February 18, 2022

ஜபம்-பதிவு-696 (சாவேயில்லாத சிகண்டி-30)

 ஜபம்-பதிவு-696

(சாவேயில்லாத

சிகண்டி-30)

 

அம்பை :

காதலின் வலிமை

தெரியாமல் பேசுகிறீர்கள்

 

பீஷ்மர் :

காதலின் வலிமையை

எப்படி தெரிந்து

கொள்வது

 

அம்பை :

சால்வன் என்னை

ஏற்றுக் கொள்வதில்

இருந்து

தெரிந்து கொள்வீர்கள்

 

பீஷ்மர் :

நடக்கப்போவதை

நான் மட்டுமல்ல

காலமும் தான்

பார்க்கப் போகிறது

 

அம்பை :

பாருங்கள்

நன்றாகப் பாருங்கள்

பார்த்துக்

கொண்டே இருங்கள்

 

பீஷ்மர் :

யார் அங்கே

 

(பீஷ்மர் காவலாளியைக்

கூப்பிடுகிறார்

 

காவலாளி ஓடி வந்து

அவர் முன்னால்

நிற்கிறான்

 

சௌபால

நாட்டு அரசர்

சால்வனை

சந்திப்பதற்காகச்

செல்லும்

இளவரசி

அம்பையை

சௌபால நாட்டில்

பத்திரமாக

விட்டு விட்டு

வாருங்கள்

 

காவலாளி :

அப்படியே ஆகட்டும்

 

(பீஷ்மர் அம்பையைப்

பார்த்து பேசுகிறார்)

 

பீஷ்மர் :

நீங்கள் கிளம்பலாம்

 

(அம்பை பீஷ்மரை

பார்த்து விட்டு

நடந்து செல்கிறாள்

 

அம்பை நடந்து

செல்வதை பீஷ்மர்

பார்த்துக் கொண்டு

இருந்தார்

 

சௌபால நாட்டு

மன்னன் சால்வனைச்

சந்திப்பதற்காக

அம்பை தேரில்

ஏறி சென்று

கொண்டிருந்தாள்

 

அம்பை சாதாரண

பெண் அல்ல

 

இந்த அம்பையின்

கைகளில் தான்

பீஷ்மரின் உயிரே

இருக்கிறது

 

சாகாத மனிதருக்கு

சாவைத் தரப்போகிறவர்

தான் இந்த அம்பை

 

யாராலும் வீழ்த்த

முடியாத பீஷ்மரை

வீழ்த்தப் போகிறவர்

தான் இந்த அம்பை

 

பீஷ்மருக்கு இறப்பைத்

தரப்போகிறவர்

தான் இந்த அம்பை

 

குருஷேத்திரப் போரின்

போக்கையே மாற்றி

அமைக்கப் போகிறவர்

தான் இந்த அம்பை

 

அம்பை சிகண்டியாக

மாறி செலுத்தும்

அம்பினால் தான்

குருஷேத்திரப் போரில்

பீஷ்மர்

இறக்கப் போகிறார்

 

யாராலும் வீழ்த்த

முடியாத

பீஷ்மரை வீழ்த்தி

வல்லவனுக்கு

வல்லவன் இந்த

அவனியில் உண்டு

என்று

நிரூபிக்கப் போகிறவர்

தான் இந்த அம்பை

 

மரணமற்றவரும்

அழிவில்லாதவரும்

யாராலும் அழிக்க

முடியாதவரும்

விருப்பப்படும் போது

மட்டுமே

மரணம் நிகழும்

என்ற வரத்தைப்

பெற்றவரும்

ஆகிய பீஷ்மரை

மரணமடையச் செய்ய

வேண்டும்

என்பதற்காகவே

தவம் செய்து

வரத்தைப் பெற்று

அம்பை

சிகண்டியாக மாறி

குருஷேத்திரப் போரில்

பீஷ்மரின் நெஞ்சைத்

துளைக்கும்

அம்பை விட்டு

பீஷ்மரின் இறப்புக்குக்

காரணமாக

இருக்கப்போகும் அம்பை

சால்வனைச்

சந்திப்பதற்காக சென்று

கொண்டிருக்கிறார்

 

அம்பையின் வாழ்க்கையை

சுருக்கமாக சொல்லி

விடலாம்

அதாவது

அம்பைக்கும் பீஷ்மருக்கும்

பகை உண்டானது

பீஷ்மரைக் கொல்வதற்காக

அம்பை வரம் பெற்றாள்

கிகண்டியாக மாறி

குருஷேத்திரப் போரில்

பீஷ்மரைக் கொன்றாள்

 

படிப்பதற்கு சுருக்கமாக

இருக்கிறது

 

அம்பையின் பின்னால்

உள்ள கதைகளை

தெரிந்து கொள்ள வேண்டும்

என்றால் நாம்

அம்பையின் பின்னால்

சென்று தான்

ஆக வேண்டும்

 

அம்பை சௌபால

நாட்டு மன்னன்

சால்வனைச் சந்திக்க

தேரில் ஏறி சென்று

கொண்டிருக்கிறாள்

நாமும் அம்பையைத்

தொடர்ந்து செல்வோம்

 

நடப்பவைகளை

பார்ப்போம்)

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////



 

 

ஜபம்-பதிவு-695 (சாவேயில்லாத சிகண்டி-29)

 ஜபம்-பதிவு-695

(சாவேயில்லாத

சிகண்டி-29)

 

அம்பை நீ இப்போது

கோபத்துடனும்

உணர்ச்சிவயப்பட்ட

நிலையிலும்

இருப்பதால்

மனம் உன்னை

வழி நடத்துகிறது

இதனால் நீ எடுக்கும்

முடிவு தவறாக

இருக்கிறது

 

பொறுமையுடனும்

நிதானத்துடனும்

இரு

அறிவு உன்னை

வழிநடத்தும்

அதன் பிறகு நீ

எடுக்கும் முடிவு

சரியாக இருக்கும்

 

அம்பை :

எனக்கு

சரியாகத் தெரிவது

உங்களுக்கு

தவறாகத் தெரிகிறது

 

உங்களுக்கு சரியாகத்

தெரிவது

எனக்கு தவறாகத்

தெரிகிறது

 

சரியாகத் தெரிவதும்

தவறாகத் தெரிவதும்

அவரவர் பார்வையைப்

பொறுத்து மாறுபடுகிறது

 

என்னுடைய வாழ்க்கைக்கு

எது நல்லது

எது கெட்டது என்பதைத்

தேர்ந்தெடுக்கும் உரிமை

எனக்குத் தான்

இருக்கிறது

 

உங்களுக்கு இல்லை

 

பீஷ்மர் :

அதைத் தான் தாய்

சத்தியவதியும்

சொன்னார்கள்

 

எது நல்லது

எது கெட்டது

என்பதை ஆராய்ந்து

தன்னுடைய வாழ்க்கைக்கு

எது நல்லது

என்பதைத்

தேர்ந்தெடுக்கும் உரிமை

அம்பைக்கு மட்டும்

தான் இருக்கிறது

 

நமக்கு இல்லை

 

எனவே,

தேர்ந்தெடுக்கும்

உரிமையை

அம்பையிடமே

விட்டு விடுங்கள்

என்றார்

 

அம்பை :

தேர்ந்தெடுக்கும்

உரிமை என்றால்

 

பீஷ்மர் :

உங்கள் வாழ்க்கையை

நீங்களே

தேர்ந்தெடுக்கும் உரிமை

 

தாய் சத்தியவதி

உங்களிடம்

இரண்டு விஷயங்களைச் 

சொல்லச் சொன்னார்கள்

இரண்டில் ஒன்றை

தேர்ந்தெடுக்கும்

உரிமையை

உங்களிடமே

விட்டு விடச்

சொல்லி இருக்கிறார்கள்

 

நீங்கள் எதைத்

தேர்ந்தெடுக்கிறீர்களோ

அதை செயல்படுத்தச்

சொன்னார்கள்

 

முதலாவது

சால்வனை மறந்து

விட்டு விசித்திர

வீர்யனை திருமணம்

செய்து கொள்வதாக

இருந்தால் திருமணம்

செய்து கொள்ளலாம்

 

அம்பை :

இரண்டாவது

 

பீஷ்மர் :

சால்வனை திருமணம்

செய்ய முடிவு எடுத்து

விட்டால் அவரை

வெளியே செல்ல

அனுமதி அளிக்க

வேண்டும்

 

அம்பை :

சால்வனை திருமணம்

செய்ய என்னை

வெளியே அனுப்புங்கள்

அது போதும்

 

பீஷ்மர் :

சால்வன் உன்னை

ஏற்றுக் கொள்வான்

என்று நினைக்கிறாயா

 

அம்பை :

என்னை ஏற்றுக்

கொள்ளாமலா நீங்கள்

என்னை கடத்திக்

கொண்டு வரும் போது

உங்களை

எதிர்த்து சண்டை

போட்டார்

 

பீஷ்மர் :

அது உங்களை

சிறை எடுத்து

வரும் போது

இப்போது

 

அம்பை :

அப்போதும் சரி

இப்போதும் சரி

 

அவர் என்னைத்

தான் விரும்புவார்

 

நீங்கள் என்னைக்

கடத்தி வந்ததால்

என்னை மீட்பதற்காக

அஸ்தினாபுரத்தின் மீது

படையெடுக்க

படைகளைத் தயார்

செய்து கொண்டிருப்பார்

 

பீஷ்மர் :

அறிவு உள்ளவன்

எவனும்

அஸ்தினாபுரத்தின்

மீது படையெடுக்கத்

துணிய மாட்டான்

சால்வன் அறிவுள்ளவன்

என்று நினைக்கிறேன்

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜபம்-பதிவு-694 (சாவேயில்லாத சிகண்டி-28)

 ஜபம்-பதிவு-694

(சாவேயில்லாத

சிகண்டி-28)

 

பீஷ்மர் :

திருமணத்திற்கு

முன்பு காதல் செய்வது

இயல்பான ஒன்று

தான் அதில் தவறில்லை

 

சால்வனை

மறந்துவிட்டு

விசித்திர வீர்யனை

திருமணம் செய்து

கொள்வதாக இருந்தால்

திருமணம் செய்து

கொள்ளுங்கள் என்றேன்

 

சத்தியவதி :

சரியாகத்

தானே சொன்னாய்

 

பீஷ்மர் :

ஆனால்

அம்பை அதை

ஏற்றுக்

கொள்வதாக இல்லை

 

சத்தியவதி :

ஏன்

 

பீஷ்மர் :

காதலில்

விழுந்தவர்களுக்கு

யார் அறிவுரை

சொன்னாலும் பிடிக்காது.

அறிவுரையை

கேட்கவும் மாட்டார்கள்

 

வாழ்க்கையை வாழ்ந்து

அனுபவித்து

முடித்த பிறகு தான்

காதல் எப்படிப்பட்டது

என்பதை புரிந்து

கொள்வார்கள்

 

சத்தியவதி :

சரியாகத் தான்

சொன்னாய்

 

பீஷ்மர் :

இப்போது என்ன

செய்யலாம் தாயே

 

சத்தியவதி :

சால்வனை மறந்து

விட்டு விசித்திர

வீர்யனை திருமணம்

செய்து கொள்ள

விரும்பினால் திருமணம்

நடத்துவதற்கான

அனைத்து

செயல்களையும்

செய்யுங்கள்

 

சால்வனைத் தான்

திருமணம் செய்வேன்

என்று சொன்னால்

வெளியே செல்வதற்கு

அனுமதி அளியுங்கள்

 

இரண்டில் அம்பை

எதை விரும்புகிறாளோ

அதை செய்யுங்கள்

 

மற்ற இரு இளவரசிகள்

 

பீஷ்மர் :

விசித்திர வீர்யனை

திருமணம் செய்து கொள்ள

சம்மதம் தெரிவித்து

விட்டார்கள்

 

சத்தியவதி :

நல்லது

 

நான் சொன்னதை

உடனடியாக

செயல்படுத்து

 

பீஷ்மர் :

அப்படியே ஆகட்டும்

தாயே

 

(பீஷ்மர் தாய்

சத்தியவதியிடம்

விடை பெற்றுக் கொண்டு

அம்பையை

சந்திக்கச் செல்கிறார்)

 

(அம்பை காத்துக்

கொண்டிருக்கும்

அறைக்குள்

பீஷ்மர் உள்ளே

நுழைகிறார்.

பீஷ்மரின் வருகைக்காக

காத்துக் கொண்டிருந்த

அம்பை,

பீஷ்மர் அறைக்குள்

நுழைந்ததும்

பீஷ்மரைப்

பார்க்கிறாள்.

 

பீஷ்மரை நோக்கி

அம்பை பேசத்

தொடங்குகிறார்)

 

அம்பை :

பார்த்தீர்களா

 

பேசினீர்களா

 

சொன்னீர்களா

 

என்ன சொன்னார்கள்

 

ஒத்துக் கொண்டார்களா

 

(அம்பை படபடத்தாள்)

 

பீஷ்மர் :

பொறுமை

அம்பை

பொறுமை

 

பொறுமையுடனும்

நிதானத்துடனும்

செய்யும்

செயல்கள் தான்

வெற்றியில் முடியும்

ஏனென்றால்

அப்போது தான்

அறிவென்பது

செயல்படும்

அறிவு ஒருவரை

சரியாக வழி நடத்தும்

 

ஆனால்

கோபத்தின் போதும்

உணர்ச்சி

வயப்படும் போதும்

செய்யும் செயல்கள்

வெற்றியில் முடியாது

ஏனென்றால்

அப்போது தான்

மனமென்பது செயல்படும்

மனம் ஒருவரை

தவறாக வழி நடத்தும்

 

அறிவு நம்மை

வழி நடத்துகிறதா

அல்லது

மனம் நம்மை

வழி நடத்துகிறதா

என்பதை வேறுபடுத்தி

அறிந்து கொள்ளத்

தெரிந்தவர்கள் தான்

அறிவு வழி

நின்று

செயல்களைச் செய்து

வெற்றி பெறுகின்றனர்

 

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////