February 18, 2022

ஜபம்-பதிவு-685 (சாவேயில்லாத சிகண்டி-19)

 ஜபம்-பதிவு-685

(சாவேயில்லாத

சிகண்டி-19)

 

கணியர் :

காசி நாட்டு மன்னரின்

மூன்றாவது மகள்

அம்பாலிகை

 

இயற்கையை ரசிப்பவர்

இயற்கை அழகில்

கரைந்தவர்

 

இயற்கையின் எழில்களை

ஓவியத்தில் கொண்டு

வருவதில் வல்லவர்

 

ஓவியத்தின் உயர்

நிலைகளைக் கடந்தவர்

 

அவருடைய ஓவியங்கள்

இயற்கையின்

பல்வேறு பரிமாணங்களை

உயிர்ப்பித்துக் காட்டும்

 

இயற்கை

உயிருள்ளதாக

இருக்கிறது

என்பதை

அவருடைய

ஓவியங்கள் காட்டும்

 

பேசாதவைகள் கூட

அவர் கை பட்டு

ஓவியமானால் பேசும்

 

அவருடைய ஓவியத்தில்

உள்ள நீரோடைகள்

உயிர்

பெற்றவைகளாக ஓடும்

 

அவர் எந்த ஒன்றை

ஓவியமாகத் தீட்டினாலும்

அந்த ஒன்று

உயிர்ப்பெற்று

காலம் காலமாய்

இந்த உலகத்தில்

உயிர் வாழும்

 

காசி நாட்டு மன்னரின்

மூன்றாவது மகள்

அம்பாலிகை

வருகிறார்

வருகிறார்

வருகிறார்

 

(இரண்டு கைகளினாலும்

ஒரு

மணமாலையை

பிடித்துக் கொண்டு

இளவரசி அம்பாலிகை

சுயம்வர மண்டபத்திற்குள்

நுழைந்து

அனைவரையும்

இருகரம் கூப்பி

வணங்கி விட்டு

அம்பை

அம்பிகை

ஆகியோர்

அருகில் சென்று

அவர்களுடன்

நின்று கொண்டார்.

 

காசி நாட்டு

மன்னரின்

மூன்று மகள்களும்

தங்களுடைய

கைகளில்

மணமாலைகளை

ஏந்திக் கொண்டு

தங்களுடைய

கணவரை

தேர்ந்தெடுப்பதற்காக

காத்துக்

கொண்டிருந்தனர்.

 

அப்போது

சுயம்வர மண்டபத்திற்குள்

சலசலப்பு எழுந்தது

பீஷ்மர்

பீஷ்மர்

என்ற பெயரை

அனைவருடைய

வாயும் உச்சரித்தது

 

பீஷ்மர் என்ற

சொல்லே அந்த

சுயம்வர மண்டபம்

முழுவதும்

எதிரொலித்தது

 

கழுத்தைத் தாண்டி

தொங்கும்

தலைமுடியைக்

கொண்டவராய்

கறுப்பு முடியும்

வெள்ளை முடியும்

கலந்த தாடியைக்

கொண்டவராய்

தோளில்

அம்பறாத் துணியும்

கைகளில் வில்லும்

கொண்டவராய்

இடுப்பில் வாளைச்

செருகியவராய்

பயணம் செய்ததால்

அழுக்கு அடைந்த

ஆடைகளை

அணிந்தவராய்

சபை நடுவே

வந்து நின்றார்

பீஷ்மர்.

 

சுயம்வரத்திற்கு

வந்தவர்கள்

பீஷ்மரைப் பார்த்து

ஏளனம் செய்யும்

வகையில் பேசினர்)

 

மன்னர் 1 :

பீஷ்மர் வழி தவறி

வந்து விட்டாரா

 

மன்னர் 2 :

இல்லை அவர்

சரியான வழியைப்

பார்த்துத் தான்

வந்திருக்கிறார்

 

மன்னர் 3 :

சுயம்வர மண்டபம்

என்று தெரிந்து

தான் வந்திருக்கிறார்

சுயம்வரத்தில் கலந்து

கொள்வதற்காக

 

மன்னர் 4 :

அழகான பெண்களைக்

கண்டதும்

தான் பிரம்மச்சாரி

என்பதை

மறந்து விட்டார்

போலும்

 

மன்னர் 5 :

தான் மேற்கொண்ட

சபதத்தை

அஸ்தினாபுரத்திலேயே

விட்டு விட்டு

வந்து விட்டார்

என்று நினைக்கிறேன்

 

மன்னர் 6 :

அழகான பெண்களைக்

காணும் வரை தான்

பிரம்மச்சரியத்தைக்

கடை பிடித்திருக்கிறார்

அழகான பெண்களைக்

கண்டதும்

பிரம்மச்சரியத்தைக்

கைவிட்டு விட்டார்

போலும்

 

(பீஷ்மர் தன் மேல்

விழுந்த

வார்த்தைகளைக்

கேட்டு விட்டு

காசி மன்னர்

பீமதேவனை நோக்கி

பேசலானார்)

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////



No comments:

Post a Comment