May 25, 2018

நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 11


             நம் முன்னோர்கள் புத்திசாலிகள்-பதிவு- 11

நோயினால் பாதிக்கப்பட்ட
கிராமத்திலிருந்து
நோயினால் பாதிக்கப்படாத
கிராமத்தை
தனிமைப்படுத்துவதற்காக
பயன்படுத்தப்படும்
பொருள் வேப்பிலை

அனைத்து வகை
மூலிகைகளையும்
எடுத்துக் கொண்டால்
மூலிகை வகைகளிலேயே
அனைத்து வகை
நோய்களையும் தீர்க்கக்கூடிய
சக்தி வாய்ந்த
ஒரு மூலிகை
உண்டு என்றால்
அது வேப்பமரம் 
மட்டும் தான்

வேப்பமரத்தின்
உச்சி முதல்
அடி நுனிவேர் வரை
உள்ள பகுதிகள்
அனைத்தும்
மருத்துவ குணம்
கொண்டதாகும்

அதாவது
வேப்பமரத்தில் உள்ள
வேப்பிலை, பூ,
காய், பழம்,
கொட்டை, கட்டை
ஆகிய அனைத்தும்
மருத்துவத்திற்கு
பயன்படுவதால்
வேப்பமரத்தை
ஒரு சர்வரோக நிவாரணி
என்று கூறுகிறோம்

சர்வம் என்றால்
அனைத்தும் என்று பொருள்
ரோகம் என்றால்
நோய் என்று பொருள்
நிவாரணி என்றால்
தீர்க்கக் கூடியது
என்று பொருள்
சர்வரோக நிவாரணி
என்றால்
அனைத்து வகையான
நோய்களையும்
தீர்க்கக் கூடியது
என்று பொருள்

அதில் வேப்பிலை
அதிக முக்கியத்துவம்
கொண்டது

வேப்பிலைக்கு
நோயைத் தீர்க்கக்
கூடிய சக்தி உண்டு
மேலும் நோய்
பரவ விடாமல்
தடுக்கும் சக்தியும்
வேப்பிலைக்கு
உண்டு

இதனை உணர்ந்த
நம் முன்னோர்கள்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
நோய் ஏற்டாத
தங்கள்
கிராமத்தில் உள்ள
மக்களுக்கு
நோய்த் தாக்குதல்
ஏற்படாத வண்ணம்
இருக்க வேண்டும்
என்பதற்காக
வேப்பிலையை
ஊரைச் சுற்றி உள்ள
எல்லை முழுவதும்
கட்டி வைத்தனர்

மேலும்
வேப்பிலையை
வீட்டைச் சுற்றி
இருக்கும் இடத்திலும்
வீட்டு வாசலிலும்
வீட்டின் பின்புறத்தில்
உள்ள இடத்திலும்
எங்கு எங்கு
வீட்டைச் சுற்றி
இடம் இருக்கிறதோ
அங்கெல்லாம்
வேப்பிலையை
கட்டி வைத்தனர்

இதன் மூலம்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
வேப்பிலையின் மூலம்
நோய் ஏற்படாத
கிராமத்தை
நோய்க் கிருமிகள்
தாக்காதவாறு
மக்களை காப்பாற்றினர்
நம் முன்னோர்கள்

வேப்பிலையை
ஊரைச் சுற்றியும்
வீட்டைச் சுற்றியும்
கட்டுவது என்பது
நோய்க் கிருமிகள்
ஊருக்குள் வரவிடாமல்
தடுப்பதற்கும்
நோய் கிருமிகளை
அழிப்பதற்கும்
நோய் பரவாமல்
தடுப்பதற்கும்
பயன்படுத்தும்
முறை ஆகும்

இதை தான்
காப்பு கட்டுதல்
என்கிறோம்

நோய்க் கிருமிகளை
ஊருக்குள் வர விடாமல்
தடுத்து விட்டோம்

அடுத்து
ஊரில் உள்ளவர்கள்
வெளியூர் சென்று விட்டு
மீண்டும்
ஊருக்குள் வந்தால்
நோய்த் தொற்று
ஏற்பட வாய்ப்பு
இருக்கிறது
என்ற காரத்தினால்
காப்பு கட்டி விட்டால்
ஊரில் உள்ளவர்கள்
ஊரை விட்டு
வெளியே செல்லக்கூடாது
என்றும்
வெளியூரை சேர்ந்த
ஊர்க்காரர்கள்
ஊருக்குள் வரக்கூடாது
என்றும் கூறினர்

இதன் மூலம்
நோய் ஏற்பட்ட
கிராமத்திலிருந்து
நோய்த் தொற்று
ஏற்படாமல்
தங்கள் ஊரில் உள்ள
மக்களை காப்பாற்றிய
நம் முன்னோர்கள்
புத்திசாலிகள்

--------- இன்னும் வரும்
///////////////////////////////////////////////