயங்கும்
வண்ணம் அழகு சிறிதும்
குலையாமல் கட்டித்
தொங்கவிட்டார் ;
வெண்கொடிகளை
தேவைப்படும் இடங்களில்
எல்லாம் பட்டொளி
வீசி பறக்கும் படி
பறக்க விட்டார் ;
திருமயிலாப்பூர் முதல்
திருவொற்றியூர் வரை
எல்லா இடங்களிலும்
அலங்காரம் செய்து
மகிழ்ச்சியுற்றார் ;"

" வீதிகள் யாவும்
சந்தனத்தைக் கொண்டு
மெழுகியதன் மூலம்
வீதிகள் அனைத்தும்
வாசனையால் மணந்தது ;
அதனைத் தொடர்ந்து
களப கஸ்தூரியைக்
கொட்டி மெழுகியதன்
மூலம் வாசனை மேலும்
அதிகரித்து மணந்தது ;
காண்பவர் அனைவரும்
இது என்ன
தேவலோகமோ என்று
ஆச்சரியப்படும் வகையில்
தேவலோகம் போல்
திருமயிலாப்பூர் முதல்
திருவொற்றியூர் வரை
அழகுப்படுத்தினார் ;"
சிவநேசர் "

“திருமயிலாப்பூரில் குடி
கொண்டிருக்கும் எல்லாம்
வல்ல பரம்பொருளான
சிவபெருமானை தரிசிக்க
வேண்டும் என்ற
நோக்கத்துடன்
திருஞான சம்பந்தர்
திருவொற்றியூரை
விட்டுப் புறப்பட்டு
வரும்போது - அவருடன்
சிவன்பால் பக்தி
கொண்டவர்கள் ;
சிவன்பால் பக்தி
கொண்டு சைவநெறி
தழைத்தோங்குவதற்காக
தொண்டாற்றிக்
கொண்டிருக்கும்
சிவனடியார்கள் ;
திருஞான சம்பந்தர்
மேல் அளவற்ற பற்று
கொண்டவர்கள் ; - ஆகிய
அனைவருடனும்
திருஞான சம்பந்தர்
திருமயிலாப்பூரை
வந்தடைந்தார் ;
அப்போது அவருக்கு
பதினாறு வயது”

“ திருமயிலாப்பூர்
கபாலீச்சுரர் கோயிலில்
எழுந்தருளி அருள்
வழங்கிக் கொண்டிருக்கும்
கபாலீச்சுரரையும்
கற்பகவல்லியையும்
பன்முறை பணிந்து
வணங்கினார் “

“கோயிலை விட்டு
வெளியே வந்தவுடன்
பெருமானே! வருக! வருக!
தாங்கள் வரவு
நல்வரவு ஆகட்டும்!- என்று
அழைத்துக் கொண்டே
திருஞான சம்பந்தரை
நோக்கி ஓடி
வந்தார்…………………………………….?

--------  இன்னும் வரும்

---------- K.பாலகங்காதரன்
--------- 16-07-2019
//////////////////////////////////////////////////////////