April 03, 2020

பரம்பொருள்-பதிவு-176

                   ஜபம்-பதிவு-424
                        (பரம்பொருள்-176)

(சூரிய பகவானும்
சந்திர பகவானும்
அந்த இடத்தை
விட்டு சென்ற
பிறகு கிருஷ்ணன்
புரோகிதரை சந்தித்து
பேசத் தொடங்கினார்)

கிருஷ்ணன்  :
“நான் எந்த செயலை
நடத்த வேண்டும் என்று
நினைத்திருந்தேனோ
அந்த செயல்
நல்லபடியாக
நடந்து விட்டது  

“நாம் எந்த செயலை
முடிக்க வேண்டும்
என்பதற்காக - இங்கே
கூடியிருந்தோமோ
அந்த செயல்
நினைத்ததை விட
அற்புதமாக
முடிந்து விட்டது “

“எது நடக்க
வேண்டும் என்று
நினைத்திருந்தேனோ
அது நடந்து விட்டது ;
எதை முடிக்க
வேண்டும் என்று
நினைத்திருந்தோமோ
அது முடிந்து விட்டது ; “

“ஆமாம்
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் ;
ஆமாம்
இன்றைய
சதுர்த்தசி திதி
அமாவாசையாக
மாறி விட்டது ; “

புரோகிதர் :
“என்னது
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டீர்களா ? “

கிருஷ்ணன்  :
“ஆமாம்
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் ;
சதுர்த்தசி திதியாக
இருந்த
இன்றைய தினத்தை
அமாவாசையாக
மாற்றி விட்டேன் ;
இப்போது
சதுர்த்தசி திதி
முடிந்து விட்டது ;
அமாவாசை
ஆரம்பித்து விட்டது ;
அமாவாசை
தற்போது நடந்து
கொண்டிருக்கிறது ;”

“எதற்காக
சதுர்த்தசி திதியை
அமாவாசையாக
மாற்றினேனோ
அந்த செயலை
செய்வதற்குரிய நேரம்
நெருங்கி விட்டது “

“அமாவாசை சென்று
கொண்டிருக்கிறது  

“எனக்காக மிக
முக்கியமான ஒரு செயல்
காத்துக் கொண்டிருக்கிறது  

“நான் உடனே
செல்ல வேண்டும் “

புரோகிதர் :
“நீங்கள் முக்கியமான
செயல் என்று சொல்வது
அரவானை களப்பலி
கொடுப்பதைப் பற்றி தானே “

கிருஷ்ணன் :
“ஆமாம் அதைத்
தான் சொல்கிறேன் ;
அரவானைக் களப்பலி
கொடுப்பதைப் பற்றித்
தான் சொல்கிறேன் ; “

“அரவானை களப்பலியாகக்
கொடுப்பதற்குரிய நேரம்
நெருங்கிக் கொண்டிருக்கிறது “

புரோகிதர்  :
“அரவானை களப்பலியாக
கொடுப்பதற்குரிய அனைத்து
வேலைகளையும் செய்து
முடித்து விட்டீர்களா ? “

கிருஷ்ணன்  ;
“அரவானைக்
களப்பலியாக கொடுப்பதற்கு
தேவையான அனைத்து
ஏற்பாடுகளையும் செய்யுமாறு
பாண்டவர்களிடம் சொல்லி
விட்டு வந்திருக்கிறேன் “

“காளி தேவி
சிலையின் முன்னால்
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கு தேவையான
அனைத்து ஏற்பாடுகளையும்
பாண்டவர்கள்
செய்து இருப்பார்கள் “

“அனைத்து
ஏற்பாடுகளையும் செய்து
முடித்து விட்டு
எனக்காகக் காத்துக்
கொண்டிருப்பார்கள் “

“நான் சென்றால் தான்
அரவானைக் களப்பலியாகக்
கொடுப்பதற்கான
வேலையைச் செய்ய
முடியும் - அதனால்
நான் செல்ல வேண்டிய
நேரம் நெருங்கி விட்டது “

“நான் உங்களிடமிருந்து
விடை பெறுகிறேன் “

“இங்கே நீங்கள்
இருந்து கொண்டு
அமாவாசையன்று
செய்ய வேண்டிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
தொடர்ந்து செய்து
கொண்டிருங்கள்  

(என்று சொல்லி விட்டு
அரவானைக்
களப்பலியாகக்
கொடுப்பதற்கு
தேர்ந்தெடுத்த இடத்தை
நோக்கி சென்று
கொண்டிருந்தார்
கிருஷ்ணன்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-175


              ஜபம்-பதிவு-423
            (பரம்பொருள்-175)

சந்திர பகவான்  :
“சந்திரனாகிய நானும்
சூரியனாகிய இவரும்
நாளை தான்
சந்திக்கிறோம்
அப்படி என்றால்
நாளை தானே
அமாவாசை “

கிருஷ்ணன் :
“நீங்கள் சொல்வது
எனக்கு புரியவில்லை
இன்னும் கொஞ்சம்
விளக்கமாக
சொல்லுங்கள் “

சந்திர பகவான் :
“சந்திரனாகிய நானும்
சூரியனாகிய இவரும்
நாளை தானே
நேருக்கு நேராக
சந்திக்கும் நாள் ;
அப்போது தானே
பூலோகத்தில்
அமாவாசை
ஏற்படுகிறது ;
அப்போது தானே
என்னுடைய நிழல்
பூலோகத்தில்
படாமல் இருக்கக்
கூடிய காலம் ; “

“அதனால் தான்
சொல்கிறேன்
நாளை தான்
அமாவாசை என்று “

கிருஷ்ணன்  :
“இல்லை இன்று
தான் அமாவாசை “

சந்திர பகவான்  :
“ஏன் இவ்வாறு
சொன்னதையே
திரும்ப
திரும்பச்
சொல்கிறீர்கள் “

கிருஷ்ணன்  :
“சூரிய பகவானும்
சந்திர பகவானும்
நேருக்கு நேராக
சந்திக்கும் போது
தானே அமாவாசை
ஏற்படுகிறது
என்கிறீர்கள் “

சந்திர பகவான்  :
“ஆமாம் !
அதைத் தான்
அமாவாசை
என்கிறோம் “

கிருஷ்ணன்  :
“நான் அதை
மறுக்கவே
இல்லையே “

“சந்திர பகவானாகிய
நீங்களும்
சூரிய பகவானாகிய
அவரும்
ஒருவொருக்கொருவர்
நேருக்கு நேராக
இப்போது
சந்தித்துக்
கொண்டு தானே
இருக்கிறீர்கள் “

(என்று பேசிக்
கொண்டே
சூரிய பகவானையும்
சந்திர பகவானையும்
பார்த்தார்
கிருஷ்ணன்  ;

சூரிய பகவானும்
சந்திர பகவானும்
நேருக்கு நேராக
நின்று கொண்டு
ஒருவரையொருவர்
பார்த்துக்
கொண்டிருந்தார்கள் ;
கிருஷ்ணன்
தன்னுடைய
பேச்சைத் தொடர்ந்தார்)

“அப்படி என்றால்
இன்று தானே
அமாவாசை “

“அதனால் தான்
சொன்னேன்
இன்று தான்
அமாவாசை என்று “

“அதனால்
தான் நான்
அமாவாசையன்று
அமாவாசைக்குரிய
அனைத்து ஆன்மீக
விஷயங்களையும்
செய்து
கொண்டிருக்கிறேன் “

“நான் எந்த
தவறான
செயலையும்
செய்யவில்லை “

“சரியான
செயலைத்
தான் செய்து
கொண்டிருக்கிறேன் “

(என்று கிருஷ்ணன்
சூரிய பகவானையும்
சந்திர பகவானையும்
பார்த்தார்)

“நீங்கள் இருவரும்
ஒருவரையொருவர்
இப்படி பார்த்துக்
கொண்டிருப்பதால்
ஒரு பயனும்
இல்லை  ;
இன்றைய
சதுர்த்தசி திதி தான்
அமாவாசையாக
மாறி விட்டதே !

“இன்று தான்
அமாவாசை
உண்டாகி விட்டதே “

“இன்று
நடைபெற
துவங்கி விட்ட
அமாவாசையை
யாராலும்
மாற்ற முடியாதே “

(சூரிய பகவானும்
சந்திர பகவானும்
ஒருவரையொருவர்
பார்த்துக் கொண்டு
என்ன செய்வது
என்று  தெரியாமல்
அங்கிருந்து
சென்று விட்டனர்)

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-04-2020
//////////////////////////////////////////

பரம்பொருள்-பதிவு-174


               ஜபம்-பதிவு-422
             (பரம்பொருள்-174)

(சூரிய பகவானும்
சந்திர பகவானும்
கிருஷ்ணனை
சந்தித்து
தங்களுடைய
சந்தேகத்தை
நிவர்த்தி
செய்வதற்காக
பூலோகம் வந்தனர்

ஆற்றின் கரையில்
அமர்ந்து மந்திரங்கள்
சொல்லிக் கொண்டு
இருந்த கிருஷ்ணனை
தனியாக அழைத்து
கிருஷ்ணனிடம்
பேசத் தொடங்கினர் )

கிருஷ்ணன்  :
“சூரிய பகவானும்
சந்திர பகவானும்
என்னை சந்திக்க
இவ்வளவு
தொலைவு
வந்திருக்கிறீர்களா
என்னுடைய
வணக்கத்தை
ஏற்றுக் கொள்ளுங்கள் “

சூரிய பகவான்  :
“நீங்கள்
என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள் ? “

கிருஷ்ணன் :
“நான் என்ன செய்து
கொண்டிருக்கிறேன்
என்று எனக்குத்
தெரிகிறது - ஏன்
உங்களுக்கு
தெரியவில்லையா ? “

சந்திர பகவான்  :
“எங்களுக்கு
தெரிகிறது - ஆனால்
நீங்கள் செய்யும்
செயல்கள்
உங்களுக்கு
சரியானதாகத்
தெரிகிறதா ? “

கிருஷ்ணன்  :
“எனக்கு
சரியானதாகத்
தெரிந்ததால்
தானே செய்து
கொண்டிருக்கிறேன் “

சூரிய பகவான்  :
“எதை சரி
என்கிறீர்கள் ? “

கிருஷ்ணன்  :
“நான்
செய்வதைத் தான்
சரி என்கிறேன் “

சூரிய பகவான்  :
“சரியில்லாத ஒரு
விஷயத்தை
செய்து கொண்டு
நீங்கள் செய்வதை
எப்படி சரி
என்கிறீர்கள் “

கிருஷ்ணன்  :
“சரியானதை
சரி என்று
சொல்லாமல் வேறு
எப்படி சொல்ல
வேண்டும்
என்கிறீர்கள்  

சந்திர பகவான்  :
“இன்று
சதுர்த்தசி திதி !
நாளை தானே
அமாவாசை !
அப்படி
இருக்கும் போது
சதுர்த்தசி திதியான
இன்று
அமாவாசையன்று
செய்யக்கூடிய
அனைத்து
ஆன்மீக
விஷயங்களையும்
ஏன் செய்கிறீர்கள் “

“நீங்கள் செய்யும்
தவறான செயலைப்
பார்த்து
அனைவரும்
தவறு செய்து
கொண்டிருக்கிறார்கள் “

“நீங்கள்
நிறுத்தினால் தான்
அனைவரும்
நிறுத்துவார்கள் “

“நீங்கள்
அனைத்தையும்
உடனே
நிறுத்துங்கள் “

கிருஷ்ணன்  :
“நான் ஏன்
நிறுத்த வேண்டும் ;
இன்று தானே
அமாவாசை ;
இன்று
அமாவாசையாக
இருக்கின்ற
காரணத்தினால் தானே
அமவாசையன்று
செய்யக் கூடிய
அனைத்து
ஆன்மீக
விஷயங்களையும்
நான் இன்று செய்து
கொண்டிருக்கிறேன் “

“நான் ஒன்றும் தவறு
செய்யவில்லையே
தவறு செய்தால்
தானே நிறுத்த
வேண்டும் “

சந்திர பகவான்  :
“இல்லை நீங்கள்
சொல்வது தவறு
நாளை தான்
அமாவாசை “

கிருஷ்ணன்  :
“எதை வைத்து
நாளை அமாவாசை
என்கிறீர்கள்  ? “

----------- ஜபம் இன்னும் வரும்

----------- K.பாலகங்காதரன்
----------- 03-04-2020
//////////////////////////////////////////