February 18, 2022

ஜபம்-பதிவு-687 (சாவேயில்லாத சிகண்டி-21)

 ஜபம்-பதிவு-687

(சாவேயில்லாத

சிகண்டி-21)

 

பீஷ்மர் :

நான் முறையற்று

வரவில்லை

 

நீங்கள் முறையற்று

நடந்து இருந்தாலும்

நான் முறையான

செயலைத் தான்

செய்ய வந்திருக்கிறேன்

 

பீமதேவன் :

எதை முறையுள்ள

செயல் என்கிறீர்கள்

 

பீஷ்மர் :

என் தம்பி

விசித்திர வீர்யனுக்காக

உங்கள் மூன்று

பெண்களை

திருமணம்

செய்து வைக்க

வேண்டும் என்பதற்காக

 

திருமண

முறைகளில் ஒன்றான

இராட்சசம்

என்ற முறையில்

மூன்று

இளவரசிகளையும்

சிறையெடுத்துச்

செல்ல வந்திருக்கிறேன்

 

பீமதேவன் :

இது தான்

முறையுள்ள செயலா

 

பீஷ்மர் :

நீங்கள் முறையாக

அழைத்து இருந்தால்

முறையாக மூன்று

இளவரசிகளையும்

அழைத்து சென்றிருப்பேன்

 

நீங்கள் முறையற்று

நடந்து இருந்ததால்

நீங்கள் முறையற்றதாக

நினைத்து கொண்டிருக்கும்

முறையுள்ள

செயல் மூலம்

மூனறு

இளவரசிகளையும்

அழைத்துச்

செல்ல இருக்கிறேன்

 

பீமதேவன் :

அப்படி என்றால்

 

பீஷ்மர் :

உங்கள் மூன்று

பெண்களையும்

சிறை எடுத்து

அஸ்தினாபுரம் கொண்டு

செல்ல வந்திருக்கிறேன்

 

(காசி நாட்டு

மன்னன் பீமதேவன்,

சுயம்வரத்திற்கு

வந்திருக்கும் அரசர்கள்

மற்றும் அனைவருக்கும்

பீஷ்மர் அறைகூவல்

விடுக்கிறார்)

 

பீஷ்மர் :

இனி

இங்கு நடைபெறப்போவது

சுயம்வரம் கிடையாது

எட்டு வகை

திருமணங்களில்

ஒன்றான

ராட்சசம்

 

ஆமாம்

கன்யையின்

பந்துக்களையும்,

காவலாளிகளையும்

யுத்தத்தில் சிதறடித்து

அவளைப்

பலாத்காரமாய்

கொண்டு போகும்

ராட்சசம் என்ற

திருமண முறை

தான் இங்கு இனி

நடைபெறப் போகிறது

 

ஆமாம்

காசி நாட்டு மன்னன்

பீமதேவனின் மூன்று

பெண்களையும்

என்னுடைய தம்பி

விசித்திரவீர்யனுக்கு

மனைவியாக்கி

அஸ்தினாபுத்தின்

அரசியாக்க

சிறை எடுத்து

செல்ல இருக்கிறேன்.

 

அரசே நீங்களோ

உங்கள் படைகளோ

என்னைத் தடுக்க

நினைத்தால் தடுக்கலாம்

இங்கிருக்கும் யார்

வேண்டுமானாலும்

என்னைத் தடுக்கலாம்

என்னை தடுக்க

நினைப்பவர்கள்

யாராக இருந்தாலும்

தடுக்கலாம்

என்னைத் தடுக்க

நினைக்கும் தைரியம்

யாருக்கு இருக்கிறதோ

அவர்கள் தடுக்கலாம்

 

(பீஷ்மர் பேச்சைக் கேட்டு

சுயம்வர மண்டபத்தில்

இருந்த அனைவரும்

கொதித்தெழுந்து

பீஷ்மரை எதிர்ப்பதற்காக

தங்கள் கைகளில்

வாளை ஏந்திக் கொண்டு

பீஷ்மர் முன்னால்

பாய்ந்தனர்.

 

பீஷ்மரின் வில்லில்

இருந்து புறப்பட்ட

அம்பு

 

அவரைத் தாக்க

வந்தவர்களை

காயம் பட்டு கீழே

விழச்செய்தது

 

வாள் ஏந்திய

கைகளின் இரத்தத்தை

சுவைத்துப் பார்த்தது

 

பலருக்கு ஆற

முடியாத காயங்களை

அளித்து விட்டுச்

சென்றது

 

பீஷ்மரின்

அம்பு மழையின்

தாக்கத்தைத் தாங்க

முடியாமல் பீஷ்மரை

எதிர்த்தவர்கள்

அனைவரும் போய்

ஒளிந்து கொண்டனர்

 

பீஷ்மரின் வில்லில்

இருந்து புறப்பட்ட

அம்பானது அவரை

எதிர்த்து நின்றவர்கள்

அனைவரையும்

பதம்பார்த்தது

 

----------- ஜபம் இன்னும் வரும்

-------------எழுத்தாளர்

----------- K.பாலகங்காதரன்

 

-------------18-02-2022

-------------வெள்ளிக் கிழமை

/////////////////////////////////

No comments:

Post a Comment